"எம்மா வீட்டை சுத்தப்படுத்து"- உத்தரவு எஜமான்: அட்டகாச ரோபோட் க்ளீனர் அறிமுகம்!

|

அலெக்சா ஆதரவோடு குரல் கட்டுப்பாட்டில் இயங்கும் ட்ரிஃபோ ரோபோ வெற்றிட கிளீனர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டுத் திறன் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

இரண்டு வெற்றிட க்ளீனர் ரோபோக்கள்

இரண்டு வெற்றிட க்ளீனர் ரோபோக்கள்

ரோபோ அடிப்படையிலான தொழில்நுட்பங்களை உருவாக்கும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ட்ரிஃபோ இந்தியாவில் இரண்டு வெற்றிட க்ளீனர் ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எம்மா ஸ்டாண்டர்ட் மற்றும் எம்மா பெட் ஆகிய இரண்டு மாடல்களும் ஸ்மார்ட் டைனமிக் வழிசெலுத்தல் அம்சங்களைக் கொண்டுள்ளன.

வைஃபை இணைப்பு மற்றும் அமேசான் அலெக்சா

வைஃபை இணைப்பு மற்றும் அமேசான் அலெக்சா

எம்மா ரோபோக்கள் வைஃபை இணைப்பு மற்றும் அமேசான் அலெக்சாவுடனான குரல் கட்டளைகளுடன் இயக்கலாம். ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ட்ரிஃபோ ஹோம் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தி எம்மா ஸ்டாண்டர்ட் மற்றும் எம்மா பெட் ஆகியவற்றை நிர்வகிக்கலாம்.

எம்மா ஸ்டாண்டர்ட், எம்மா பெட்: விலை

எம்மா ஸ்டாண்டர்ட், எம்மா பெட்: விலை

எம்மா ஸ்டாண்டர்டு விலை ரூ.21,990 மற்றும் எம்மா பெட் விலை ரூ.23,990. இந்த ரோபோ வெற்றிட க்ளீனர் தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு பண்டிகை தின விற்பனையில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 16 வரை ரூ.2000 வரை தள்ளுபடியும் கிடைக்கிறது.

எம்மா ஸ்டாண்டர்ட், எம்மா பெட்: அம்சங்கள்

எம்மா ஸ்டாண்டர்ட், எம்மா பெட்: அம்சங்கள்

ட்ரிஃபோவின் எம்மா சீரிஸ் ரோபோ வெற்றிட க்ளீனர் 2,600 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது 110 நிமிடங்கள் வரை இயங்கும் அம்சத்தை கொண்டது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இதன் பணி முடிந்ததும் அல்லது பேட்டரி சார்ஜ் குறைவாக இருக்கும் போது தாமாகவே சார்ஜிங் தளத்தை நோக்கி இயங்கும்.

ரூ.5,999-க்கு ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான வாய்ப்பு: குறுகிய காலத்திற்கு மட்டுமே!

உறிஞ்சும் சக்தி விவரங்கள்

உறிஞ்சும் சக்தி விவரங்கள்

எம்மா ரோபோவுக்கு 3,000pa வரை உறிஞ்சும் சக்தி உள்ளது. எம்மா பெட் பதிப்பு 4,000pa-க்கும் அதிகமான உறிஞ்சும் சக்தி உள்ளது. எம்மா பெட் பதிப்பில் செல்லப்பிராணிகளின் முடியை பிரித்தெடுக்கும் அம்சமும் இருக்கிறது.

600 மில்லி திறன் கொண்ட டஸ்ட்பின்

600 மில்லி திறன் கொண்ட டஸ்ட்பின்

எம்மாவில் 600 மில்லி திறன் கொண்ட ஒரு டஸ்ட்பின் உள்ளது. எம்மா வெற்றிட கிளீனரில் ஸ்மார்ட் சென்சார்கள் உள்ளன. அவை திறம்பட சுத்தம் செய்ய உதவுகின்றன. ரோபோவைக் கட்டுப்படுத்த பயனர்கள் அலெக்ஸாவைப் பயன்படுத்தலாம்.

அலெக்சா குரல் கட்டளை

அலெக்சா குரல் கட்டளை

எம்மாவை இயக்கத் தொடங்குவதற்கு Alexa Turn on Emma (அலெக்சா எம்மாவை இயக்கு) என கூறினால் போதும். எம்மா இயங்கத் தொடங்கும். அதேபோல் ட்ரிஃபோ ஹோம் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தி ரோபோவைத் தொடர்புகொள்வதற்கும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Trifo Emma Robot Vaccum Cleaner Launched in India with Amazon Alexa Voice Commands

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X