80 மணி நேர பிளேபேக்.. அதிரவிடும் சவுண்ட்.. விலை வெறும் ரூ.1499 மட்டுமே.. எங்கே வாங்கினால் இந்த விலை?
ட்ருக்கே (Truke) நிறுவனம் அதன் ஆடியோ கேட்ஜெட்ஸ் சாதனத்தின் வரிசையில், புதிய TWS இயர்பட்ஸ் சாதனமான ட்ருக்கே கிளாரிட்டி 5 (Truke Clarity 5) என்ற சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 80 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, ட்ருக்கே நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ட்ருக்கே பிடிஜி நியோ (Truke BTG Neo) அறிமுகத்திற்குப் பிறகு இது வருகிறது. இந்த புதிய ட்ருக்கே கிளாரிட்டி 5 (Truke Clarity 5) இயர்பட்ஸ் சாதனம் 13 மிமீ டைட்டானியம் டிரைவர்களை (13mm titanium driver) கொண்ட இன்-இயர் பாணியிலான இயர்பட்களை கொண்டுள்ளது.

இது 6 மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தால் (Six Mic Environmental Noise Cancellation Technology) இயக்கப்படுகிறது. இதனால், மேம்பட்ட அழைப்புத் தரத்தை வழங்குகிறது. இது மொத்தம் 80 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. ட்ருக்கே கிளாரிட்டி 5 இயர்பட்ஸ் சாதனத்தை பயன்படுத்தும் பயனர்கள், தங்கள் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்த மூன்று ஈக்குவலைஸர் முறைகள் (3 equaliser mode) மூலம் கட்டுப்படுத்தலாம்.
கூடுதலாக, இந்த புதிய ட்ருக்கே கிளாரிட்டி 5 இயர்பட்ஸ் சாதனம் டூயல் இணைப்பு (dual connectivity) அம்சத்தை கொண்டுள்ளது. அதாவது, இது டூயல் கனெக்டிவிட்டி அம்சத்தை ஆதரிக்கிறது. இது பயனர்களை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் எளிதாக இணைக்க அனுமதிக்கிறது. இது உண்மையில் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பிரத்தியேக அம்சமாகும்.
ட்ருக்கே கிளாரிட்டி 5 இயர்பட்ஸ் சாதனத்தில் கூடுதல் வசதிக்காக IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (water resistance) மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இந்த ட்ரூக்கே கிளாரிட்டி 5 இயர்பட்ஸ் சாதனத்தின் சிறப்பம்ச விபரங்களை பற்றி பார்க்கையில், இது ட்ரூலி வயர்லெஸ் இன்-இயர் ஆடியோ சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 13 மிமீ டைட்டானியம் டிரைவர்கள் மூலம் இயங்குகிறது.
இது 35எம்எஸ் அல்ட்ரா லோ லேட்டன்சி (35ms Ultra Low Latency) அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது கேமர் மோட் (Gamer mode) உடன் கேமர்களுக்கு தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இது ஆறு மைக் கொண்ட என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்தை கொண்டுள்ளது. இது முன்னமைக்கப்பட்ட 3 EQ முறைகளை கொண்டுள்ளது. இது டூயல் இணைப்பு அம்சத்தை ஆதரிக்கிறது.

இந்த டூயல் இணைப்பு அம்சம் ஒரே நேரத்தில் 2 சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கிறது. இது புளூடூத் v5.3 (Bluetooth: v5.3) என்ற லேட்டஸ்ட் ப்ளூடூத் இணைப்பு அம்சத்துடன் வருகிறது. இது உடனே சந்தானத்துடன் இணையும் இன்ஸ்டன்ட் பேரிங் (Instant paring) அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரி (Battery) ஆயுள் 80 மணி நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ட்ருக்கே கிளாரிட்டி 5 இயர்பட்ஸ் சாதனத்தின் ஒட்டுமொத்த பிளே பேக் நேரமாகும்.
ட்ருக்கே கிளாரிட்டி 5 சாதனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பயன்படுத்தலாம். இது டைப் -சி (Type-c charging port) சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இது பாஸ்ட் சார்ஜிங் (Fast charging) அம்சத்தையும் வழங்குகிறது. ட்ருக்கே கிளாரிட்டி 5 இயர்பட்ஸ் சாதனம் டச் கண்ட்ரோல் அமைப்புடன் (Touch control) வருகிறது. இது வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவுடன் வருகிறது. இது பிளாக் (Black) நிறத்தில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் வருகிறது.
இது ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி பேசுகையில், இந்த ட்ரூக் கிளாரிட்டி 5 இயர்பட்ஸ் ஆகஸ்ட் 22 முதல் சிறப்பு வெளியீட்டு விலையில் வாங்குவதற்கு கிடைக்கும். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ரூ. 1499 என்ற விலையில் கிடைக்கும். வெளியீட்டு காலத்திற்குப் பிறகு, இயர்பட்ஸ்கள் அவற்றின் வழக்கமான விலையான ரூ. 1699 விலையில் கிடைக்கும்.
இது அமேசான் (Amazon.in), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ட்ருக்கே (Truke.in) ஆகியவற்றிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு இந்த இயர்பட்களை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








