Home
News

2026 இல் இருந்து அம்மா, அப்பா, வீட்டில் உள்ள எல்லோர் நம்பர்களையும்.. TrueCaller ஆப்பில் வருது முக்கிய மாற்றம்!

தெரியாத மொபைல் நம்பர்களில் இருந்து அல்லது காண்டாக்ட் லிஸ்ட்டில் இல்லாத மொபைல் நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண உதவும் - மிகவும் பிரபலமான ட்ரூகாலர் (Truecaller) ஆப்பில் "குடும்ப உறுப்பினர்களை இணைக்கும்" ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

என்ன அம்சம்? என்ன பயன்? ட்ரூகாலர் ஆப்பில் பேமிலி ப்ரொடெக்ஷன் (Family Protection) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ட்ரூகாலர் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த அம்சம் - ஒரு ட்ரூகாலர் பயனரின் முழு குடும்பத்திற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

2026 இல் இருந்து.. TrueCaller ஆப்பில் வருது முக்கிய மாற்றம்!

இந்த அம்சத்தின் கீழ் ட்ரூகாலர் பயனர்களால், தங்களுடைய குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, நண்பர்கள் ஆகியோர்களை பேமிலி க்ரூப்களாக உருவாக்க முடியும். பின்னர் பிளாக்லிஸ்ட் (Blocklist), ப்ரொடெக்ஷன் லெவல் (Protection level) மற்றும் பலவற்றை கூட்டாக நிர்வகிக்க அனுமதிக்கும்.

காலர் ஐடி மற்றும் ஸ்பேம்-பிளாக் தளமான (Caller ID and spam-blocking platform) ட்ரூகாலர் ஆனது இந்த புதிய அம்சம் - தொழில்நுட்ப ஆர்வமுள்ள பேமிலி மெம்பர்களை இலக்காகக் கொண்டது என்றும், தொழில்நுட்பத்தை புரிந்துகொள்பவர்கள் தொழில்நுட்பங்களை கையாண்டால் அவர்கள் பயனடையலாம் என்றும் கூறியுள்ளது

பேமிலி ப்ரொடெக்ஷன் அம்சமானது நேரடியாக ஆப்பில் கட்டமைக்கப்பட்டு (Directly built into the app) உள்ளது. இதற்காக பயனர்கள் கூடுதலாக எதையும் பதிவிறக்க வேண்டியதில்லை. தங்கள் போன்களில் ட்ரூகாலர் ஆப்பை பயன்படுத்தும் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் இதன்கீழ் இணைக்கலாம். இப்போதைக்கு இந்த அம்சம் சிலி, கென்யா, மலேசியா மற்றும் ஸ்வீடனில் கிடைக்கிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியா உட்பட பிற பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று ட்ரூகாலர் தெரிவித்துள்ளது.

பேமிலி ப்ரொடெக்ஷன் அம்சம் கிடைத்தவுடன், பயனர்கள் நம்பகமான பேமிலி குழுவில் ஐந்து பேர் வரை சேர்க்கலாம். இவர்கள் குடும்பமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களையும் கூட சேர்க்கலாம். இந்த குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மோசடி அழைப்புகளிலிருந்து (Spam Calls) தங்களை பாதுகாத்து கொள்ள பகிரப்பட்ட டூல்களுக்கான அணுகலை (Shared tools Access) பெறுவார்கள்.

கூடுதலாக, ஒரு பயனர் "பேமிலி அட்மின்" (Family Admin) என்கிற பாத்திரத்தை ஏற்றுக்கொள்வார். மேலும் அவர்கள் பாதுகாப்பு நிலைகளை அமைக்கவும் (Manage Protection levels), தடுப்பு பட்டியல்களை (Manage blocklists) நிர்வகிக்கவும், தேவையற்ற அழைப்புகள் (Unwanted Calls) எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை தீர்மானிக்கவும் முடியும். ஆண்ட்ராய்டு ஆப்பில், அட்மின் ஆக இருப்பவர்களால் ரியல்டைம் சப்போர்ட் டூல்களுக்கான அணுகலை (Real-time support tools) பெறுவார்கள்.

இதன் மூலம், குடும்பத்தில் உள்ள எவருக்கும் சாத்தியமான மோசடி அழைப்பு வரும்போது அவர்கள் எச்சரிக்கைகளையும் பெறுவார்கள், மேலும் அவர்களால் இதை தொலைதூரத்தில் இருந்தபடியே செய்ய முடியும். பேட்டரி நிலை, போன் செயல்பாடு மற்றும் கிடைக்கும் தன்மை (battery level, phone activity and availability) போன்ற ரியல்டைம் ஸ்டேட்டஸ் சிக்னல்களையும் (Real-time Status Signals) அட்மின்களால் பார்க்க முடியும்.

மோசடி அழைப்புகளிலிருந்து பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, வருவாய் மற்றும் நீண்டகால ஈடுபாட்டிற்கான இயக்கியாகவும் இந்த அம்சம் செயல்படும் என்று ட்ரூகாலர் தெரிவித்து உ ள்ளது. விளம்பரமில்லா அனுபவம் மற்றும் கூடுதல் டூல்களை (Additional Tools) விரும்பும் பயனர்கள் ட்ரூகாலர் பிரீமியம் பேமிலி திட்டத்தில் (Truecaller Premium Family plan) சேரலாம். இது மேம்பட்ட ஸ்பேம் தடுப்பு (spam blocking), அதிக ஆபத்துள்ள எண்களை தானாக நிராகரித்தல் (Automatic rejection of high-risk numbers) மற்றும் பல அம்சங்களை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Truecaller Family Protection This New feature Protects Your Family Friends From Call Based Scams
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X