Home
News

Truecaller-க்கு வந்தது மாற்றம்.. ரூ.75 பணம் கட்டணும்.. புது சேவைக்கு 2 பிரீமியம் திட்டங்கள்.. என்னென்ன மாறும்?

இந்தியாவில் காலர் ஐடி (Caller ID), கால் ரெக்கார்டிங் (Call Recording), கால் அசிஸ்டன்ட் (Call Assistant) போன்றவற்றுக்கு கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ட்ரூகாலர் (Truecaller) ஆப்பில் அதிரடியான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய சேவைக்கு மாதாந்திரம், வருடாந்திரம் என்று கட்டணம் விதிக்கப்படுகிறது.

இப்போது, ட்ரூகாலர் ஆப் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலான மக்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர். காலர் ஐடி ஆப்களில் (Caller ID Apps) இதைவிட்டால், வேறு கிடையாது என்று சொல்லும் அளவுக்கு அதன் ஆதிக்கம் இருக்கிறது. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதில் அதிரடியான மாற்றங்களும் வருகின்றன.

Truecaller-க்கு வந்தது மாற்றம்.. புது சேவைக்கு ரூ.75 பணம் கட்டணும்!

ஆரம்பத்தில் இந்த ஆப்பின் சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுவந்தது. ஆனால், போகப்போக பிரீமியம் திட்டங்கள் (Premium Plan) கொண்டு வரப்பட்டன. இந்த திட்டங்களை பெற்றால் மட்டுமே விளம்பரங்கள் கிடையாது, கால் ரெக்கார்டிங் ஆப்ஷன், உங்களது நம்பரை யார் தேடினார்கள், ட்ரூகாலர் அசிஸ்டன்ட், பிரீமியம் பேட்ஜ் போன்ற பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டன.

இப்படியே, பிரீமியம் கனெக்ட் (Premium Connect), பீரிமியம் அசிஸ்டன்ட் (Premium Assitant), பிரீமியம் ஃபேமிலி (Premium Family) மற்றும் பிரீமியம் கோல்டு (Premium Gold) என்று திட்டங்கள் பெருகி கொண்டே போனது. இப்போது, புதிய சேவைக்கு மாதாந்திரம், வருடாந்திரம் என்று கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏஐ கால் ரெக்கார்டிங் (AI Call Recording) என்ற இந்த புதிய சேவையானது, கால் ரெக்கார்டிங் செய்வது மட்டுமல்லாமல், அதனை டிரான்ஸ்கிரிப்ஷன் செய்து யூசர்களுக்கு கொடுக்கிறது. இதன் மூலம் காலில் பேசியவற்றை டெக்ஸ்ட்டாக மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் முக்கியமான கால்களை துல்லியமாக வார்த்தை வார்த்தையாக பிரித்துகூட பார்த்து கொள்ளலாம்.

Truecaller-க்கு வந்தது மாற்றம்.. புது சேவைக்கு ரூ.75 பணம் கட்டணும்!

இந்த ஏஐ கால் ரெக்கார்டிங் சந்தாவை மாதத்துக்கு ரூ 75 மற்றும் வருடத்துக்கு ரூ 529 செலுத்தி பெற்று கொள்ளலாம். இந்த சேவையில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே டிரான்ஸ்கிரிப்ஷன்கள் கிடைக்கின்றன. வரும் நாட்களில் மற்ற மொழிகளிலும் சேவை கொடுக்கப்படும் என்று ட்ரூகாலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போனில் எப்படி பயன்படுத்துவது? ட்ரூகாலர் ஆப்பில் இருந்து கால் செய்யும்போது வழக்கம்போல டிஸ்பிளேவில் தோன்றும் கால் ரெக்கார்டிங் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் வழக்கம்போல கால் ரெக்கார்ட் செய்யப்பட்டுவிடும். பிறகு கால் கட் செய்யப்பட்ட பிறகு யூசர்களுக்கு நோட்டிபிக்கேஷன் அனுப்பப்படும்.

இந்த நோட்டிபிகேஷனில் ரெக்கார்டிங் மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் (Recordings And Transcriptions) தயார் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு யூசர்கள் ட்ரூகாலர் ஆப்பின் ரெக்கார்டிங் பக்கத்துக்கு சென்று அவற்றை பார்த்து கொள்ளலாம். இதற்கு ட்ரூகால் ஆப்பை டிபால்ட் போன் கால் ஆப்பாக (Default Phone Call App) வைத்திருக்க வேண்டும்.

ஐபோனில் எப்படி பயன்படுத்துவது? ஐபோன் யூசர்கள் கால் செய்யும்போதோ அல்லது பேசிக்கொண்டிருக்கும்போதோ ட்ரூ காலர் ஆப்புக்கு சென்று சர்ச் டேப்பில் (Search Tab) ரெக்கார்ட் ஏ கால் (Record a call) என்று கொடுக்க வேண்டும். அதன்பின் காலர் ஸ்கிரீன் தோன்றும். அப்போது, மெர்ஜ் கால் (Merge Calls) ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும் கால் ரெக்கார்ட் செய்யப்பட்டுவிடும்.

Best Mobiles in India

English summary
Truecaller Call Recording Premium Plan Price Starts From Rs 75 Per Month or Rs 529 Per Year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X