Home
News

இனி WhatsApp இல் அந்த தொல்லை இருக்காது.! நல்ல செய்தி சொன்ன ட்ரூ காலர் தலைமை நிர்வாக அதிகாரி.!

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த வாட்ஸ்அப் செயலிகளிலும் அவ்வப்போது சில மோசடி அழைப்புகள் வருகிறது. அதுவும் பக்கத்து வீட்டில் இருந்தால் கூட வெளிநாட்டில் இருந்து பேசுவது போன்ற சில மோசடிகள் தற்போது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பகுதி நேர வேலை வாய்ப்புகள் என்று அறிவித்துக் கூட சிலர் மோசடி செய்வதைச் செய்திகளில் படித்திருப்போம்.

இனி WhatsApp இல் அந்த தொல்லை இருக்காது.!

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் தற்போது அதிகரித்து வரும் மோசடியை தடுப்பதற்காக மெட்டா நிறுவனத்துடன் ட்ரூ காலர் நிறுவனம் இணைந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்கள் கொண்டுவரும் புதிய அம்சம் மூலம் மோசடி அழைப்பு மற்றும் மோசடி மெசேஜ்களை பயனாளர்கள் எளிதில் கண்டுகொண்டு பிளாக் செய்யலாம்.

குறிப்பாக இந்த புதிய அம்சம் தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாகவும், விரைவில் உலகம் முழுவதும் இது அனைவரின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் ட்ரூ காலர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் சராசரியாக மாதத்திற்கு 17 தேவையில்லாத அழைப்புகளைப் பெற்று வருவதாகவும், இதில் சில மோசடி அழைப்புகளும் இருப்பதால் பலர் தங்களது பணத்தை ஏமாந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இவ்வாறு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகள், மிஸ்டுகால் அழைப்புகள், மெசேஜ்கள் போன்றவற்றை ட்ரூ காலர் மூலம் கண்டுபிடித்து அவற்றை பிளாக் செய்யலாம் அல்லது இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்று ட்ரூகாலர் தெரிவித்துள்ளது.

இனி WhatsApp இல் அந்த தொல்லை இருக்காது.!

மேலும் டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது சமீபத்தில் புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. அதாவது டிராய் அறிவித்துள்ள புதிய சட்டமானது முழுக்க-முழுக்க தெரியாத எண்களில் (Unknown Numbers) இருந்து தேவையற்ற அழைப்புகள் (Spam Calls) மற்றும் மெசேஜ்களுக்கு (Spam Messages) எதிரான ஒரு சட்டமாகும். மேலும் இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் கம்பெனிகளுக்கும் பொருத்தும்.

இந்த புதிய விதியின்படி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கால் மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளில் ஏஐ ஸ்பேம் ஃபில்டர்களை (AI Spam Filters) பயன்படுத்த வேண்டும். இதன் கீழ் ஃப்ராடு (Fraud) மற்றும் ஹராஸ்மென்ட்டில் (Harassment) இருந்து தத்தம் நுகர்வோர்களைப் பாதுகாக்க வேண்டும்.

ஏஐ ஸ்பேம் ஃபில்டர்ஸ் எப்படி வேலை செய்யும்? இந்த ஃபில்டர்கள் பல்வேறு ஆதாரங்களில் (Sources) இருந்து வரும் போலியான (Fake) அல்லது விளம்பர (Promotional) அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அடையாளம் கண்டு தடுக்கும். இவ்வகை கால்கள் மற்றும் மெசேஜ்கள் ஆனது பெரும்பாலும் மோசடி செய்பவர்களாலும், பணம் திருடும் கும்பல்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

இனி WhatsApp இல் அந்த தொல்லை இருக்காது.!

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) ஆகிய அனைத்துமே தங்கள் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளில் ஏஐ ஸ்பேம் ஃபில்டர்களை பயன்படுத்த வேண்டும் என்று டிராய் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Truecaller can help detect spam WhatsApp calls: here is how: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X