Home
News

ஜியோ உடன் கைகோர்க்க திட்டம் போடும் Truecaller.. ஏதாவது உள்குத்து இருக்கா?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நாட்டின் முன்னணி டெலிகாம் ( Telecom ) நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற ட்ரூகாலர் ( Truecaller ) திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ட்ரூகாலரின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து தெரிந்து இங்கே கொள்ளுங்கள். பெரும்பாலான சைபர் குற்றங்கள் (Cyber Crime) மொபைல் (Mobile) மூலமே நடக்கின்றன. போலியான எஸ்எம்எஸ்கள் ( SMS), கால்கள் (Calls ), ஸ்பேம் மெயில்கள் ( Spam Mail) மூலம் தனிப்பட்ட நபரின் தகவல்களை தெரிந்து கொண்டு பணம் திடுடப்படுகின்றன.

ஜியோ உடன் கைகோர்க்க திட்டம் போடும் Truecaller.. ஏன் தெரியுமா?

இதுபோன்ற சைபர் குற்றங்களை தவிர்க்க பல்வேறு ஆப்ஸ்கள் (Apps) வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில், உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்ட ட்ரூகாலர் (Truecaller) ஆப் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. இந்த ட்ரூகாலர் ஆப் தனது பயனர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறது.

சில நாள்களுக்கு முன்பு கூட புதிய எஸ்எம்எஸ் (SMS) பாதுகாப்பு வசதியை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த வசதி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, மோசடி ஆசாமிகளிடம் இருந்து வரும் எஸ்எம்எஸ்களை இந்த செயற்கை நுண்ணறிவு எளிதாக கண்டுபிடித்துவிடும்.

இது நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ட்ரூகாலர் நிறுவனம் அடுத்த மாஸ்டர் பிளானை போடத் தொடங்கிவிட்டது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் உடன் இணைந்து தனது பயனர்களுக்கு சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணமும் இருக்கிறது.

ஏனென்றால், ஒரு மோசடி நபரிடம் இருந்து வரும் எஸ்எம்எஸ்களையே, கால்களையே, இமெயில்களையே ட்ரூகாலர் ஆப் மூலம் எளிதாக தடுக்க முடியும். ஆனால், அனுப்பும் நபரின் மொபைல் எண்ணின் சேவையை நிரந்தரமாக முடக்க முடியாது.

இதன் காரணமாக அந்த மோசடி நபர் அடுத்தடுத்த பயனர்களுக்கு போலியான எஸ்எம்எஸ்களையும், கால்களையும், இமெயில்களையும் அனுப்பிக்கொண்டே இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்களின் ஆதரவு இருந்தால், மோசடி நபர்களின் எண்களை எளிதாக கண்டறிந்து முற்றிலும் முடக்க முடியும். இதனால், அந்த மோசடி நபர் ஒரே மொபைல் எண்ணை வைத்து திரும்ப திரும்ப மோசடியில் ஈடுபட முடியாது.

இந்த திட்டம் பெரும்பாலான குற்றச் சம்பவங்களை எளிதாக முடித்து வைத்துவிடும். இந்த காரணத்திற்காகவே ட்ரூகாலர் நிறுவனம் டெலிகாம் நிறுவனங்கள் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வருகிறது. ஆகவே, ட்ரூகாலருக்கு டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து நன்மைகள் கிடைப்பது உறுதியாகிறது.

ஆனால், டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ரூகாலரிடம் இருந்து எந்த பலன்களும் கிடைக்க வாய்ப்பில்லை. பயனர்களின் தகவல்களை திருடுவதாக கூறப்படும் ட்ரூகாலர் உடன் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முக்கிய நிறுவனங்கள் கைகோர்க்குமா என்பது பற்றி வரும் நாட்களில் தெரியவரும். இருப்பினும், ட்ரூகாலர் சளைக்காமல் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Truecaller try to partner with Jio Airtel and Vodafone idea
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X