Airtel பயனரா நீங்க, அப்போ உஷார்! 12 லட்சம் வாடிக்கையாளர்கள் சத்தமில்லாமல் அப்ஸ்காண்ட்!

|

இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் மார்ச் மாத தொலைத் தொடர்பு சந்தா தரவின் அறிக்கை வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2020 இல் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைச் சேர்த்த பாரதி ஏர்டெல் நிறுவனம், மார்ச் மாதக் கணக்கின் படி சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராயின் மார்ச் மாத தரவின்படி

டிராயின் மார்ச் மாத தரவின்படி

டிராய் வெளியிட்டுள்ள மார்ச் மாத தரவின்படி பாரதி ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு சேர்ந்து ஒட்டுமொத்தமாக சுமார் 75 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை தன் பிடியிலிருந்து இழந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் மட்டும் 63 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்து படு மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று டிராய் தெரிவித்துள்ளது.

அம்பானி குழு படு ஹாப்பி

அம்பானி குழு படு ஹாப்பி

இந்த இரண்டு நிறுவனங்களின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எந்தவித சரிவையும் காணாமல், கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 46 லட்சத்துக்கும் அதிகமான புதிய வயர்லெஸ் சந்தாதாரர்களை தன் வட்டத்திற்குள் சேர்த்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்பானி குழு படு ஹாப்பியாக உள்ளது.

ஜூலை 15: ஜியோ போன் 3 மாடலை வாங்க நீங்க ரெடியா? விலை எவ்வளவு தெரியுமா?ஜூலை 15: ஜியோ போன் 3 மாடலை வாங்க நீங்க ரெடியா? விலை எவ்வளவு தெரியுமா?

வயர்லெஸ் சந்தாதாரர் சந்தைப் பங்கு

வயர்லெஸ் சந்தாதாரர் சந்தைப் பங்கு

டிராய் வெளியிட்டுள்ள மார்ச் மாத தரவுகளின் அடிப்படையில், ஜியோ சுமார் 33.47 சதவீத வயர்லெஸ் சந்தாதாரர் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தெரியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் சுமார் 28.31 சதவீத சந்தைப் பங்கைக் பெற்றுள்ளது என்று டிராய் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம், மார்ச் மாதத்தில் சுமார் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்களை தன் வசம் சேர்த்துள்ளது.

டிராய் குறிப்பிட்டுள்ளது

டிராய் குறிப்பிட்டுள்ளது

இருப்பினும் இது அரசாங்கத்திற்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குக் குறைவானது தான் என்று டிராய் கூறியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் பிப்ரவரி மாத இறுதியில் சுமார் 4 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வோடபோன் ஐடியா நிறுவனமும் மார்ச் மாதத்தில் சுமார் 63 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளது, இது பிப்ரவரி மாதத்தை விட அதிகம் என்று டிராய் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஊரடங்கிற்கு முன் உஷாரா இதை செஞ்சிருங்க! இல்லைனா WFH பண்றவங்களுக்கு வெட்டி செலவு தான்!அடுத்த ஊரடங்கிற்கு முன் உஷாரா இதை செஞ்சிருங்க! இல்லைனா WFH பண்றவங்களுக்கு வெட்டி செலவு தான்!

116 கோடியிலிருந்து சரிவு

116 கோடியிலிருந்து சரிவு

டிராய் வெளியிட்டுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கையில், பிப்ரவரி மாத இறுதியில் சுமார் 116 கோடியிலிருந்த மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 115 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த எதிர்பாராத சரிவை டிராய் சமீபத்திய தரவு அளிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சரிவு விகிதம்

சரிவு விகிதம்

இதன் மூலம் மாதாந்திர சரிவு விகிதம் 0.24 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தமில்லாமல் அப்ஸ்காண்ட் ஆனவர்கள் எந்த நெட்வொர்க்கை தேர்வு செய்திருப்பார்கள் என்பது மர்மாக உள்ளது.

Best Mobiles in India

English summary
TRAI Report Says Airtel and Vodafone Idea Collectively Lost Over 75 Lakh Subscribers in March : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X