இனி அதற்கு 3 நாள்தான்: வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்திய டிராய்

|

டிராய் அமைப்பு தொரடந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக டிராய் அமைப்பு பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் விரைவானமொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி(Mobile Number Portability - MNP)மொபைல் எண் பெயர்வுதிறன் (எம்.என்.பி) என்பது செல்போன் வாடிக்கையாளரை அதே தொலைபேசி எண்ணின் கீழ் மற்றொரு டெலிகாம் சேவைக்குள் அனுமதிக்கும ஒரு சேவையாகும்.

எம்.என்.பி தற்போது வரையிலாக எப்படி செயல்படுகிறது?

எம்.என்.பி தற்போது வரையிலாக எப்படி செயல்படுகிறது?

இந்த எம்.என்.பி தற்போது வரையிலாக எப்படி செயல்படுகிறது என்றால், இதன் செயல்முறை வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களை எடுத்துக் கொள்கிறது. இதனால் குறிப்பிட்ட ஆப்ரேட்டரிலிருந்து இன்னொரு ஆப்ரேட்டருக்கு மாற முயற்சிக்கும் சந்தாதாரர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான இருக்கிறது.

டிராய் அமைப்பு

டிராய் அமைப்பு

இதனை கருத்தில் கொண்டு, டிராய் அமைப்பு எம்.என்.பியை சார்ந்த விதிகளை மாற்றியுள்ளது, இந்த புதிய விதிகள் ஆனது எம்.என்.பியை சார்ந்த விதிகளை மாற்றியுள்ளது, இந்த புதிய விதிகள் கண்டிப்பாக சந்தாதார்கள் சந்திக்கும் தொந்தரவுகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுறது. இருந்தபோதிலும் தொலைத் தொடர்பு துறையில் இந்த மாற்றம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு, பயனர்கள் குறிப்பிட்ட காத்திருப்பு காலத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

எம்.என்.பி விதிகள்

எம்.என்.பி விதிகள்

அதாவது புதிய எம்.என்.பி விதிகள் மற்றும் அதை அமல்படுத்துவதற்கு முந்தைய டிரான்சிஷன் காலம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். செல்போன் எண்ணை போர்ட் செய்ய விரும்பும் சந்தாதாரர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் சந்தாதார்கள் சில நாட்கள் வரை தங்கள் சிம் கார்டை போர்ட் செய்ய முடியாது.

2 மணிநேரத்தில் 123 டுவிட்கள் மூலம் ஆத்திரத்தை வெளிப்படுத்திய டிரம்ப்: எதற்கு தெரியுமா?2 மணிநேரத்தில் 123 டுவிட்கள் மூலம் ஆத்திரத்தை வெளிப்படுத்திய டிரம்ப்: எதற்கு தெரியுமா?

யுனிக் போர்டிங் கோட்

யுனிக் போர்டிங் கோட்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நேற்று மாலை 6மணி முன்னதாக போர்ட்டிங் கோரிக்கையை தாக்கல் செய்த வாடிக்கையாளர்கள் தங்களின் தனித்துவமான போர்ட்டிங் குறியீட்டை (யுனிக் போர்டிங் கோட்) பெற முடியும், இது ஆபரேட்டரிலிருந்து இன்னொரு ஆபரேட்டருக்கு போர்ட் செய்ய உதவும்.

டிசம்பர் 15-ம் தேதி வரை

டிசம்பர் 15-ம் தேதி வரை

யார் போர்ட்டிங் கோரிக்கையை அளித்தாலும், சந்தாதாரர்கள் அவர்களின் எண்ணுக்கு எந்த யுபிசி-யையும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிரான்சிஷன் காலம் கடந்த 13 ஆம் தேதி மாலை 6மணி முதல் வரும் 2019டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இனி 2 முதல் 3 நாட்கள் தான் அவகாசம்

இனி 2 முதல் 3 நாட்கள் தான் அவகாசம்

இந்த நிலையில் தற்போது பல்வேறு சிறப்பம்சங்களுடன் எம்.என்.பி சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எம்.என்.பி சேவை முந்தைய கணக்குப்படி ஒரு நெட்வொர்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் ஆகும். ஆனால் இனி மேல் 2 முதல் 3 நாட்களுக்குள் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா?தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா?

மாற்றுவதற்கான வழி

மாற்றுவதற்கான வழி

அதோடு PORT என டைப் செய்து இடைவெளி விட்டு தங்களின் 10 இலக்கு மொபைல் எண்ணை 1900 என்று எண்ணிற்கு மெசேஜ் செய்து போர்டபிலிட்டி மாற்றிக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.6.96 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பியதும் தங்களுக்கு வரும் மெசேஜ்ஜை 30 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி நெட்வொர்க் மாற்றிக் கொள்ளலாம்.

ரத்து செய்யும் வழிமுறைகள்

ரத்து செய்யும் வழிமுறைகள்

இடைப்பட்ட காலத்தில் நெட்வொர்க் மாற்றம் விரும்பவில்லை என்றால் CANCEL என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் விரைவில் நெட்வொர்க் மாற்றம் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
TRAI’s new rules for Mobile Number Portability

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X