போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!

|

திருச்சி மாவட்டம் மணப்பாறையை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் என்ற இந்தியன் வங்கி காசாளர், வங்கிக்கு வரும் பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி, அந்த பெண்களுடன் 400க்கும் மேற்பட்ட ஆபாசமாக வீடியோ எடுத்து ரசித்துவந்துள்ளார். ஆபாசப் படங்கள் ஏற்றி வைத்த லேப்டாப், சிடி மற்றும் ஹார்டு டிஸ்க்கை எங்குப் பதுக்கி வைத்துள்ளார் என்பதை அறிந்துகொள்ள போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

மனைவியுடன் பழகுவதைத் தவிர்த்த கணவர்

மனைவியுடன் பழகுவதைத் தவிர்த்த கணவர்

இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வரும் இவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாளிலிருந்து எட்வின் ஜெயக்குமார் தன் மனைவியுடன் பழகுவதைத் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. எட்வினின் கவனம் முழுமையாக அவரின் செல்போனில் இருந்துள்ளது.

பீரோவை திறந்து பார்த்து அதிர்ந்து போன மனைவி

பீரோவை திறந்து பார்த்து அதிர்ந்து போன மனைவி

இதனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மனைவி, எட்வின் ஜெயக்குமாரின் பீரோவைத் ஆராய்ந்து பார்த்து அதிர்ந்துபோனார். எட்வினின் மனைவி அவரின் பீரோவை திறந்து பார்த்த போது அதில் 12 செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் இருந்துள்ளது. செல்போன் மற்றும் லேப்டாப்பை ஆராய்ந்து பார்த்த மனைவிக்கு இன்னும் பல அதிர்ச்சிகள் அடுக்கடுக்காக ஒன்றன்பின் ஒன்றாக வந்துள்ளது.

டெபிட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இனி புதிய விதிகள்? செப்.30, முதல் நடைமுறைக்கு வரும் RBI உத்தரவுடெபிட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இனி புதிய விதிகள்? செப்.30, முதல் நடைமுறைக்கு வரும் RBI உத்தரவு

பல பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள்

பல பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள்

மனைவி ஆராய்ந்த செல்போன் மற்றும் லேப்டாப்பில் பல பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது. இதில் பல புகைப்படம் மற்றும் வீடியோக்களில் எட்வின் ஜெயக்குமார் வேறு சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆதாரங்களும் சிக்கியுள்ளது.

400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோவா?

400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோவா?

அத்தோடு பல பெண்களுடன் அவர் அந்தரங்கமாகப் பேசிய ஆடியோவும், அவர் சாட் செய்த மெசேஜ்களும் இருந்துள்ளது. சுமார் 400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததாக அவர் மனைவி கூறியுள்ளார்.கணவனின் அந்தரங்கம் பற்றி அறிந்த மனைவி, கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

உஷார்: பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது.,அதிர்ச்சி சம்பவம்-எப்படி தெரியுமா?உஷார்: பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது.,அதிர்ச்சி சம்பவம்-எப்படி தெரியுமா?

வங்கிக்கு வரும் பெண்களிடம் ஆசை பேச்சு

வங்கிக்கு வரும் பெண்களிடம் ஆசை பேச்சு

இதனை தொடர்ந்து போலீசார் விசாரித்த விசாரணையில், எட்வின் ஜெயக்குமார் வங்கிக்கு வரும் பெண்களிடம் ஆசையாக பேசி அவர்களை தனது வலையில் சிக்கவைத்துள்ளார். அவர்களுடன் நெருக்கத்தை உருவாக்கி உல்லாசமாக இருக்கும் நிகழ்வுகளை வீடியோவாக படம்பிடித்துள்ளார்.இதை ஒரு பொழுதுபோக்கு போல எட்வின் ஜெயக்குமார் செய்து வந்திருக்கிறார்.

மனைவியின் மீது ஆர்வமில்லாமல் போனதற்கு இதான் காரணமாம்

மனைவியின் மீது ஆர்வமில்லாமல் போனதற்கு இதான் காரணமாம்

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த படங்களை ரசித்து பார்த்து வந்ததால் தனது மனைவியின் மீது ஆர்வமில்லாமல் போனது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். பிரச்னை செய்யும் சில பெண்களை இவர் மிரட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மனைவி கொடுத்த புகாரின் பெயரில் இவரைக் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர்.

ஜாமீன் கேட்டு மனுதாக்கல்

ஜாமீன் கேட்டு மனுதாக்கல்

சுமார் 6 மாதம் தலைமறைவாக இருந்த எட்வின் ஜெயக்குமார் கடந்த 10-ந்தேதி கைது செய்யப்பட்டு லால்குடி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் மணப்பாறை ஜே.எம். கோர்ட்டில் எட்வின் ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

ஆதாரங்களை மறைத்துவைத்திருக்கிறாரா?

ஆதாரங்களை மறைத்துவைத்திருக்கிறாரா?

ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது மனைவியும், போலீசாரும் தனித்தனியாக ஆட்சேபனை மனு சமர்ப்பித்துள்ளனர். இதனால் இவரின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.எட்வின் ஜெயக்குமார் இன்னும் சில செல்போன் மற்றும் லேப்டாப்களில் பெண்களின் புகைப்படம் மற்றும் ஆதாரங்களை மறைத்துவைத்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு இளம்பெண் மரணம்

ஒரு இளம்பெண் மரணம்

இதனால் அவரின் போலீசார் கூடுதல் விசாரணையை நடத்தி வருகின்றனர். இதில் எட்வின் ஜெயக்குமாரின் செல்போனில் உள்ள புகைப்படங்களிலிருந்த ஒரு இளம்பெண் இறந்திருக்கும் நிலையில் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Trichy Bank Cashier Arrested For Helding 400 Plus Videos Of Lady Customers In Smartphone and Laptop : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X