Home
News

இந்த Setting-ஐ ON பண்ணா போதும்.. தமிழ் மொழிக்கான ஆதரவுடன் Truecaller ஆப்பில் Voicemail அம்சம் அறிமுகம்!

ட்ரூகாலர் (Truecaller) நிறுவனமானது வாய்ஸ்மெயில் (Voicemail) என்கிற புதிய அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஒருவர் உங்களுக்கு கால் செய்யும் போது, நீங்கள் உடனடியாக அந்த அழைப்பிற்கு பதிலளிக்க முடியாதபோது, ​​அதுவொரு மிஸ்டு கால் ஆக மாறும்போது, அவர்களுக்கு இந்த அம்சம் ஒரு வாய்ஸ் மெசேஜை அனுப்ப அனுமதிக்கும்.

இது முன்பே பதிவுசெய்யப்பட்ட மெசேஜ் ஆக இருக்கும். இதன்கீழ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் மிஸ்டு கால்களில் (Missed Call) இருந்து ட்ரான்ஸ்கிரிப் செய்யப்பட்ட வாய்ஸ் மெசேஜை (Transcribed voice message) பெறவும், படிக்கவும் முடியும். இந்த அம்சம் தற்போது அனைத்து இந்திய பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது.

தமிழ் மொழிக்கான ஆதரவுடன் Truecaller ஆப்பில் Voicemail அம்சம் அறிமுகம்!

ஆண்ட்ராய்டுக்கான ட்ரூகாலர் ஆப்பில் இந்த வாய்ஸ்மெயில் செயல்பாட்டை அணுக, குறிப்பிட்ட எண்ணில் கால் ஃபார்வேடிங்க்கை (Call forwarding) இயக்க வேண்டும். ஒருவேளை நீங்களொரு ட்ரூகாலர் பிரீமியம் பயனராக (Truecaller Premium User) இருந்தால் ட்ரூகாலர் அசிஸ்டென்ட் வழியாக இன்னும் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை பெறுவீர்கள்.

ட்ரூகாலர் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வாய்ஸ்மெயில் அம்சம் ஆனது ஸ்பேம் பில்டரையும் (Spam Filter) வழங்குகிறது மற்றும் மேலும் பயனர்கள் பிளேபேக் வேகத்தை (Playback Speed) சரிசெய்யவும் அனுமதிக்கிறது. இப்போதைக்கு இந்த அம்சம் தமிழ் உட்பட மொத்தம் 12 இந்திய மொழிகளில் ஏஐ அடிப்படையிலான டிரான்ஸ்கிரிப்ஷனை ஆதரிக்கிறது.

ட்ரூகாலரின் அறிக்கையின்படி, இந்த தளம் வாய்ஸ் மெசேஜ்களை பதிவும் செய்து அவற்றை டெக்ஸ்ட் ஆகவும் மாற்றுகிறது, ஆக இதன் மூலம் ஒருவர் முழு செய்தியையும் கேட்காமல் அல்லது உடனடியாக திரும்ப அழைக்காமல் ஏன் அழைத்தார் என்பதை மெசேஜ் ஆகவும் படிக்க முடியும்.

முன்னரே குறிப்பிட்டபடிஇந்த புதிய வாய்ஸ்மெயில் அம்சம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து ட்ரூகாலர பயனர்களுக்கும் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது; அதாவது பிரீமியம் சந்தாவில் இல்லாதவர்களுக்கும் கூட இது கிடைக்கிறது. இந்த வாய்ஸ்மெயில் அம்சத்தை பயன்படுத்த, மொபைல் எண்ணில் கால் ஃபார்வேடிங் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

கால் ஃபார்வேடிங் செட் செய்யப்பட்டதும், வாய்ஸ்மெயில் டிரான்ஸ்கிரிப்ஷன்கள் தோன்ற சிறிது நேரம் ஆகலாம். ட்ரூகாலர் ஆப்பில் உள்ள வாய்ஸ்மெயில் டேப்பில் இருந்து நீங்கள் அனைத்து மெசேஜ்களையும் அணுகலாம். இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்களுக்கு ட்ரூகாலர் ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் தேவைப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ஸ்மெயில் அம்சம் பயனரின் டிவைஸிலேயே நேரடியாக மெசேஜ்களை சேமித்து, பதிவுகள் மீது முழு கட்டுப்பாட்டையும் தனியுரிமையையும் அளிப்பதாக ட்ரூகாலர் கூறுகிறது. இதில் ஸ்மார்ட் கால் வகைப்பாடு, ஸ்பேம் பில்டர், சரிசெய்யக்கூடிய பேக்கிரவுண்ட் ஸ்பீட் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இது தமிழ், இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, நேபாளி, பஞ்சாபி, சமஸ்கிருதம் மற்றும் உருது உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் ஏஐ அடிப்படையிலான டிரான்ஸ்கிரிப்ஷனையும் வழங்குகிறது.

இதற்கு முன்னதாக ட்ரூகாலர் ஆப்பில் பேமிலி ப்ரொடெக்ஷன் (Family Protection) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. ட்ரூகாலர் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த அம்சம் - ஒரு ட்ரூகாலர் பயனரின் முழு குடும்பத்திற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கும். இந்த அம்சத்தின் கீழ் ட்ரூகாலர் பயனர்களால், தங்களுடைய குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, நண்பர்கள் ஆகியோர்களை பேமிலி க்ரூப்களாக உருவாக்க முடியும்.

பின்னர் பிளாக்லிஸ்ட் (Blocklist), ப்ரொடெக்ஷன் லெவல் (Protection level) மற்றும் பலவற்றை கூட்டாக நிர்வகிக்க அனுமதிக்கும். காலர் ஐடி மற்றும் ஸ்பேம்-பிளாக் தளமான (Caller ID and spam-blocking platform) ட்ரூகாலர் ஆனது இந்த புதிய அம்சம் - தொழில்நுட்ப ஆர்வமுள்ள பேமிலி மெம்பர்களை இலக்காகக் கொண்டது என்றும், தொழில்நுட்பத்தை புரிந்துகொள்பவர்கள் தொழில்நுட்பங்களை கையாண்டால் அவர்கள் பயனடையலாம் என்றும் கூறியுள்ளது. பேமிலி ப்ரொடெக்ஷன் அம்சமானது நேரடியாக ஆப்பில் கட்டமைக்கப்பட்டு (Directly built into the app) உள்ளது. இதற்காக பயனர்கள் கூடுதலாக எதையும் பதிவிறக்க வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Truecaller Voicemail Feature Launched in India Supports Tamil Language Free For all Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X