Home
News

TRAI கொடுத்த எச்சரிக்கை.. 9-ம் நம்பரை மட்டும் அழுத்திடாதீங்க.. இந்த நம்பரிலிருந்த போன் வந்தா உஷார் மக்களே..

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு அவசரமான எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. TRAI பெயரில் நடைபெறும் புதுவகையான கல்லின் ஸ்கேம் மோசடி (TRAI calling scam) குறித்த தகவலை டிராய் தற்போது வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் பயன்பாட்டாளர்கள் அவர்களின் போனில் 9 ஆம் நம்பரை அழுத்திட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. ஏன் 9 ஆம் நம்பரை அழுத்த கூடாது? மீறி அழுத்தினால் என்னவாகும்? TRAI ஏன் இவ்வளவு சீரியஸாக பொதுமக்களை எச்சரிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவில் தற்போது ஸ்கேம் (scam), பிஷ்ஷிங் (phishing), ஹனி டிராப்பிங் (honey trapping), ஆன்லைன் மோசடி (online scam) என்று பல்வேறு விதமான மோசடிகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதில் பல மோசடிகள், பொதுமக்களின் ஸ்மார்ட்போனை (smartphone based scams) குறிவைத்து நடத்தப்படுகிறது. மோசடிக்காரர்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்கள் தற்போது பெருகிவிட்டார்கள். இவர்கள் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு புது புது ஐடியாவுடன் புதிய மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

TRAI கொடுத்த எச்சரிக்கை.. 9-ம் நம்பரை மட்டும் அழுத்திடாதீங்க..

TRAI கொடுத்த எச்சரிக்கை.. உங்க போன்ல 9-ம் நம்பரை மட்டும் அழுத்திடாதீங்க..

அப்படி, சமீபத்தில் பொதுமக்களை அதிகம் பாதித்த மோசடியாக டிராய் காலிங் ஸ்கேம் (TRAI Calling Scam) என்ற ஆட்டோமேட்டட் அழைப்பு மோசடி (automated voice call scam) பதிவாகியுள்ளது. இந்த மோசடியில் TRAI அதிகாரிகள் (TRAI official authority) போல, மோசடி செய்யும் நபர்கள் அவர்கள் பாவித்து, பொதுமக்களை பீதியடைய செய்து, அவர்களிடம் இருந்து பணத்தை திருடி வருகிறார்கள்.

இதற்கு ஏமாறாத மக்களை ஆட்டோமேட்டட் வாய்ஸ் கால்ஸ் மூலம் நம்ப வைத்து ஏமாற்றும் நூதனமுறை மோசடி தற்போது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைமான TRAI-ன் பெயரில் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மோசடி மற்றும் மொபைல் மூலம் நடைபெறும் மோசடிகளை (mobile based scams) தடுக்க இந்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்படி சமீபத்தில் அரசாங்கம் டிஜிட்டல் அர்ரெஸ்ட் (Digital arrest) குறித்த விழிப்புணர்வு செய்தியை மொபைல் பயனர்களுக்கு வழங்க துவங்கியது.

இந்த நம்பரிலிருந்த போன் வந்தா உஷார் மக்களே.. TRAI எச்சரிக்கை:

மோசடிக்காரர்கள் இப்போது, டிஜிட்டல் அர்ரெஸ்ட் தொடர்பான விழிப்புணர்வு செய்தி போன்ற போலியான செய்தியை வாசிக்கும் புது ஆட்டோமேட்டட் வாய்ஸ் கால்ஸ் மூலம் மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருகிறார்கள். இத்தகைய போலியான அழைப்புகள் எல்லாம், உங்கள் போனிற்கு +977 என்ற இன்டர்நேஷனல் கோட் (international code) உடன் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த அழைப்பில் பேசும் நபர் தன்னை டெலிகாம் ரெகுலேட்டரி அதிகாரி என்று கூறி, இந்த அழைப்பு நேரடியாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து வருவதாக கூறி, இந்த எண்ணுடைய அழைப்பை பெரும்பாலும் மக்கள் ஏற்க வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. உங்கள் மொபைல் எண்ணிலிருந்து சட்டவிரோத செயல்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதால், உங்கள் மொபைல் எண் இடைநிறுத்தப்படுவதாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கூறுவார்.

எண் 9 ஐ அழுத்த சொன்னால் அழுத்திவிடாதீர்கள்.. டிஜிட்டல் அரெஸ்ட் ஆபத்து:

மேலும் விவரங்களை அறிய, எண் 9 ஐ அழுத்தவும்... என்று வாய்ஸ் காலில் கூறப்படும். இதை கிளிக் செய்த பிறகு நீங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று ஒரு நபர் உங்களை மொபைல் மூலமாக கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்று தெரிவிப்பார். உங்கள் தனிநபர் தகவல்களை சேகரிக்க பார்ப்பார். உங்கள் வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகை அனுப்பப்பட்டுள்ளது. இதை உறுதி செய்ய உங்கள் வங்கி விபரங்களை பகிரும்படி கேட்கப்படுவீர்கள்.

இந்த கைதில் இருந்து தப்பிக்க நீங்கள் அபராத தொகை செலுத்த வேண்டுமென்று உங்களை வற்புறுத்தி, பயமுறுத்தி உங்களிடம் இருந்து பணம் பிரிப்பார்கள். இத்தகைய சந்தேகத்திற்குரிய அழைப்புகளை நீங்கள் சந்திக்க நேரிட்டால், உடனே காலம் தாமதிக்காமல் அழைப்பை துண்டிக்கும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால், அவற்றை நம்ப வேண்டாம். ஆகையால், பொதுமக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்கும் படி TRAI எச்சரித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TRAI Warns About Fake TRAI Calling Scam and Digital Arrest By Scammers Don't Press Number 9 On Dial Pad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X