Just In
- 31 min ago
திரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை!
- 1 hr ago
50ஜிபி போனஸ் டேட்டா வழங்கிய வோடபோன் ஐடியா.! எந்த திட்டத்தில் தெரியுமா?
- 2 hrs ago
களமிறங்கிய FAUG விளையாட்டு: எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடுவது?- எளிய வழிமுறைகள்!
- 2 hrs ago
விரைவில் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 9.!
Don't Miss
- Sports
6 பேரை ரிலீஸ் செய்து.. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிகிட்டோமே.. புலம்பும் சிஎஸ்கே.. வைக்கப்பட்ட செக்!
- News
ம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்!
- Finance
உச்சத்தை தொட்ட வேகத்தில் சரிந்த எதிரியம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..!
- Movies
கையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிரம்ப் அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கப்போகும் சீறிப்பாயும் அதிநவீன ஆயுதங்கள் இதுதான்.!
ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை (Integrated Air Defence Weapon System - IADWS) இந்தியாவுக்கு விற்பனை செய்ய டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம், அமெரிக்கக் காங்கிரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா என்ன, என்ன அதிநவீன ஆயுதங்களை வாங்கப் போகிறது என்ற பட்டியலைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அமெரிக்காவிடமிருந்து ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு
இந்தியா தனது ஆயுதப்படைகளை நவீனமயமாக்குவதற்கும், வான் தாக்குதல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதன் தற்போதைய வான் பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் ஒரு ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை அமெரிக்காவிடம் இருந்து வாங்கத் திட்டமிட்டு, அதற்கான பேச்சுவார்த்தையையும் அண்மையில் நடத்தியது.

டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஒப்புதல்
அதனைத் தொடர்ந்து டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம், இந்தியாவுக்கு அதன் அதிநவீன ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முழு வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பையும் அமெரிக்காவிடமிருந்து இந்தியா 1.867 டாலர் செலவில் வாங்கவுள்ளது. இதற்கான ஒப்புதல் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.
Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகை
இந்த ஒப்புதலுக்கான உத்தரவை டிரம்ப் நிர்வாகம், அமெரிக்கக் காங்கிரசுக்கு வழங்குமாறு அறிவித்துள்ளது என்று பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாகவே இந்த ஒப்புதல் செய்தி வெளியாகியுள்ளது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு
பிப்ரவரி 23 முதல் 26 வரை இரண்டு நாள் பயணத்தில் டிரம்ப் இந்தியாவுக்கு வருகைதருகிறார், இதற்கான முழு பாதுகாப்பது மற்றும் கால அட்டவணையைச் சிறப்பாக வடிவமைக்கும் பணியில் இரண்டு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாகப் புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருகையின் போது கூடுதல் ஒப்புதல்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!

அதிகாரப்பூர்வ ஒப்புதலும் கையெழுத்திடப்படும்
டிரம்பின் இந்த திட்டமிட்ட இந்தியப் பயணத்தின் போது, இந்தியாவும் அமெரிக்காவும் தனது வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பிற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலும் கையெழுத்திடப்பட்டு, உறுதி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கப் போகும் ஆயுதங்களின் பட்டியல் விபரம்
- ஒரு, IADWS வாங்குமாறு அமெரிக்காவிடம் கோரியிருந்தது.
- அதேபோல் ஐந்து, AN / MPQ-64Fl சென்டினல் ரேடார் அமைப்பு
- நூற்றிபதினெட்டு, AMRAAM AIM-120C-7 / C-8 ஏவுகணைகள்
- மூன்று, AMRAAM கைடன்ஸ் செக்ஷன்
- நான்கு, AMRAAM கட்டுப்பாட்டு பிரிவுகள் மற்றும்
- நூற்றிமுப்பத்தி நான்கு, Stinger FIM-92L ஏவுகணைகள்
Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!

கூடுதல் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள்
- முப்பத்திரண்டு, M4A1 துப்பாக்கிகள்
- M855 5.56mm தோட்டாக்கள்
- ஃபையர் டிஸ்ட்ரிபியூஷன் சென்டர்ஸ் (Fire Distribution Centers - FDC)
- ஹேண்டில்ட் ரிமோட் டெர்மினல்ஸ் (Handheld Remote Terminals)
- மின் ஆப்டிகல் / இன்ஃபிராரெட் (EO / IR) சென்சார் அமைப்புகள் (Electrical Optical/Infrared (EO/IR) Sensor Systems)

ஏர்போர்ன் யூனிட்ஸ் மற்றும் லாஞ்சர்கள்
- AMRAAM நாண்டிவெலப்மென்ட் ஐட்டம் ஏர்போர்ன் இன்ஸ்ட்ருமென்டேஷன் யூனிட்ஸ் (AMRAAM Non-Developmental Item-Airborne Instrumentation Units - NDIAIU)
- மல்டி ஸ்பெக்ட்ரல் டார்கெட்டிங் சிஸ்டம்-மாடல் ஏ (Multi-spectral Targeting System-Model A (MTS-A)
- கேனிஸ்டர் லாஞ்சர் (Canister Launchers - CN)
- ஹை-மொபிலிட்டி லாஞ்சர் (High Mobility Launchers - HML)
Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்

இந்த ஒட்டுமொத்த ஆயுதங்களையும் இந்தியா வாங்குகிறது
- டூயல் மவுண்ட் ஸ்டிங்கர் ஏர் டிபென்ஸ் சிஸ்டம் (Dual Mount Stinger (DMS) Air Defence Systems)
- வாகன மவுண்ட் ஸ்டிங்கர் ரேப்பிட் ரேஞ்சர் ஏர் டிபென்ஸ் சிஸ்டம் (Vehicle Mounted Stinger Rapid Ranger Air Defence Systems) போன்ற ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து இந்த ஒப்புதலின் கீழ் இந்தியா வாங்கவுள்ளது.

அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தும்
இந்த முன்மொழியப்பட்ட விற்பனை அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தவும், பெரிய தற்காப்பு கூட்டு பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவுவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பை ஆதரிக்கும்; அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, மற்றும் இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசியா பகுதியில் பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றை அடக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190