டிராய் அமைப்பின் புதிய விதியால் ஐஎஸ்டி கால்களின் விலைகள் குறைகின்றன

Written By:

இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நடவடிக்கையால் ஐஎஸ்டி கால்களின் விலைகள் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிராய் தகவலின் படி வயர்லெஸ் சேவைகளுக்கு நிமிடத்திற்கு 40 பைசாவும், வயர்லைன் சேவைகளுக்கு 1.20 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக டிராயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராய் அமைப்பின் புதிய விதியால் ஐஎஸ்டி கால்களின் விலை குறைகின்றன

ஐஎஸ்டி களுக்கான அணுகும் வரிகளை இது வரை சர்வதேச தொலைதூர ஆப்பரேட்டர்கள் தான் செலுத்தி வந்தனர்.சர்வதேச தொலைதூர ஆபரேட்டர்களை இன்று வரை வாடிக்கையாளர்கள் நேரடியாக அனுகமுடியாமல் இருந்தது. டிராய் அமைப்பின் புது விதிமுறைகளின் படி வாடிக்கையாளர்கள் சர்வதேச தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் காலிங் கார்டுகளை வாங்கலாம், இது தொலைதொடர்பு துறையில் போட்டியை உருவாக்கும்.

எஸ்டிடி/ ஐஎஸ்டி கால்களை செய்ய வாடிக்கையாளர்கள் தங்களின் என்.டி.எல்.ஓ/ஐ.எல்டி.ஓ களை தேர்வு செய்வதற்கான முயற்சிகள் 2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட போது டெலிகாம் ஆப்பரேட்டரேகளின் இடையூறால் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின் வெவ்வேறு முயற்சிகளால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக டிராய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more about:
English summary
TRAI's New Regulation that Reduces The Cost of ISD Calls
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot