மிரளுது சவுண்ட்.. 80 மணிநேர பிளேபேக் நேரம்.. 13mm டைட்டானியம் டிரைவர்.. குறைந்த விலையில் Truke Clarity Six..
ட்ருக் (Truke) நிறுவனம் புதிதாக ட்ருக் கிளாரிட்டி சிக்ஸ் (Truke Clarity Six) என்ற TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 2023 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ட்ருக் கிளாரிட்டி ஃபைவ் (Truke Clarity 5) வாரிசாக வெளிவந்துள்ளது.
இந்த புதிய இன்-இயர் இயர்பட்ஸ் சாதனம் 13mm டைட்டானியம் டிரைவர் (13 mm Titanium drivers) உடன் வருகிறது. இது சிக்ஸ் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்துடன் (Six Mic Environmental Noise Cancellation Technology) இயங்குகிறது. இது மிகவும் துல்லியமான வாய்ஸ் கால் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ட்ருக் கிளாரிட்டி சிக்ஸ் (Truke Clarity Six) பற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.

ட்ருக் கிளாரிட்டி சிக்ஸ் (Truke Clarity Six):
இது நம்மை ஆச்சரியப்படுத்தும் 80 மணிநேர மொத்த பிளேபேக் நேரத்தை (total playtime of 80 hours) வழங்குகிறது. இந்த ட்ருக் கிளாரிட்டி சிக்ஸ் (Truke Clarity Six) பயனர்கள் 3 விதமான ஈக்வலைசர் மோட் செட்டிங் மூலம் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்த அனுமதிக்கிறது. இது ஒரே நேரத்தில் 2 சாதனங்களில் இணைக்க உதவும் டூயல் கனெக்டிவிட்டி (Dual connectivity) அம்சத்துடன் வருகிறது.
இந்த புதிய ட்ருக் கிளாரிட்டி சிக்ஸ் (Truke Clarity Six) சாதனம் 35ms லோ-லேடன்சி மோட் உடன் (low-latency mode) கேமிங் அனுபவத்தை (Gaming experience) சிறப்பாக்கியுள்ளது. இந்த TWS இயர்பட்ஸ் சாதனம் குறைந்த விலையில் மிகவும் அற்புதமான அம்சங்களை பேக் செய்துள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறதென்று இப்போது பார்க்கலாமா?
ட்ருக் கிளாரிட்டி சிக்ஸ் சிறப்பம்சம் (Truke Clarity Six Specifications):இயர்பட்ஸ் சாதனம் உண்மையான TWS சாதனமாக வருகிறது.
- 13mm டைட்டானியம் டிரைவர்ஸ் (13mm Titanium drivers)
- 35ms அல்ட்ரா லோ-லேடன்சி (35ms Ultra Low Latency Game mode)
- சிக்ஸ் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Six-Mic Advanced Environmental Noise Cancellation)
- ப்ரீஸ்ட் 3 EQ மோட் (Preset 3 EQ Modes)
- டைனமிக், மூவி, பாஸ் பூஸ்ட் மோட் (Dynamic, Movie and Bass Boost Mode)
- டூயல் கனெக்டிவிட்டி (Dual connectivity)
- ப்ளூடூத் v5.3 (Bluetooth: v5.3)

- பேட்டரி
- 80 மணிநேர மொத்த பிளேபேக் நேரம் (80h Total Playback time)
- 10 மணி நேர சிங்கிள் சார்ஜ் நேரம் (10 hrs of playtime on Single charge)
- டைப்-சி பாஸ்ட் சார்ஜிங் (Type-C, Fast charging)
- டச் கண்ட்ரோல் (Touch controls)
- வாய்ஸ் அஸ்சிஸ்டனட் சப்போர்ட் (Voice assistant support)
இதை ரூ.1299 என்ற விலையில், பிளாக் நிறத்தில் 1 வருட வாரன்டி உடன் வருகிறது. இது வரும் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon.in) வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கும். குறைந்த விலையில் பெஸ்டனா TWS அனுபவம் வேண்டுமா? இந்த சாதனத்தை யோசிக்காமல் வாங்கி பயன்பெறுங்கள்.


Click it and Unblock the Notifications








