ட்ரூமெசஞ்சர் ஆப் : கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியானது..!
ட்ரூ மென்பொருள் நிறுவனம் ட்ரூ மெசஞ்சர் எனும் புதிய செயலியை வெளியிட்டுள்ளது. பெயருக்கு ஏற்றார்போல் இந்த செயலி வாடிக்கையாளர்களை குறுந்தகவல் அனுப்ப வழி செய்கின்றது. முன்னதாக இந்நிறுவனம் ட்ரூகாலர் மற்றும் ட்ரூடயலர் என இரு பிரபல செயலிகளை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரூமெசஞ்சர் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் இன்று வெளியிடப்பட்டிருப்பதோடு முதற்கட்டமாக இந்தியாவில் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரூகாலர் மற்றும் ட்ரூடயலர் போன்றே இந்த செயலியும் இலவசமாக கிடைக்கின்றது. இதை பயன்படுத்த உங்களது மொபைல் நம்பர் மூலம் உறுதி செய்தால் போதுமானது.
மற்ற குறுந்தகவல் செயலிகளை போன்று ட்ரூமெசஞ்சர் செயலியும் உங்களுக்கு வந்திருக்கும் குறுந்தகவல்களை லிஸ்ட் செய்யும், குறுந்தகவல் அனுப்பியவர்களின் பெயர்களை காட்டுவது, பதிவு செய்யாத நம்பர்களை கண்டறிவது, மற்றும் அனைத்து புகைப்படங்களின் ஓரத்திலும் ட்ரூ என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. குறுந்தகவல் செயலியாக ட்ரூமெசஞ்சர் ஆப் அனைத்து அம்சங்களையும் வழங்க தவறவில்லை என்றே கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications