Trai அதிரடியாக சேனல்களின் விலையை குறைக்க உத்தரவு! கடுப்பில் ஒளிபரப்பு நிறுவனங்கள்!
தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர் டிராய், தேசிய கட்டண உத்தரவுடன்(NTO) ஒளிபரப்புத் துறையில் வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்க சில பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அதிகரித்த மாத சந்தா விலைகள், விலையுயர்ந்த தனிப்பட்ட சேனல்கள், போக்கே பேக்ஸ் மற்றும் ஆபரேட்டர்களிடமிருந்து துணை சமமாகச் செயல்படுத்தப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் NTO 1.0 பின்தங்கிவிட்டது.

போக்கே பேக்: ஏ-லா-கார்டே சேனல்கள்
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இப்போது இந்த சிக்கல்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டு, ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி புதிய திருத்தங்களை வெளியிட்டுள்ளது. டிராய் கொண்டுவரப் போகும் ஒரு முக்கிய மாற்றங்களில் ஒன்றானது, போக்கே பேக்-ல் சேர்க்கக்கூடிய ஏ-லா-கார்டே (a-la-carte) அல்லது தனிப்பட்ட சேனல்களின் கேப் விருப்பம் ஆகும்.

அதிகபட்ச விலையை குறைந்த டிராய்
டிராய், தனது ஒளிபரப்பாளர்களுக்குப் போக்கே பேக் மூலம் ரூ.19 வரை மதிப்புள்ள ஏ-லா-கார்டே சேனல்களை சேர்க்க அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த சேனல்களின் விலைகள் அதிகமாக இருப்பதை உணர்த்த டிராய், தற்பொழுது, இந்த சேனல்களுக்கான அதிகபட்ச விலையாக ரூ.12 மட்டுமே இருக்க வேண்டும் என்று விலையை குறைத்து நிர்ணயம் செய்துள்ளது. இந்த முயற்சியை மக்கள் விரும்புவார்கள் என்று டிராய் நம்புகிறது.

மாதாந்திர டிவி சந்தா செலவு குறைக்க முடிவு
இந்த புதிய நடவடிக்கையின் மூலம், டிராய் ஒளிபரப்புத் துறையில் சில வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர எதிர்பார்க்கிறது மற்றும் மாதாந்திர டிவி சந்தா செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. போக்கே பேக்கில் சேர்க்கப்பட்ட ஏ-லா-கார்டே சேனல்கலுக்கு வெறும் ரூ.12 என்ற விலையை டிராய் தற்பொழுது நிர்ணயம் செய்து, பழைய விலையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

NTO 1.0-ல் இருந்த சிக்கலை கவனித்த டிராய்
டிராய்-ன் இந்த புதிய விதியின் ஒரு பகுதியாக, ஒளிபரப்பாளர்கள் தங்கள் போக்கே பேக்கில் ரூ.12-க்கு மேல் விலை கொண்ட தனிப்பட்ட சேனல்களை சேர்க்கக் கூடாது. NTO 1.0-ல், சந்தாதாரர்களைக் கவர்ந்திழுக்க, ஒளிபரப்பாளர்கள் போக்கே பேக்குகளில் அதிக தள்ளுபடியை வழங்கியதை டிராய் கவனித்துள்ளது. இந்த நடவடிக்கை ஒளிபரப்புத் துறையைக் கொண்டு வர விரும்பிய வெளிப்படைத்தன்மை காரணிக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது.

எம்.ஆர்.பி விலையில் சேனல்கள்
தேசிய கட்டண ஆணையை (NTO) கொண்டுவருவதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் சந்தாதாரர்களுக்கு அவர்கள் பார்க்க விரும்பும் சேனல்கள் பற்றி சுதந்திரம் அளிப்பதும், எம்.ஆர்.பி விலையில் அந்த சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்துவது நோக்கமாகும்.

பல உள்ளூர் நீதிமன்றங்களில் வழக்கு
டிராய் கட்டண ஆணையின் திருத்தங்களை அறிவித்த உடனேயே, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் கீழ் ஒளிபரப்பாளர்கள் பல உள்ளூர் நீதிமன்றங்களில் நிவாரணம் கோரி அணுகியுள்ளனர். டிராயின் இந்த நடவடிக்கை பல பிரபலமான சேனல்களின் விலையைக் குறைக்கக் கட்டாயப்படுத்துவதால், நிச்சயமாக அவர்களின் வருவாயைக் குறைக்கும் என்பதனால் நிறுவனங்கள் வழக்குத் தொடுத்துள்ளது.

இறுதி வழக்கு விசாரணைக்கு டிராய் ரெடி
இருப்பினும், இந்த முடிவு டிராய்க்கு சாதகமாக இருக்கும், ஒளிபரப்பாளர்களுக்குச் சாதகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை பிப்ரவரி 12 அன்று நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications