விதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய் கடும் நடவடிக்கை இதுதான்.!

வாடிக்கையாளர்களின் தேர்வுக்கான சேனல்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சிறப்பு சலுகை மற்றும் சிறப்பு பேக்கேஜ்என்ற பெயர்களில் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை அளிப்பதை ஏற்க முடியாது.

|

தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) இப்போது புதிய அறிவப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால், இப்போது டிவி நிகழ்ச்சிகளுக்கு வரையறுதுள்ள கட்டண விதிகளை மீறும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள்
மற்றும் டிடிஹெச் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

விதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய்.!

குறிப்பாக நுகர்வோர் தரப்பில் வரும் புகார்களை கண்காணித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிராய் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆர்.எஸ் சர்மா

ஆர்.எஸ் சர்மா

மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் ஏற்கத்தக்கதல்ல என்று டிராய் தலைவர் ஆர்.எஸ் சர்மா தெரிவித்துள்ளார். பின்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சாஃப்ட்வேர்

சாஃப்ட்வேர்

வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், புகார்களை பதிவு செய்வதற்கென தனி சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ற சேனல்களை அளிக்காத நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு
வருவதாகவும் அவர் ஆர்.எஸ் சர்மா தெரிவித்தார்.

 சிறப்பு சலுகை

சிறப்பு சலுகை

பின்பு வாடிக்கையாளர்களின் தேர்வுக்கான சேனல்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சிறப்பு சலுகை மற்றும் சிறப்பு பேக்கேஜ்என்ற பெயர்களில் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை அளிப்பதை ஏற்க முடியாது எனவும், ஒழுங்குமுறைநோக்கமும் அதுவல்ல என்று சர்மா குறிப்பிட்டார்.

மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பம் சேனல்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் வாடிக்கையாளர்களுக்கு
வழங்கப்பட்டாலும், எந்த சேனலை பார்ப்பது என்பதை வாடிக்கையாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்,
அதற்குரிய வழிவகைகளைத் தான் நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்றார்.

தொந்தரவு அளிப்பதை ஏற்க முடியாது

தொந்தரவு அளிப்பதை ஏற்க முடியாது

சேனல்களை தேர்வு செய்வதற்கான வழிவகைகளை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு, நிறுவனங்கள் அளிக்கும் சேனல்களைமட்டுமே விழங்குவது விதிகளுக்கு புறம்பானது என்றார்.இவ்விதம் விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.டிராய் விதிமுறைகளைக் காரணம் காட்டி நுகர்வோர் விரும்பும் சேனல்களை அளிக்க மறுப்பது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு அளிப்பதை ஏற்க முடியாது என்றும் சர்மா குறிப்பிட்டார்.

6கேபிள் டிவி நிறுவனங்கள்

6கேபிள் டிவி நிறுவனங்கள்

சில நாட்களுக்கு முன்பு 6கேபிள் டிவி நிறுவனங்கள், ஜிடிபிஎல், ஹாத்வே, சிடி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள்
விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது,இந்த நிறுவனங்களிடம் விதிமுறைகளை பின்பற்றுமாறு
அறிவுறுத்தப்பட்டதாக சர்மா அவர்கள் கூறினார்.

சிறப்பு பேக்கேஜ்

சிறப்பு பேக்கேஜ்

குறிப்பாக நிறுவனங்கள் வகுத்துள்ள சிறப்பு பேக்கேஜ் மற்றும் குறிப்பிட்ட சேனல்களை மட்டும்தான் வாடிக்கையாளர்கள்
பார்க்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்றும் சர்மா அவர்கள் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
TRAI releases draft regulation on register of interconnection agreements: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X