100 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளை பெற்ற ட்ரூகாலர் ஆப்

Written By:

காலர் ஐடி மற்றும் கால் ப்ளாக்கிங் அப்ளிகேஷனான ட்ரூகாலர் புதிய சாதனையை படைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 100 மில்லியன் பயனாளிகளை பெற்றுள்ளது ட்ரூகாலர் அப்ளிகேஷன். இதில் 45 மில்லியன் இந்திய பயனாளிகள் என்றும் ஒவ்வொரு வாரமும் சுமார் 600000 பேர் புதிதாக ட்ரூகாலரில் இணைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

100 மில்லியன் பயனாளிகளை பெற்ற ட்ரூகாலர் ஆப்

கடந்த மூன்று மாதங்களில் ட்ரூகாலர் பயன்படுத்துவோரின் எண்னிக்கை இரு மடங்கு அதிகரித்திருப்பதாகவும், இந்த எண்னிக்கையானது ஆன்டிராய்டு, ஐஓஎஸ் மட்டுமல்லாது விண்டோஸ் போன், ப்ளாக்பெரி, ப்ளாக்பெரி 10 மற்றும் சிம்பயான் போன்களில் இருந்தும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[2014 ஆம் ஆண்டில் அதிக மெமரி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்]

இந்த செய்தியோடு ட்ரூகாலர் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு புதிய அம்சங்களை சேர்த்துள்ளனர் இதன் வடிவமைப்பாளர்கள். தேடுதலை சுலபமாக்க சர்ச் பார் ரியல் டைமில் வேலை செய்யும் படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது உங்க கான்டாக்ட் லிஸ்ட் இல்லாமல் 1.5 பில்லியன் கொண்ட ட்ரூ காலர் டேட்டாபேஸை முழுமையாக தேடும்.

100 மில்லியன் பயனாளிகளை பெற்ற ட்ரூகாலர் ஆப்

இதை டீபால்ட் காலிங் அப்ளிகேஷனாகவும் நீங்க பயன்படுத்த முடியும். இதை ஓபன் செய்தவுடன் கான்டாக்ட், சரியான இடம் மற்றும் பல அம்சங்களை காட்டும், இப்போ நீங்க வலது அல்லது இடது புறத்தில் ல்வைப் செய்து உங்களுக்கு தேவையான கான்டாக்ட்களுக்கு கால் அல்லது மெசேஜ் செய்யலாம்.

English summary
Truecaller has more than 100 million users worldwide. Truecaller has achieved a new milestone, even as it has managed to get more than 100 million people to use its services worldwide.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot