டிரான்ஸ்சென்ஸ் இது மாற்றுத்திறனாளிகளுக்கான அப்ளிகேஷன், இத படிங்க முதல்ல

Written By:

காது கேளாதவர்களையும் தகவல் பறிமாற உதவும் ப்ரெத்யேக ஆப் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்சென்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் வார்த்தைகளை எழுத்துக்களாக மாற்றி ஸ்மார்ட்போனில் காட்டும்.ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு அப்ளிகேஷன், இத படிங்க முதல்ல

சான் பிரான்சிஸ்கோ மற்றும் பெர்கிலி பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்களின் முயற்சியில் உருவான இந்த ஆப் காது கேளாதவர்களையும் பேச வைக்கும் நோக்கத்தில் கண்டறியப்பட்டுள்ளது. காது கேளாதவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஆப் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

டிரான்ஸ்சென்ஸ், குழு விவாதங்களில் ஒவ்வொருவரின் குரல்களையும் கண்டறிந்து தனித்தனியாக பிரித்து அவைகளை ஸ்மார்ட்போனில் பல வண்னங்களில் எடுத்துக்காட்டும், இது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வொருவரின் குரலையும் கண்டறிய வசதியாக இருக்கும்.

சந்தையில் இன்னும் வெளியாகாத இந்த அப்ளிகேஷன் தற்சமயம் மேம்படுத்தும் தளத்தில் சிறு எண்னிக்கை பயனாளிகள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர், இப்போதைக்கு ஆன்டிராய்டில் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆப் விரைவில் ஐஓஎஸ் களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

டிரான்ஸ்சென்ஸ் தற்சமயம் ஆங்கிலத்தில் மட்டும் இயங்குகிறது, இது முழுமையானதும் விரைவில் மற்ற மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்த அப்ளிகேஷனை நாள் ஒன்றுக்கு 5 - 10 மணி நேரம் வரை பயன்படுத்தினால் பணம் செலுத்த தேவையில்லை, ஆனால் அதை மீறி பயன்படுத்தினால் மாதம் 29 டாலர்கள் பணம் செலுத்த வேண்டும்.

தற்சமயம் குரலை வார்த்தைகளாக மாற்றும் இந்த அப்ளிகேஷன் எதிர்காலத்தில் வார்த்தைகளை குரலாக பிரதிபலிக்கும் அம்சமும் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சந்தைகளில் வெளியாகாத நிலையில் டிரான்ஸ்சென்ஸ் அப்ளிகேஷனுக்கு இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டதென்றே கூறலாம்.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/vvoglCTd6x8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
Transcense App Talk With Any Deaf Person. This App Created For deaf people will allow you to communicate with them without any trouble.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot