குளோபல் ஸ்பேம் கால் தரவரிசையில் இந்தியாவுக்கு என்ன இடம் தெரியுமா? ஸ்பேமர்கள் அதிகமுள்ள மாநிலம் இதுதான்..

|

ட்ரூகாலர் நிறுவனம் அதன் வருடாந்திர ட்ரூகாலர் இன்சைட் அறிக்கையின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. இதில், 2020 ஆம் ஆண்டில் அதிகம் 'ஸ்பேம்' (Spam) அழைப்புகளால் பாதிக்கப்பட்ட முதல் 20 நாடுகளை நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இந்த அறிக்கையின் நான்காவது பதிப்பு இதுவாகும், இதில் இந்தியாவிற்கு என்ன இடம் என்பதை நீங்களே பாருங்கள்.., தமிழ்நாடு என்ன இடத்தை பிடித்தது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பேம் அழைப்புகளில் அதிக ஸ்பேம் பெற்ற நாடுகளின் தரவரிசை

ஸ்பேம் அழைப்புகளில் அதிக ஸ்பேம் பெற்ற நாடுகளின் தரவரிசை

2020 ஆம் ஆண்டின் ஸ்பேம் அழைப்புகளில் அதிக ஸ்பேம் பெற்ற நாடுகளின் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டதோடு, உலகம் முழுவதும் ஸ்பேம் அழைப்பு வடிவங்களிலும் மாற்றங்களை நாம் காணமுடிகிறது என்று ட்ரூகாலர் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் இவ்வளவு ஸ்பேமர்களா? இந்தியாவுக்கு என்ன இடம்?

இந்தியாவில் இவ்வளவு ஸ்பேமர்களா? இந்தியாவுக்கு என்ன இடம்?

உலகளவில் பயனர்கள் பெறும் ஸ்பேம் அழைப்புகளின் அடிப்படையில் இந்தியா 9வது இடத்திற்குப் பின்தங்கிச் சென்றுள்ளது. பிரேசில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயனர்கள் பெறும் ஸ்பேம் அழைப்புகளின் அளவு சுமார் 34% குறைந்துள்ளது.

'லேப் வளர்ப்பு இறைச்சி' சாப்பிட ஒப்புதல் கிடைத்தது.. உண்மையில் இது மனிதர்களுக்கு நல்லது தானா?'லேப் வளர்ப்பு இறைச்சி' சாப்பிட ஒப்புதல் கிடைத்தது.. உண்மையில் இது மனிதர்களுக்கு நல்லது தானா?

முதல் 10 நாடுகளில் உள்ள இந்தியா

முதல் 10 நாடுகளில் உள்ள இந்தியா

பெறப்பட்ட ஸ்பேம் அழைப்புகளின் அளவு குறைந்த போதிலும், இந்தியா இன்னும் ஸ்பேம் செய்த முதல் 10 நாடுகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டின் அறிக்கையிலிருந்து வந்த மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்பேம் அழைப்புகளில் 98.5% உள்நாட்டு எண்களிலிருந்தே உருவாகியுள்ளது.

ஸ்பேம் அழைப்புகள் ஏன் குறைந்தது?

ஸ்பேம் அழைப்புகள் ஏன் குறைந்தது?

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் ஏன் குறைந்து வருகின்றன என்பதை ஓரளவுக்கு நாம் விளக்கக்கூடும், ஏனெனில் பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு டெலிமார்க்கெட்டர்களையும் பூட்டிவைத்துவிட்டது. இதுவே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!

தமிழ்நாட்டிற்கு என்ன இடம்?

தமிழ்நாட்டிற்கு என்ன இடம்?

மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் மூன்று மாதங்கள் அவசரகால சேவைகளுக்கான அழைப்புகள் மட்டும் சுமார் 148% அதிகரித்துள்ளது என்று அறிக்கை சொல்கிறது. 2020 ஆம் ஆண்டில் அதிக ஸ்பேம் அழைப்புகளைப் பெற்ற மாநிலம் குஜராத் என்றும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா என்றும் ட்ரூகாலர் கண்டறிந்துள்ளது. தமிழ்நாடு 9வது இடத்தில் உள்ளது.

உருமாறும் டெலிமார்க்கெட்டிங்

உருமாறும் டெலிமார்க்கெட்டிங்

பல்வேறு சலுகைகள் மற்றும் ரீமைண்டர்களின் விளம்பரத்திற்காக சுமார் 52% ஸ்பேம் அழைப்புகளைப் பயனர்கள் ஆபரேட்டர்கள் மூலம் இந்தியாவில் பெற்றுள்ளனர் என்பதே உண்மையாக இருக்கிறது என்று ட்ரூகாலர் நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், இந்த ஆய்வு மொத்தம் 34% ஸ்பேம் அழைப்புகளைப் பதிவு செய்து, டெலிமார்க்கெட்டிங் சேவைகள் பெரிய ஸ்பேமர்களாக உருமாறி வருவதைத் தெள்ளத்தெளிவாகக் காண்பித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Truecaller Insights Report Listed Top 20 Countries Affected By Spam Calls In 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X