டிவி பார்க்கும்போது மொபைலில் துழாவும் இளைய சமுதாயம்!

By Super
|

டிவி பார்க்கும்போது மொபைலில் துழாவும் இளைய சமுதாயம்!
பியூ ரிசர்ச் என்று நிறுவனம் சமீபத்தில் ஒரு நூதனமான சர்வேயை எடுத்தது. அதாவது டிவி பார்க்கும் போது எத்தனை இளைஞர்கள் மொபைலைபோனை இயக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற சர்வேயை எடுத்தது. இந்த சர்வே கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது. இதில் 2,254 இளம் ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த சர்வேயின் முடிவில் 52 சதவீதம் பேர் டிவி பார்க்கும் போது பல்வேறு காரணங்களுக்காக தமது மொபைல்களைப் பயன்படுத்துவதாக் கூறி இருந்தனர். அவ்வாறு டிவி பார்க்கும் போது மொபைலைப் பயன்படுத்துவோரில் 38 சதவீதம் போர் விளம்பர இடைவேளையில் தங்களது மொபைலைப் பயன்படுத்துவதாகக் கூறியிருக்கின்றனர். 23 சதவீம் பேர், இன்னொரு இடத்தில் இருந்து இதே டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமது நண்பர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதாகக் கூறியிருந்தனர்.

இதில் 22 சதவீதம் பேர் டிவி நிகழ்ச்சியில் சொல்லப்படுபவை உண்மையா அல்லது பொய்யா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக தனது மொபைல்களைப் பயன்படுத்துகின்றனர். 20 சதவீதம் பேர் அந்த டிவி நிகழ்ச்சியில் சொல்லப்படும் இணைய தளங்களை உடனே பார்ப்பதற்காக தமது மொபைல்களைப் பயன்படுத்துகின்றனர்.

11 சதவீதம் பேர் அந்த டிவி நிகழ்ச்சியைப் பற்றி ஆன்லைனில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிவதற்காக தமது மொபைல்களைப் பயன்படுத்துகின்றனர். அதோடு 11 சதவீதம் பேர் தாம் பார்க்கும் நிகழ்ச்சியை உடனே ஆன்லைனில் கருத்துக்களை அளிப்பதற்காக தமது மொபைல்களைப் பயன்படுத்துகின்றனர். இறுதியாக 6 சதவீதம் பேர் மட்டுமே ரியாலிட்டி நிகழ்ச்சி நடத்தும் போட்டியில் தமது வாக்குகளை அளிப்பதற்காக நிகழ்ச்சியின் போது தமது மொபைல்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதிலும் குறிப்பாக சாதாரண போன் வைத்திருப்பவர்களைவிட ஸ்மார்ட் போன்களை வைத்திருப்போர்தான் இவ்வாறு டிவி நிகழ்ச்சியின் போது அதிகமாக தமது மொபைல்களைப் பயன்படுத்துகின்றனர். அதாவது நிகழ்ச்சியின் போது ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் 74 சதவீதமும், சாதாரண போன் வைத்திருப்போர் 27 சதவீதமும் பயன்படுத்துகின்றனர்.

இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. அதாவது நமது இளைஞர்களால் டிவி நிகழ்ச்சிகளைக் கூட நிம்மதியாக பார்க்க முடிவதில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X