ரூ.899 விலையில் இப்படி ஒரு TWS இயர்பட்ஸா! Truke BTG Alpha-வை எப்போ வாங்கினால் இந்த விலை?

|

ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் அனுபவத்தை கம்மி விலையில் அனுப்பிவைக்க இப்போது உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையை சொல்லப் போனால், இப்படிக் குறைந்த விலையில் ஒரு ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் டிவைஸை நீங்கள் வாங்குவது என்பது எப்போதும் நடக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கப்போவதில்லை. Truke நிறுவனம் இப்போது உங்களுக்காக ஒரு அறிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதுவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

Truke BTG Alpha TWS இயர்போன்ஸ் அறிமுகம்

Truke BTG Alpha TWS இயர்போன்ஸ் அறிமுகம்

Truke நிறுவனம் இந்தியாவில் இப்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள டிவைஸ் தான் இந்த Truke BTG Alpha True Wireless Earphones சாதனமாகும். 40ms லோ-லாடென்சி மோட் விருப்பத்துடன் இந்த புதிய ட்ருக் பிடிஜி ஆல்பா ட்ரு வயர்லெஸ் இயர்போனஸ் சாதனத்தை நிறுவனம் இப்போது ரூ.899 விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய TWS ஹெட்செட், கேம்களை விளையாடும் போது பயன்படுத்த உதவும் 40ms அல்ட்ரா-லோ லேட்டன்சி சப்போர்ட் உடன் வருகிறது.

கேமர்களை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ள Truke BTG Alpha

கேமர்களை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ள Truke BTG Alpha

Truke BTG Alpha True Wireless Earphones சாதனம் கேமர்களை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் அட்டகாசமான தோற்றத்துடன் நியாயமான விலையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த புதிய இயர்பட்ஸின் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களை பற்றிப் பார்க்கையில், இது USB Type-C சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. ட்ரான்ஸ்பரென்ட் கேஸ் மூடி மற்றும் சார்ஜிங் கேஸிற்கான துடிப்பான வடிவமைப்புடன் வருகிறது.

RGB கலர் சார்ஜிங் கேஸ்

RGB கலர் சார்ஜிங் கேஸ்

இது AAC புளூடூத் கோடெக்கிற்கான ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த புதிய Truke BTG Alpha True Wireless Earphones குறிப்பாகக் குறைந்த விலை வரம்பில் ட்ருலி வயர்லெஸ் அனுபவத்தை அனுபவிக்கத் துடிக்கும் பயனர்களைக் குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களை கவர்ந்திழுக்கும் வகையில் RGB கலர் சார்ஜிங் கேஸ் உடன் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இயர்போன் டிவைஸில் இன்னும் என்ன சிறப்பான விஷயங்கள் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Moto G32 போனுக்காக ஏன் எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? மேட்டர் இது தான் பாஸ்.!Moto G32 போனுக்காக ஏன் எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? மேட்டர் இது தான் பாஸ்.!

நத்திங் போன் 1 போல ட்ரான்ஸ்பரென்ட் சார்ஜிங் கேஸ்

நத்திங் போன் 1 போல ட்ரான்ஸ்பரென்ட் சார்ஜிங் கேஸ்

முன்பே சொன்னது போல், இந்த புதிய ட்ரூக் BTG ஆல்பா இயர்பட்ஸ் சாதனம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைப் பெற்றுள்ளது. நத்திங் போன் 1 டிசைனில் இருக்கும் ட்ரான்ஸ்பரென்ட் டிசைன் போல, இந்த இயர்பட்ஸ் டிவைஸின் சார்ஜிங் கேஸ் மூடி மட்டும் ட்ரான்ஸ்பரென்ட் வடிவத்தில் வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த இயர்பட்ஸ் இன் சார்ஜிங் கேஸ் பாடி, ஏழு வண்ணத்தை ஆதரிக்கும் RBG எல்இடி லைட் உடன் வருகிறது.

40ms கொண்ட லோ-லாடென்சி கேமிங் மோட்

40ms கொண்ட லோ-லாடென்சி கேமிங் மோட்

BTG ஆல்பாவின் தனித்துவமான அம்சம் என்றால், இந்த டிவைஸ் 40ms கொண்ட லோ-லாடென்சி கேமிங் மோட் உடன் வருகிறது. இது கேமிங்கின் போது சவுண்ட் தாமதத்தைக் குறைப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. Truke BTG ஆல்பா இயர்பட்கள், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஆப்பிள் Siri உடன் இணைந்த வாய்ஸ் கன்ட்ரோல் ஆப்ஷனையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயற்பட்ஸ் இன் சார்ஜிங் கேஸ் USB Type-C சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஹெட்செட்டின் பேட்டரி ஆயுள் 48 மணிநேரம் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?

48 மணிநேர பயன்பாட்டை வழங்கும் இயர்போன்ஸ்

48 மணிநேர பயன்பாட்டை வழங்கும் இயர்போன்ஸ்

இந்த புதிய Truke BTG Alpha இயர்பீஸ்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் நீடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து Truke BTG Alpha இயர்பட்ஸ்களை சார்ஜ் செய்து பயன்படுத்தினால் கூடுதலாக 38 மணிநேர பயன்பாட்டை இந்த டிவைஸ் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக, இந்த சார்ஜிங் கேஸ் உங்களுக்கு பாஸ்ட் சார்ஜிங் அனுபவத்தையும் வழங்குகிறது.

Truke BTG Alpha உடன் வரும் பாஸ்ட் பேரிங் அம்சம்

Truke BTG Alpha உடன் வரும் பாஸ்ட் பேரிங் அம்சம்

இது 5 நிமிட சார்ஜிங்கிற்குப் பிறகு 100 நிமிட பயன்பாட்டு நேரத்தை உறுதியளிக்கிறது. இந்த Truke BTG Alpha இயர்பட்ஸ்கள் இணைப்பிற்காக புளூடூத் 5.3 உடன் வருகிறது. இது SBC மற்றும் AAC புளூடூத் கோடெக்குகளை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, ட்ரூக் பிடிஜி ஆல்பா இயர்பட்கள் பாஸ்ட் கனெக்ட் இணைக்கும் அம்சத்தையும் கொண்டுள்ளது. சார்ஜிங் கேஸைத் திறந்த உடனேயே இயர்பீஸ்கள் தொடர்புடைய ஸ்மார்ட்போன் அல்லது சாதனத்துடன் பாஸ்ட் பேரிங் செய்யப்படுகிறது.

புதிய Truke BTG Alpha இயர்பட்ஸ் விலை என்ன?

புதிய Truke BTG Alpha இயர்பட்ஸ் விலை என்ன?

Truke நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய Truke BTG Alpha இயர்பட்ஸ் டிவைஸ் தற்போது அதன் வழக்கமான விலையான ரூ.1,299 என்ற விலையில் இருந்து குறைக்கப்பட்டு, ரூ.899 என்ற தள்ளுபடி விலையில் வாங்குவதற்குக் கிடைக்கின்றது. இந்த புதிய ட்ருலி வயர்லெஸ் இயர்போன்கள் தற்போது Flipkart மூலம் வாங்குவதற்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. பிளிப்கார்ட்டில் இப்போது இதன் மேல் சில வங்கிகளின் சலுகைகளும் கூட கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?

கேமிங் ரசிகர்களே நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

கேமிங் ரசிகர்களே நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

இதன் மூலம் இந்த ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ்களின் விலையை நீங்கள் இன்னும் கணிசமாகக் குறைக்கலாம் என்பது கூடுதல் சிறப்பான விஷயம். TWS சந்தையில் உள்ள Boult Audio, Boat, pTron மற்றும் Blaupunkt போன்ற ஆன்லைன் மையப்படுத்தப்பட்ட அல்ட்ரா மலிவு நிறுவனங்கள், இந்த விலையில் Truke BTG ஆல்பாவுடன் போட்டியிடுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், ட்ரூக் ஹெட்செட் கேமிங்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இது கேமிங் ரசிகர்கள் பெரிதும் கவரும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Truke BTG Alpha Gaming Focused True Wireless Earphones Launched in India At Just Rs 899

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X