கால் டிராப் ஆகாத ஜியோ: வோடபோன் ஐடியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் புஸ்.!

ரயில் மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட பயணங்களை நாம் மேற்கொள்ளும் போது, போன்களுக்கு சிக்னல் கிடைப்பது குறித்தும் அப்படியே பேசினாலும் கால் டிராப் ஆவது குறித்து தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணை

|

ரயில் மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட பயணங்களை நாம் மேற்கொள்ளும் போது, போன்களுக்கு சிக்னல் கிடைப்பது குறித்தும் அப்படியே பேசினாலும் கால் டிராப் ஆவது குறித்து தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆய்வு நடத்தியது.

கால் டிராப் ஆகாத ஜியோ: வோடபோன் ஐடியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் புஸ்.!

இதில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், போடபோன் ஐடியா, ஏர்டெல் 2ஜி 3ஜி உள்ளிட்ட நெட்வொர்குகள் தேர்வாக வில்லை.

இந்திய தொலைத்தொடர்புத்துறைக்கு வந்த ஜியோ நிறுவனம் மட்டும் தேர்வாகியுள்ளது. இதை டிராய் தெளிவாக தெரிவித்துள்ளது.

கால் டிராப் பிரச்னை:

கால் டிராப் பிரச்னை:

இந்திய தொலைத் தொடர்புத்துறை ஆணையம் (டிராய்) பயணத்தின் போது கால் சிக்னல் மற்றும் கால் டிராப் பிரச்னை ஏற்படுவது குறித்து ஆய்வு நடத்தியது. மேலும் இதில் சிறப்பான சேவை வழங்கும் நிறுவனம் குறித்தும் தேர்வு செய்ய அறிவித்துள்ளது.

ஆய்வு செய்த டிராய்:

ஆய்வு செய்த டிராய்:

8 சாலைகள் மற்றும் 3 ரயில்வே வழித்தடங்களில் டிராய் இதுகுறித்த ஆய்வை நடத்தியது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தவிர எல்லா நிறுவனங்களும் கால் டிராப் பிரச்னையில் சிக்கி இருப்பது உறுதியானது.

 பிஎஸ்எல்எல்:

பிஎஸ்எல்எல்:

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் டிராயின் சேவையில் தேர்வாக வில்லை. பயணத்தின் போது கால்டிராப் பிரச்னையில் சிக்கி வருகின்றது.

போடபோன் ஐடியா:

போடபோன் ஐடியா:

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துள்ள வோடபோன்ஐடியா நிறுவனம். சாலை மற்றும் ரயில்வே போக்குவரத்து பயணத்தின் போது இந்த நிறுவனம் கால்டிராப் பிரச்னையில் சிக்க தவித்து உள்ளது. இதனால் இந்த நிறுவனம் தேர்வாக முடியவில்லை.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் இதற்கு விதிவிலக்காவில்லை. கால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளது. ஆனாலும், இதன் 2 ஜியும் 3 ஜியும் மொத்தமாக சோதப்பியுள்ளன.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

டிராய் நடத்திய சோதனையின் போது எந்தவித கால்டிராப் பிரச்னையிலும் சிக்காமல் ஜியோஇருந்துள்ளது. சிறந்த சேவையளிக்கும் நிறுவனமான ஜியோ இருக்கின்றது என்று தெரிவித்துள்ளது.

குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஜியோவுக்கு மேலும் இந்திய தொலைத் தொடர்பு துறையின் வளர்ச்சிக்கும் இது உதவும் என அந்த நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
travelling in train this is the best mobile network according to trai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X