Home
News

ஆன்லைன் ஷாப்பிங், உங்க பணம் இப்படியெல்லாம் திருடப்படுவது உங்களுக்குத் தெரியுமா??

ஆன்லைன் ஷாப்பிங் நமக்கு நல்ல லாபத்தையும், அதிகம் சேமிக்கவும் வழி செய்கிறது என நம்புவோருக்கு இந்தத் தொகுப்பு சற்றே அதிர்ச்சியானதாக இருக்கும்.

By Meganathan

ஆன்லைன் ஷாப்பிங் என்பது மிகவும் சாதாரண ஒன்றாகி விட்டது. நேரடியாகக் கடைக்குச் சென்று வாங்குவதை விட ஆன்லைனில் வாங்கினால் செலவு குறைவு என்பதே இதைப் பயன்படுத்துவோர் கூறும் காரணமாக இருக்கிறது.

ஆன்லைன் ஷாப்பிங், உங்க பணம் இப்படி திருடப்படுவது உங்களுக்குத் தெரியுமா

அதிகத் தள்ளுபடி, கேஷ்பேக், இலவசங்கள் என அதிகப்படியான விளம்பரங்களில் சிக்கி நம்மவர்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குகின்றனர். தள்ளுபடி அல்லது இலவசங்களுடன் கிடைக்கும் பொருட்கள் என்றாவது அபாயத்தையும் சேர்த்தே வழங்கும் என்பதைப் பெரும்பாலான ஆன்லைன் ஷாப்பிப் பிரியர்கள் அறிந்து கொள்வதில்லை.

இங்கு ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நமது பணம் எவ்வாறெல்லாம் திருடப்படுகிறது என்பதை வழங்கியுள்ளோம். இவற்றைத் தெரிந்து கொண்டு பணத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்..

ஃபார்மிங் (Pharming)

ஃபார்மிங் (Pharming)

இந்தச் செயல்முறையில் திருடர்கள் போலி இணையத்தளம் ஒன்றை வைத்து ஏமாற்றுவர். நீங்கள் தெரியாமல் கிளிக் செய்யும் லின்க்'கள் உங்களை அச்சு அசலாக உண்மையான தளம் போன்றே தெரியும் போலி இணையத்தளம் ஒன்றிற்கு எடுத்துச் செல்லும்.

இதன் காரணமாக உங்களின் அனைத்துக் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

கீஸ்ட்ரோக் லாஃகிங் (Keystroke logging)

கீஸ்ட்ரோக் லாஃகிங் (Keystroke logging)

இங்கு நீங்கள் டவுன்லோடு செய்யும் மென்பொருள்களைப் பயன்படுத்தித் திருடர்கள் உங்களின் கீ ஸ்ட்ரோக்'களை ஆய்வு செய்து உங்களின் கடவுச்சொல், கிரெடிட், டெபிட் மற்றும் நெட் பேங்கிங் உள்ளிட்ட தகவல்களைத் திருடுவர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மால்வேர் (Malware)

மால்வேர் (Malware)

தீங்கு விளைவிக்கும் மென்பொருள்களைப் பயன்படுத்தி வங்கி சர்வர் மற்றும் ஏடிஎம் கணினிகளில் இருக்கும் தகவல்களை அழித்துப் பயனர்களின் தகவல்களை அணுகுவர்.

ஃபிஷிங் மற்றும் விஷிங் (Phishing & vishing)

ஃபிஷிங் மற்றும் விஷிங் (Phishing & vishing)

ஃபிஷிங் என்பது நம்பகமான நிறுவனங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் மூலம் தகவல்களைத் திருடுவதாகும். விஷிங் என்பது மொபைல் போனில் போலி எஸ்எம்எஸ் மூலம் தகவல்களைத் திருடுவதாகும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றிக் கடவுச்சொல், பின் அல்லது அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்டவற்றைத் திருடுவர்.

சிம் ஸ்வைப் (SIM swipe)

சிம் ஸ்வைப் (SIM swipe)

இங்கு உங்களின் போலி அடையாளச் சான்றுகளை வைத்து டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து போலி சிம் கார்டு வாங்குவர்.

பின் டெலிகாம் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தும் ஒரிஜினல் சிம் கார்டினே டி-ஆக்டிவேட் செய்திடுவர், இதைப் பயன்படுத்தி ஒன் டைம் பாஸ்வேர்டு கொண்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வர்.

பாதுகாப்பற்ற ஆப்ஸ்

பாதுகாப்பற்ற ஆப்ஸ்

பாதுகாப்பற்ற ஆப்ஸ்களைப் பயன்படுத்தும் போது உங்களின் தகவல்கள் எந்நேரத்திலும் திருடப்படும் அபாயம் அதிகம் ஆகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
tricks hackers use to steal your money while shopping Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X