Home
News

மனைவிக்காக மெக்கானிக் கண்டுபிடித்த மலிவு விலை தரமான ஏசி.!

இப்போது வரும் புதிய ஏசி மாடல்களின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு ஏசி-யை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்ற பல்வேறு நிறுவனங்கள். குறிப்பாக இப்போது
வரும் புதிய ஏசி மாடல்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் கேன்   ஈசி-ஏசி

தண்ணீர் கேன் ஈசி-ஏசி

இந்நிலையில் உடல்நலம் குறைந்து குணமடைந்துவந்த மனைவிக்காக தண்ணீர் கேன் கொண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது மலிவு விலையில் ஈசி-ஏசி வடிவமைத்துள்ளார் மெக்கானிக் அக்தர் அலி என்பவர்.

   நெ.1 டோல்கேட் :பஞ்சர் கடை

நெ.1 டோல்கேட் :பஞ்சர் கடை

அக்தர் அலி திருச்சி பக்கத்தில் நெ.1 டோல்கேட் எனும் பகுதியில் பஞ்சர் கடை நடத்திவருகிறார். அலி மெக்கானிக் மட்டுமில்லை மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு எளிய தீர்வினை கண்டுபிடித்து வரும் கண்டுபிடிப்பாளர, தேடல்விரும்பி. துல்லியமாக ஆராய்ந்து அதர்கான பல்வேறு முயற்சியை செயல்படுத்துபவர் ஆவார்.

புதிய வகை வண்டியில் பொருத்தும் ஸ்விட்ச்

புதிய வகை வண்டியில் பொருத்தும் ஸ்விட்ச்

அக்தர் அலி ஈசி-ஏசி-க்கு முன்பாகவே ஞ்சராகினாலும் டையரை பதம் பார்க்காத ‘ஆன்ட்டி பஞ்சர் பவுடர்' என்ற பவுடர், ஒரு வண்டி டயரிலிருந்து மற்றொரு வண்டி டயருக்கு காற்றை பரிமாற்றும் சாதனம், இருசக்கர வாகணங்கள் திருட்டை தடுக்கும் விதமாக புதிய வகை வண்டியில் பொருத்தும் ஸ்விட்ச் என பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 10டிகிரி செல்சியஸை குறைக்கிறது

10டிகிரி செல்சியஸை குறைக்கிறது

இவர் கண்டுபிடித்த ஆறு படைப்புகள்; குஜராத் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை நடத்தும் 11-வது பைனியல் விருது போட்டுக்குள் நுழைந்துள்ளது.

மேலும் அந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்றே ஈசி-ஏசி. இந்த ஈசி-ஏசி சிறப்பம்சம் என்னவென்றால் அடிக்கும் 37டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 10டிகிரி செல்சியஸை குறைக்கிறது இந்த இயற்கை ஏசி.

மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது

மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் அக்தர் அலி, தினசரி உழைத்தால் தான் மறுநாள் உணவு உண்ணமுடியும். அந்த சமயத்தில் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் மனைவியை மருத்துவமணையில் சேர்த்து பின்பு வீட்டுக்கு அழைத்து வந்த போது அவரால் வெக்கையை தாங்;க முடியவில்லை. ஏ.சி வாங்கவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. இன்ஸ்டால்மென்டில் கூட ஏசி வாங்கிரலாம். ஆனா, அதுக்கு வீட்டுக்காரரிடம் கேக்கணும்இ கரண்ட் பில்லு எகிறும், முக்கியமா அதை பராமரிக்கனும். எனவே அவரே வெப்பத்தை தணித்து ரூமை கூலிங் செய்யும் கருவியை உருவாக்கலாம் என்ற முயற்சியில் உருவாகியதே இந்த ஈசி-ஏசி என்றார் அக்தர் அலி.

12லிட்டர் தண்ணீர்

12லிட்டர் தண்ணீர்

அக்தர் உருவாக்கி இந்த இயந்திரம் தண்ணீர் கேனால் உருவாக்கப்பட்டுள்ளது, தண்ணீர் கேனின் மேற்பகுதிக்குள் மூங்கில் கூடை பொருத்தும் அளவிற்கு மேற்பகுதி வெட்டப்பட்டுள்ளது. தண்ணீர் கேனில் 12லிட்டர் தண்ணீர் நிரப்பி அதனுள் கூழாங்கற்கள், செங்கலும் வைத்துள்ளார். பின்பு மேற்பகுதியில் உள்ள மூங்கிவ் கூடையில் வெட்டிவேர் சிறிதளவு நிரப்பி வைத்துள்ளார்.

கேனின் அடியில் சிறிய மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது, இந்த மோட்டார் இயங்குகையில் மோட்டரில் பொறுத்தப்பட்டுள்ள குழாயின் வழியாக கேனில் உள்ள நீரானது மேலேயுள்ள மூங்கில் கூடைக்கு சென்று அதில் இருக்கும் வேட்டிவேரை நனைத்து மீண்டும் கேனுக்குளே ஊற்றுகிறது. இதன் விளைவாக வெட்வேர் வாசத்துடன் குளிர்ந்த காற்று அறையை நிரப்புகிறது.

  ஒரு தண்ணீர் கேன் கொண்ட ஏசி  ரூ.2,500

ஒரு தண்ணீர் கேன் கொண்ட ஏசி ரூ.2,500

இதுவரை உள்ளூர், வெளியூர் என 100 பேருக்கு இந்த ஏசியை தயாரித்து கொடுத்துள்ளார் அக்தர் அலி. குறிப்பாக ஒரு தண்ணீர் கேன் கொண்ட ஏசி ரூ.2,500 இரண்டு கேன்கள் எனில் ரூ.3500 என்று விற்பனை செய்து வருகிறார். இவர் தொழில் ரீதியாக மெக்கானிக்காக இருந்தாலும், புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார், அதன் விளைவாக புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

Best Mobiles in India

English summary
trichy-mechanic-created-low-cost-ac-using-water-cans-pebbles : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X