ட்ரூகாலர் பயனரா நீங்கள்: கோவிட்-19 மருத்துவமனை கண்டறிய புதிய வசதி!

|

பயனர்கள் மருத்துவமனைகளை கண்டுபிடிப்பதற்கான கோவிட்-19 ஹெல்த்கேர் டைரக்டரி ட்ரூகாலரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டைரக்டரி ஆண்ட்ராய்டு சாதனங்களில் பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது.

ட்ரூகாலர் இந்தியா

ட்ரூகாலர் இந்தியாவில் பயனர்களுக்கான கோவிட்-19 ஹெல்த்கேர் டைரக்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவமனைகள் கண்டறிவதற்கான சிறந்த வழி இது என கூறப்படுகிறது. ட்ரூகாலர் ஆண்ட்ராய்டு சாதனத்தின் பீட்டா பதிப்பில் உள்ள மெனு ஐகானில் கிடைக்கிறது.

ப்ளே ஸ்டோரில் புதுப்பிப்பு

ப்ளே ஸ்டோரில் புதுப்பிப்பு

இந்த அம்சம் பெற விரும்பும் பயனர்கள் ப்ளே ஸ்டோரில் பயன்பாட்டை புதுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக இது ஆண்ட்ராய்டு சாதனங்களில் பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது இருப்பினும் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ உதவியை கண்டறிய உதவும்

மருத்துவ உதவியை கண்டறிய உதவும்

இந்த அம்சமானது இந்தியாவில் உள்ள அனைவரும் தங்களது அருகில் உள்ள மருத்துவ உதவியை கண்டறிய உதவுகிறது. இந்த சமயத்தில் தங்களுக்கு மிகவும் தேவைப்படும் சரியான சுகாதார எண்களை கண்டறிவது கடினமாக இருக்கும் எனவே இந்த பயன்பாட்டை ட்ரூகாலர் இணைத்திருக்கிறது.

விரைவில் அனைத்து பயனர்களுக்கும்

விரைவில் அனைத்து பயனர்களுக்கும்

ஆரம்பத்தில் பீட்டா பதிப்பில் மட்டுமே இது கிடைத்தாலும் விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சமானது நாடு முழுவதும் இருக்கும் மாநிலங்களை சேர்ந்த கோவிட்-19 அனுமதிபெற்ற மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்த சுகாதார தரவானது உத்தியோகப்பூர்வ அரசாங்க தரவுத்தளத்தில் இருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு சர்ச் பட்டன் தேர்வு இருக்கும், இது உங்களுக்கு விரைவான தகவல்களை கண்டறிய உதவுகிறது. இருப்பினும் மருத்துவமனை படுக்கைகள் குறித்த விவரங்கள் வழங்கப்படாது.

கோவிட் ஹெல்த்கேர் டைரக்டரி

கோவிட் ஹெல்த்கேர் டைரக்டரி

கோவிட் ஹெல்த்கேர் டைரக்டரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிராண்ட் ஒவ்வொரு நாளும் புதுப்பித்து வழங்குகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து அதிகமான மருத்துவமனை தொலைபேசி எண்கள் கிடைப்பதை இந்த அம்சம் உறுதி செய்கிறது.

கொரோனா தொற்று இரண்டாம் அலை

கொரோனா தொற்று இரண்டாம் அலை

கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி, கடும் சோர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை கொரோனா தொற்று அறிகுறி எனவும் இந்த தொற்றுகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுபடியும் மருத்துவர்களை அணுகும்படியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கட்டுப்படுத்த  பல்வேறு முயற்சிகள்

கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள்

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனோ தொற்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டது மேலும் பீதியை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல் கொரோனா இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் சப்ளை தட்டுப்பாட்டால் இந்தியா திக்குமுக்காடி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மத்திய மாநில அரசுகள், காவல்துறையினர், ஊடகத்தினர் உள்ளிட்டோர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 28 ஆம் முதல் முன்பதிவு செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார். மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும் அடுத்தாக 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
True Caller Launches New Feature to Find Covid-19 HealthCare Directory

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X