ஆந்திரா செல்போன் திருட்டு டிரைனிங் சென்டர்., 4 வருஷம் அனுபவம்., திருடர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

|

ஆந்திரா செல்போன் திருட்டு டிரைனிங் சென்டரில் இருந்து அனுபவம் பெற்றுள்ளதாக திருடர்கள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு சம்பவம் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே வருகிறது. அதுவும் கூட்டம் அதிகமாக கூடும் இடத்தில் செல்போன் திருட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது மாறி வருகிறது.

செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம்

செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம்

பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம்.

சர்வ சாதாரணமாக கடக்கமுடியாத விஷயம்

சர்வ சாதாரணமாக கடக்கமுடியாத விஷயம்

செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நமது மொத்த தகவலும் புகைப்படம் என அனைத்தும் உட்பட வங்கி கணக்கு முதல் செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதை தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது.

இருவரை கைது செய்த போலீஸார்

இருவரை கைது செய்த போலீஸார்

குறிப்பாக செல்போன் திருட்டு சென்னையில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தான் சென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

jio vs vodafone: தினசரி 3 ஜிபி டேட்டா அதே விலையில்., நேருக்கு நேர் மோதும் திட்டங்கள்- எது சிறந்தது?jio vs vodafone: தினசரி 3 ஜிபி டேட்டா அதே விலையில்., நேருக்கு நேர் மோதும் திட்டங்கள்- எது சிறந்தது?

ஆந்திராவில் பயிற்சி எடுத்த திருடர்கள்

ஆந்திராவில் பயிற்சி எடுத்த திருடர்கள்

செல்போன் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆந்திராவில் திருடுவதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குமூலம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

போலீஸாருக்கு தொடர் புகார்கள்

போலீஸாருக்கு தொடர் புகார்கள்

சென்னை தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன் திருட்டு சம்பந்தமாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அப்பகுதிகளில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

11 செல்போன்கள் பறிமுதல்

11 செல்போன்கள் பறிமுதல்

இந்த நிலையில், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு பயணி பேருந்தில் ஏறும் போது செல்போன் திருடிய இருவரை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவர்களோடு வந்ததாக கூறப்பட்ட மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதே தொழிலாக வைத்திருந்தது அமல்

இதே தொழிலாக வைத்திருந்தது அமல்

செல்போன் திருடி கையும் களவுமாக கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த வெங்கடேசன், தமிழ்குமார் என அடையாளம் தெரியவந்தது. மேலும் அனைத்து வார இறுதி நாட்களிலும் இவர்கள் செல்போன் திருட்டையே தொழிலாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

வாக்குமூலத்தில் போலீஸார் அதிர்ச்சி

வாக்குமூலத்தில் போலீஸார் அதிர்ச்சி

இந்த வாக்குமூலத்தில் மேற்கு கோதாவரி, ஹக்கிவீடு போன்ற பகுதிகளில் செல்போன்களை திருடுவதற்கு என்றே பயிற்சி பெற்றதும் 2016 ஆம் ஆண்டில் இருந்தே இதே தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களின் வாக்குமூலத்தில் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Trained cellphone snatchers arrested by chennai police

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X