வாவ்.. பாக்கவே செமயா இருக்கே.. நார்மல் இயர்பட்ஸை தூக்கிபோடுங்க.. இந்த செல்லத்தை ரூ.999 விலைக்கு தூக்குங்க..
ஸ்மார்ட்போன் (smartphone) பயன்படுத்தும் எல்லோரிடமும் ஒரு இயர்போன்ஸ் (earphones) அல்லது இயர்பட்ஸ் (earbuds) கட்டாயம் இருக்கும். ஆனால், பெரும்பாலானோர் நார்மல் டிசைன் இயர்பட்ஸ்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். நீங்கள் கொஞ்சம் தனித்துவமாக இருக்க விரும்பினால் இந்த அவூல் (owl) டிசைன் இயர்பட்ஸை வாங்கலாம்.
ரூ.3,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புதுமையான TWS இயர்பட்ஸ் சாதனம் தான் இந்த ட்ரிக்கர் க்ரகேன் X1 (TRIGGR Kraken X1) இயர்பட்ஸ் சாதனம். ஆனால், இப்பொது வெறும் ரூ.999 விலைக்கு கிடைக்கிறது. இது வித்தியாசமான மற்றும் தனித்துவனமான இயர்பஸ் சாதனம் ஆந்தை போன்ற வடிவத்தை பெற்றுள்ளது. பார்ப்பதற்கு ஆந்தையின் கண்கள் போல காணப்படும் LED பேட்டரி இண்டிகேட்டர் லைட்டிங் டிஸ்பிளேவுடன் இது வருகிறது.

ட்ரிக்கர் க்ரகேன் X1 (TRIGGR Kraken X1): இயர்பட்ஸ் சாதனம் ஹை-பிடிலிட்டி 10mm டிரைவர்களை (high fidelity 10mm driver) கொண்டுள்ளது. இது குவாட் மெம்ஸ் மைக் + இஎன்சி (Quad MEMS Mic + ENC) அம்சத்துடன் வருகிறது. இதன் 2 இயர்பட்ஸ் பீஸ்களில் மொத்தமாக 4 மைக் வழங்கப்பட்டுள்ளதனால், ஆடியோ கிளாரிட்டி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
இது ENC எனப்படும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் வருகிறது. இதனால், உங்கள் வாய்ஸ் கால்ஸ் மற்றும் மியூசிக் அனுபவம் எந்தவித சுற்றுப்புற இரைச்சலும் இல்லாமல் சிறப்பாக கேட்க அனுமதிக்கிறது. உங்கள் ஆடியோ அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல இதில் BASSXPAND தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் v5.3 இணக்கத்துடன் சிறப்பாகவும், வேகமாகவும் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் சாதனத்துடன் இணைகிறது.
இந்த ட்ரிக்கர் க்ரகேன் X1 (TRIGGR Kraken X1) இயர்பட்ஸ் சாதனம் டச் கண்ட்ரோல் அம்சத்தை ஆதரிக்கிறது. அதேபோல், இது வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் கொண்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான Ok Google அம்சமும், ஐபோன் பயனர்களுக்கான Hey siri வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சமும் இதில் உள்ளது. ட்ரிக்கர் க்ரகேன் X1 (TRIGGR Kraken X1) இயர்பட்ஸ் சாதனம் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது.

ட்ரிக்கர் க்ரகேன் X1 பிளேபேக் டைம் (TRIGGR Kraken X1 Playback Time): இந்த ட்ரிக்கர் க்ரகேன் X1 (TRIGGR Kraken X1) இயர்பட்ஸ் டிவைஸ் 90 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்கிறது. இந்த ட்ரிக்கர் க்ரகேன் X1 (TRIGGR Kraken X1) இயர்பட்ஸ் தடையில்லாத 40 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இந்த TWS இயர்பட்ஸ் டைப்-C சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. 40 மணி நேர பிளே பேக் டைம் சார்ஜிங் கேஸ் சார்ஜ் உடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை என்ன? எங்கே வாங்கலாம்? இந்த ட்ரிக்கர் க்ரகேன் X1 (TRIGGR Kraken X1) இயர்பட்ஸ் டிவைஸ் ஆரம்பத்தில் ரூ.3,999 என்ற அசல் விலையுடன் விற்பனைக்கு வந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் இதன் மீது 75% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதன் விலை ரூ.3,999 இல் மடமடவென குறைந்து வெறும் ரூ.999 விலைக்கு குறைந்துள்ளது. ஆம், இப்போது வெறும் ரூ.999 செலவில் ஒரு புதுமையான மற்றும் தரமான இயர்பட்ஸ் சாதனத்தை நீங்கள் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications