ரூ.899 விலையில் RGB லைட்டுடன் இப்படி ஒரு கெத்தான Earbuds சாதனம்-ஆ! 2 நாள் மட்டுமே சலுகை!
அடேங்கப்பா.. வெறும் 899 ரூபாய்க்கு இப்படி ஒரு TWS இயர்பட்ஸ் சாதனமா? நம்பவே முடியலையே? என்று சொல்லும் அளவிற்கு Truke BTG Storm TWS earbuds என்று சாதனம் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த விலையில் இதை எங்கு வாங்கலாமென்று பார்க்கலாம்.
ட்ரூக் (Truke) என்பது வயர்லெஸ் இயர்போன்களுக்குப் பெயர் பெற்ற இந்திய பிராண்டாகும். ட்ரூக் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இத்தகைய நிறுவனம், இன்று, அதன் BTG லேபிளின் கீழ் புதிய TWS வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. BTG சீரிஸ் என்பது 'பார்ன் டு கேம் (Born to Game)' என்பதைக் குறிக்கிறது.

இந்த புதிய சாதனத்தை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக Truke BTG Storm TWS இயர்பட்ஸ் என்று அழைக்கிறது. ட்ரூக்கின் முந்தைய BTG தொடர் TWS போலவே, இந்த இயர்பட்ச்ச சாதனமும் RGB லைட்களுடன் வருகிறது. சார்ஜிங் கேஸின் பக்கங்களிலும் மற்றும் இயர்பட்ஸ்களிலும் இந்த RGB நிற லைட்களை நம்மால் காணமுடிகிறது. இதில் கஸ்டமைஸ் விருப்பம் மட்டும் இல்லை என்பது ஒரு சிறிய குறை.
இந்த புதிய ட்ரூக் பிடிஜி ஸ்டோர்ம் TWS இயர்பட்ஸ் சாதனம் ஒரு பேட்ஜ் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. ஆகையால், இது கை மற்றும் பாக்கெட்களில் கட்சிதமாக பொருந்துகிறது. இந்த புதிய இயர்பட்ஸ்கள் இன்-இயர் டைப் வடிவத்தில் வருகிறது. உங்கள் காதுகளுக்கு அதிக தொல்லை மற்றும் அழுத்தம் தருவதை தவிர்க்க இதில் சிலிகான் பட்ஸ்களை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.
இந்த Truke BTG Storm TWS earbuds சாதனம் ஆனது 13 மிமீ ஆடியோ டிரைவர்களை கொண்டுள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம் இணைப்பிற்காக புளூடூத் 5.3 உடன் வருகிறது. இது SBC மற்றும் AAC ஆடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது. இது டச் கண்ட்ரோல் கட்டுப்பாடுகள் மற்றும் அழைப்புகளுக்கு ENC, சுற்றுச்சூழல் இரைச்சல் கேன்சலேஷன் அம்சத்துடன் வருகிறது.

இந்த இயர்பட்ஸ் சாதனம் IPX4-மதிப்பிடப்பட்ட சான்றிதழுடன் வருகிறது. கேமிங்கிற்கான லோ-லேடன்சி மோட் உடன் வருகிறது. உண்மையில், இது கெமர்களுக்கான பெஸ்ட் TWS சாதனமாக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த மோட் இல் 40ms வரை குறைகிறது. இறுதியாக, ஒவ்வொரு இயர்பட்ஸ்களிலும் இன்பில்ட் மைக்ரோஃபோன் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாய்ஸ் கால் அழைப்பு தரமும் சிறப்பாக இருக்கிறது.
ஒவ்வொறு இயர்பட்ஸ் சாதனமும் 40mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. அதே சமயம் இதன் கேஸ் 300mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த Truke BTG Storm TWS இயர்பட்ஸ் சாதனம் முழு சார்ஜில் சுமார் 8-10 மணி நேரம் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. USB Type-C போர்ட் வழியாக சார்ஜ் செய்யும் சார்ஜிங் கேஸ் மூலம், மொத்த பயன்பாடு நேரம் 48 மணிநேரம் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
Truke BTG Storm இயர்பட்களின் விலை ரூ.1,099 ஆகும். ஆனால், இன்று (மே 17) மற்றும் நாளை (மே 18) ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டும் கிடைக்கும் அறிமுகம் சலுகை மற்றும் தள்ளுபடியை சரியாக பயன்படுத்திக்கொண்டால் இந்த சாதனத்தை வெறும் ரூ. 899 விலையில் வாங்கலாம். இந்த TWS சாதனம் Amazon, Flipkart மற்றும் Truke.in வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








