Home
News

ட்ரூகாலர் ஆப்பில் முக்கிய மாற்றம்.. இனிமேல் தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வரும் போது?

வெறும் சில மாதங்களில் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து உள்ள ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) ஆனது கடந்த பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக உள்ள ட்ரூகாலர் ஆப் (TrueCaller App) முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்து உள்ளது.

தெரியாத எண்களில் இருந்து நமக்கு யார் கால் செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க உதவும் ஆப் ஆன ட்ரூகாலர் ஆப் ஆனது உலகளவில் 450 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் யூஸர்களை கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கையை தக்கவைத்து கொள்ளவும், இன்னும் அதிகரிக்கவும் ட்ரூகாலர் ஆப்பில் புதிய ஏஐ அம்சம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

ட்ரூகாலர் ஆப்பில் முக்கிய மாற்றம்!

இனிமேல் தெரியாத எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் போது, யார் அழைக்கிறார்கள் என்கிற பெயர் போன்ற விவரங்கள் மட்டுமின்றி, எதற்காக அழைக்கிறார்கள், அந்த அழைப்பின் பின்னணியில் காரணம் என்ன என்கிற விவரங்களும் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் ட்ரூகாலர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்காக உங்களுக்கு வரும் அழைப்புகளின் ஆழமான சூழலை புரிந்துகொண்டு அதை உங்களுக்கு வழங்கும் புதிய ஏஐ அம்சங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. "ஸ்பேம்" அல்லது "அன்னோன்" என்பதை காண்பிப்பதற்கு பதிலாக, ட்ரூகாலர் இப்போது சாத்தியமான மோசடி கால் என்பதை வெளிப்படுத்தும், சந்தேகத்திற்கிடமான நடத்தையை முன்னிலைப்படுத்தும் மற்றும் அழைப்பாளரின் வகையை கூட பரிந்துரைக்கும்

இந்த அம்சம் எல்லா வகையான கால்களுக்கும் பொருந்தும். உங்களை அழைப்பது - டெலிவரி சேவையாக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர் ஆதரவு துறையாக இருந்தாலும் சரி, காப்பீட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி. சுருக்கமாக, யார் அழைக்கிறார்கள் என்பதை மட்டுமின்றி, ஏன் அழைக்கிறார்கள் என்பதையும் இது உங்களுக்கு சொல்லும்.

இந்த அப்டேட்டை இன்னும் சுவாரஸ்யமாக்குவது என்னவென்றால், தகவல்கள் எவ்வளவு விரைவாக வருகின்றன என்பதுதான். யார் அழைக்கிறார்கள் அவர்கள் எதற்காக அலைகிறார்கள் என்கிற நுண்ணறிவுகள் நிகழ்நேரத்தில் உருவாக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் ஒவ்வொரு நாளும் பில்லியன் கணக்கான அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் பயனர் அறிக்கைகளிலிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஏஐ மாடல்கள் உள்ளன

எனவே, உலகின் எந்தவொரு பகுதியிலும் ஒரு மொபைல் நம்பர் ஆனது மோசடிகளுடன் இணைக்கப்பட்டிருந்தால், ட்ரூகாலர் ஆப் ஆனது மற்ற பிராந்தியங்களில் உள்ள பயனர்களையும் முன்கூட்டியே எச்சரிக்கும். இதோடு சேர்த்து ட்ரூகாலர் ஆப்பில் சில ஸ்க்ரோலிங்களை (Scrolling) மிச்சப்படுத்தும் ஒரு அம்சமும் உள்ளது.

ஸ்க்ரோலிங் செய்து-செய்து ஏஐ உருவாக்கிய பயனர் கருத்துகளை முழுதாக படிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நூற்றுக்கணக்கான மக்கள் எச்சரிக்கைகளுடன் ஒரு மொபைல் நம்பரை பிளாக் செய்து இருந்தால், அந்த எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், ரிங் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே ட்ரூகாலர் ஆப் ஆனது "ஒற்றை வரியில்"அதை சுருக்கமாக உங்களுக்கு சொல்லும். அதை வைத்து அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

இந்த அப்டேட்கள் தற்செயலாக நடக்கவில்லை. உலகளவில் ஸ்மார்ட்போன் தொடர்பான மோசடிகள் பெருகி வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், ட்ரூகாலர் ஆப் ஆனது 56 பில்லியனுக்கும் அதிகமான ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக கூறுகிறது. உலகளாவிய ஊழல் எதிர்ப்பு கூட்டணியின் அறிக்கை ஆனது கடந்த ஆண்டு உலகளாவிய மோசடி இழப்புகள் $1.03 டிரில்லியன் என மதிப்பிட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் (Fraudsters) நிமிடத்திற்கு நிமிடம் மேலும் ஆக்கப்பூர்வமாகி வருவதால், காலர் இன்டெலிஜென்ஸும் (Caller intelligence) அதே தகவமைப்புடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே ட்ரூகாலர் நிறுவனம் மேற்கண்ட ஏஐ அம்சங்களை தனது ஆப்பில் கொண்டுவர திட்டமிட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Truecaller App New AI Feature to Show Context of Unknown Call
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X