ட்ரூகாலர் செயலிக்கு இப்படியொரு சோதனையா? என்.பி.சி.ஐ எடுத்த நடவடிக்கை என்ன?

|

ட்ரூகாலர் செயலியை உலகம் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்தியாவில் ட்ரூகாலர் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த செயலி பக் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாக தகவல் வெளிவந்தது.

npci புதிய விளக்கம்

npci புதிய விளக்கம்

இந்நிலையில் ட்ரூகாலர் நடவடிக்கை எடுக்கும் முன்பே National Payments Corporation களத்தில் இறங்கியது. மேலும் ட்ரூகாலர் ஆப் மூலம் வரும் புதிய பதிவுகளை யு.பிஐ தளம் ஏற்காது என அறிவித்திருக்கிறது npci இது தொடர்பாக புதிய விளக்கம் ஒன்றையும் அந்த அமைப்பு தற்சமயம் வெளியிட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கியது

சர்ச்சையில் சிக்கியது

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரு செயலி ட்ரூகாலர். ஐசிஐசிஐ வங்கியுடன் கைகோர்த்து பேமென்ட் சேவைகளையும் இந்தியாவில் வழங்கி வருகிறது ட்ரூகாலர். உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் இந்த செயலி இப்போது சர்ச்சையில் சிக்கியது.

இராட்சஸ மெட்டாலிக் கிரகம் கண்டுபிடிப்பு! நாசா வெளியிட்ட அதிர்ச்சி உண்மை!

பக் டவுன்லோடு ஆனது

பக் டவுன்லோடு ஆனது

குறிப்பாக ட்ரூகாலரின் 10.41.6 வெர்ஷனை அப்டேட் செய்தவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை தரக்கூடிய பக் ஒன்றும் டவுன்லோடு ஆனது. பின்பு பயனர்களின் ஸ்மார்ட்போனில் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் எண் மூலம் யுபிஐ (Unified Payment Interface) கணக்கை தொடங்கியது.

குளோபல் ஸ்மார்ட்போனான விவோ எஸ்1 இன்று முதல் விற்பனை! விலை மற்றும் சலுகை விபரம்!

 ட்ரூகாலர் செயலியை அன்இன்ஸ்டால் செய்தனர்

ட்ரூகாலர் செயலியை அன்இன்ஸ்டால் செய்தனர்

மேலும் குறுஞ்செய்தி மூலம் தகவல் வந்தாலும், பெரும்பாலோர் அதைக் கவனிக்க தவறிவிட்டனர், இணையம் மூலம் இந்த பிரச்சனை பற்றிய தகவல்கள் வைரல் ஆனதும் அதிக மக்கள் உடனே ட்ரூகாலர் செயலியை அன்இன்ஸ்டால் செய்தனர்.

ட்ரூகாலர் நடவடிக்கை எடுக்கும் முன்பே...

இதை தடுக்க ட்ரூகாலர் நடவடிக்கை எடுக்கும் முன்பே National Payments Corporation of India அமைப்பு களத்தில் இறங்கியது, ட்ரூகாலர் ஆப் மூலம் வரும் புதிய பதிவுகளை யு.பி.ஐ தளம் ஏற்காது என அறிவித்திருக்கிறது npci. பின்பு இது தொடர்பான விளக்கம் ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

என்பிசிஐ-ன் செயல் அதிகாரி

என்பிசிஐ-ன் செயல் அதிகாரி

மேலும் இந்த பிரச்னை தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருப்பதாகவும், மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் என்பிசிஐ-ன் செயல் அதிகாரி திலீப் சொல்லியிருக்கிறார்.

இந்தியா: சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம்.!

 ட்ரூகாலர்  மீதான நம்பிக்கை

ட்ரூகாலர் மீதான நம்பிக்கை

குறிப்பாக இந்த பிரச்னை கட்டுக்குள் இருந்தாலும் இனி அனைவரிடம் ட்ரூகாலர் செயலி மீதான நம்பிக்கை குறைவாகவே இருக்கும். பின்பு ஸ்பேம் காலர்களை பிளாக் செய்ய அனைவரும் ட்ரூகாலர் செயலியை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Heres what NPCI has to say about the Truecaller bug : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X