ட்ரூகாலர் பயனர்களே கவனியுங்க.! இனி உங்கள் போன் கால்லை AI அட்டண்ட் செய்யுமாம்.! எப்படி?
ட்ரூகாலர் பயனர்களுக்கு இப்போது ஒரு புதிய அட்டகாச அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ட்ரூகாலர் ஆப்ஸில் இப்போது AI அம்சத்துடன் இயங்கும் புதிய ட்ரூகாலர் அசிஸ்டன்ட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.
ட்ரூகாலர் இப்போது AI அடிப்படையிலான உதவியாளர் மூலம் அழைப்புகளுக்குப் பதிலளிப்பதை எளிதாக்கும் புதிய ட்ரூகாலர் அசிஸ்டன்ட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், நீங்கள் பேச விரும்பவில்லை என்றாலோ அல்லது அந்த அழைப்பை உங்களால் ஏற்க முடியவில்லை என்றாலோ, உங்கள் சார்பாக 'ட்ரூகாலர் அஸ்சிஸ்டனட் அந்த அழைப்பை ஏற்று பதிலளிக்கும்.

நீங்கள் பிஸியாக இருக்கும்போது, அழைப்புகளைப் பெற முடியாத சூழ்நிலைகளிலும் இது உதவியாக இருக்கும். ட்ரூகாலர் அசிஸ்டன்ட் (Truecaller Assistant) இப்போது இந்தியாவில் பயன்படுத்த கிடைக்கிறது. Truecaller Assistant கடந்த ஆண்டு உலகளவில் தொடங்கப்பட்டது. அது இப்போது இந்தியாவில் கிடைக்கிறது.
இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே உள்ளது. இந்த புதிய ட்ரூகாலர் அசிஸ்டண்ட் ஆண் மற்றும் பெண் என ஐந்து வெவ்வேறு குரல்களில் கிடைக்கிறது. எனவே நீங்கள் விரும்பிய குரலைத் தேர்வு செய்யலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர, இது மற்ற பிராந்திய மொழிகளையும் இது ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Truecaller Assistant தற்போது அனைத்து பயனர்களுக்கும் 14 நாள் இலவச சோதனையாக கிடைக்கிறது. இலவச சோதனைக்குப் பிறகு, ட்ரூகாலர் பிரீமியத்தைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், அதற்குப் பணம் செலுத்த வேண்டும். மாதத்திற்கு ரூ.149 அல்லது ஆண்டுக்கு ரூ.1,499 என்ற கட்டணத்தை செலுத்தி சந்தாவைப் பெறலாம்.
ஆண்டுக்கு ரூ. 5,000 செலவாகும் ட்ரூகாலர் கோல்டு சந்தாவையும் நீங்கள் தேர்வு செய்யலாம். சரி, இப்போது எப்படி உங்கள் ட்ரூகாலர் ஆப்ஸில் இந்த புதிய ட்ரூகாலர் அசிஸ்டன்ட் அம்சத்தை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா? ட்ரூகாலர் அசிஸ்டன்ட் அம்சத்தை இயக்க முதலில் உங்கள் Android மொபைலில் Truecaller ஆப்ஸ் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பிறகு, Truecaller ஆப்ஸை திறந்து, கிடைக்கக்கூடிய விருப்பங்களின் பட்டியலிலிருந்து விருப்பமான குரலைத் தேர்ந்தெடுத்து உங்கள் ட்ரூகாலர் அசிஸ்ட்டண்ட் வாய்ஸ் ஐ தேர்வு செய்து அமைக்கவும். நீங்கள் அதை அமைத்த பிறகு, உங்களுக்கான அழைப்புகளை எடுக்க உங்கள் ட்ரூகாலர் அசிஸ்டன்ட் தயாராக இருப்பார்.
உள்வரும் அழைப்பைப் பெறும்போது, அதற்குப் பதிலளிக்க, 'அசிஸ்டண்ட்' என்பதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைப் பெறுவீர்கள். உங்கள் அழைப்பிற்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், உங்கள் அசிஸ்டண்ட் தானாகவே அதற்கு பதிலளிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உதவியாளர் அழைப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய மெசேஜ் தகவலை நீங்களே கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம்.
இது ஒரு விர்ச்சுவல் வாய்ஸ் அசிஸ்டண்ட் என்பதால், இது இன்னும் பல வேலைகளை செய்கிறது. வேறு சில அம்சங்களில் ஸ்பீச்-டு-டெக்ஸ்ட் அம்சம், இது அழைப்பை நிகழ்நேரத்தில் டிரான்ஸ்கிரிப்ட் செய்து உங்கள் மொபைலில் காண்பிக்கும். எனவே உங்கள் அசிஸ்டண்ட் அழைப்பில் இருக்கும்போது, உரையாடலை நிகழ்நேரத்தில் படிக்கலாம். இது அழைப்பையும் பதிவு செய்கிறது, எனவே நீங்கள் பின்னர் விவரங்களை சரிபார்க்கலாம். இந்த புதிய அம்சத்தை உடனே ட்ரை செய்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications








