ஒருவழியாக.. Jio, Airtel-ன் அநியாய விலை உயர்விற்கு ஆப்பு அடித்த TRAI.. வருகிறது Voice, SMS Only திட்டங்கள்!
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய மூன்று தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலைகள் - திடீரென மற்றும் கடுமையாக உயர்த்தப்பட்டதற்கு.. இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெரிய அளவிலான கண்டனமும், எதிர்ப்பும் எழாமல் இருந்த நிலைப்பாட்டில்.. டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது டெலிகாம் கஸ்டமர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் படியான.. ஒரு அட்டகாசமான வேலையை பார்த்துள்ளது!
டெலிகாம் நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் மதிப்பாய்வு (Review of Telecom Consumer Protection Regulation) என்கிற தலைப்பின்கீழ் டிராய் ஒரு ஆலோசனை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆலோசனை கட்டுரையின் வழியாக.. மீண்டும் வாய்ஸ்-ஒன்லி மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற கருத்தை டிராய் முன்வைத்துள்ளது.

அறியார்தோர்க்கு, வாய்ஸ்-ஒன்லி திட்டங்கள் என்றால் டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற வேறு எந்த நன்மைகளையும் வழங்காமல் வாய்ஸ் கால் நன்மையை மட்டும் வழங்கும் திட்டங்கள் ஆகும். இதேபோல எஸ்எம்எஸ் -ஒன்லி திட்டங்கள் என்றால் டேட்டா, வாய்ஸ் கால் போன்ற வேறு எந்த நன்மைகளையும் வழங்காமல் எஸ்எம்எஸ் நன்மையை மட்டும் வழங்கும் திட்டங்கள் ஆகும்.
இதுபோன்ற வாய்ஸ்-ஒன்லி மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டங்களை அல்லது வவுச்சர்கள் ஆனது.. டேட்டா + வாய்ஸ் கால் + எஸ்எம்எஸ் + கூடுதல் நன்மைகளை வழங்கும் பேஸிக் ரீசார்ஜ்களை கூட அதிக கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்ய முடியாத பயனர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும். எது தேவையோ அந்த வவுச்சரை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். தேவையில்லாத நன்மைகளுக்காக அதிக பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்காது.
கடந்த 2016 இல் ஜியோ அறிமுகமானத்தில் இருந்து இந்திய தொலைத்தொடர்புத் துறை ஒரு பெரிய பரிணாமத்தை அடைந்துள்ளது. ஜியோவிற்கு முன் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் குரல் ஒன்லி வவுச்சர்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் விருப்பம் நுகர்வோர்களுக்கு இருந்தது. அந்த விருப்பம் இப்போது இல்லை. தற்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் திட்டங்கள் எல்லலாமேடேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் என அனைத்தையும் தொகுத்து வழங்குகின்றன.
2024 ஜூலை மாத தொடக்கத்தில் அமலுக்கு வந்த விலை உயர்விற்கு முன்பு வரையிலாக எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அதன்பின் நிலைமை அப்படி இல்லை. 4ஜி / 5ஜி திட்டங்களின் விலைகளே இவ்வளவு உயர்த்தப்பட்டால்.. பிரத்யேக 5ஜி திட்டங்களின் விலைகள் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் எழத்தொடங்கியுள்ளது.
சமீபத்திய விலை உயர்வானது அந்த அளவிற்கு மோசமானதாக இருந்தது. இதுவே மீண்டும் வாய்ஸ்-ஒன்லி மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற பேச்சுக்கு அடிபோட்டுள்ளது. சில சூழ்நிலைகளில், நுகர்வோர்களுக்கு டேட்டா நன்மை எதுவும் தேவைப்படாது. இருந்தாலும் கூட அவர்களுக்கு பணம் செலுத்துவதை தவிர வேறு வழியும் இருக்காது. இதற்கு வாய்ஸ்-ஒன்லி மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டங்களின் மருவருகையே ஒரே தீர்வாக இருக்கும்!
டிராய் வெளியிட்டுள்ள ஆலோசனை கட்டுரையில்.. டேட்டா மற்றும் வாய்ஸ் & எஸ்எம்எஸ் ஆகிய சேவைகளை உள்ளடக்கிய, தொகுக்கப்பட்ட திட்டங்கள் இருந்தாலும் கூட, பல நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தாத டேட்டாவிற்கு பணம் செலுத்துவதை காண முடிகிறது. நுகர்வோர் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், அனைத்து சந்தாதாரர்களுக்கும் அனைத்து சேவைகளும் தேவைப்படாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் சந்தாதாரர்களால் தத்தம் திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் தடைகள் இருக்க கூடாது. எனவே வாய்ஸ்-ஒன்லி மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் டிராய் ஆலோசனை வழங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications








