Home
News

கேபிள் கட்டணம் உயரும் அபாயம்....டிராய் திட்டவட்ட மறுப்பு.!

ஆனால் இந்த கணிப்பு தவறு என்று டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

புதிய கட்டண முறையால் மாதாந்திர கேபிள் கட்டணம் உயரும் என்ற ஆய்வு அறிக்கையின் முடிவுக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கேபிள் டிவி வாடிக்கையாளர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த புதிய கட்டணம் நிர்ணய அறிவிப்பால் கேபிள் டிவி கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள் கட்டணம் உயரும் அபாயம்....டிராய் திட்டவட்ட மறுப்பு.!

ஆனால் இந்த கணிப்பு தவறு என்று டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். குறிப்பாக டிடிஹெச் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து டிராய்க்கு புகார் வந்துள்ளது. டிடிஹெச் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஆண்டு சந்தா அடிப்படையில் பல சேனல்களு க்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதனால் தற்போதைய புதிய கட்டண நிர்ணய அறிவிப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

 சர்மா

சர்மா

இது தொடர்பாக சர்மா கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்களுக்கு விரும்பு சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் வாய்ப்பு கட்டாயம் இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக முடிவு செய்வதில் தலையீடுவது என்பது சட்டவிரோதமாகும். ஆனால், உண்மையிலேயே புதிய கட்டண நிர்ணயத்தில் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மாதாந்திர கேபிள் கட்டண செலவு குறையும்'' என்றார்.

 கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

டிடிஹெச் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சேலன்கள் அடங்கிய தொகுப்புகளை விரைவில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒவ்வொரு இணைப்புக்கும் தனித்தனியே செட்ஆப் பாக்ஸ் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டிராய் நிர்பந்தம் செய்துள்ளது.

டிராய்

டிராய்

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனித்தனியாக சேனல்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும், தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் சலுகை கட்டணத்திலோ அல்லது முற்றிலும் இலவசமாகவோ வழங்க முன்வரலாம். இந்த விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும், எந்த நேரத்தில் அவசியம ஏற்பட்டாலும் தலையிடுவோம் என்று டிராய் தெரிவித்துள்ளது.

மாதாந்திர கேபிள் கட்டணம்

மாதாந்திர கேபிள் கட்டணம்

டிராய் தலைவர் சர்மா மேலும் கூறுகையில்,‘‘எனது சொந்த வீட்டு கேபிள் கட்டணம் இதன் மூலம் குறைந்துள்ளது. ஆனால், அது குறித்து விவரிக்க விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கிரெடிட் ரேட்டிங் மற்றும் தகவல் சேவை நிறுவனம் (கிரிஸில்) சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிராய் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் டிவி சேனல் நிறுவனங்கள் அறிவித்துள்ள நெட்ஒர்க் கொள்ளளவு கட்டணம் மற்றும் சேனல் கட்டணம் ஆகியவற்றின் மூலம் மாதாந்திர கேபிள் கட்டணம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

முதுநிலை இயக்குனர் சச்சின் குப்தா

முதுநிலை இயக்குனர் சச்சின் குப்தா

இது குறித்து கிரிஸில் முதுநிலை இயக்குனர் சச்சின் குப்தா கூறுகையில், ‘‘தற்போதைய மாதாந்திர கேபிள் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் வரை இதன் தாக்கம் இருக்கும். முன்னணி 10 சேனல்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளருக்கு மாதம் 230&240 ரூபாய் என்று இருந்த கட்டணம் இனி ரூ.300ஐ தொடும். அதே சமயம் 5 முன்னணி சேனல்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளருக்கு கட்டணம் குறையும்'' என்றார்.

புரிதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

புரிதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

இந்த அறிக்கை குறித்து டிராய் தரப்பில் கூறுகையில்,‘‘ புரிதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பலதரப்பட்ட தேவையில்லாத சேனல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கு டும்பத்தினர் இந்தி, தமிழ், தெலுங்கு, பங்களா, மலையாளம், ஆங்கிலம் போன்று பல தரப்பட்ட மாநில மொழி சேனல்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

மும்பை, டில்லி

மும்பை, டில்லி

டிராய் சேகரித்த 2 கேபிள் ஆபரேட்டர்களின் தகவல்கள் அடிப்படையில் மும்பை, டில்லி போன்ற நகரிங்களில் கூட கேபிள் கட்டணம குறைந்துள்ளது. அடுத்த 3 மாதங்களில் பல சேனல்களின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது என்று டிராய் செயலாளர் குப்தா தெரிவித்துள்ளார்.

இணையதளங்கள் செயல் இழந்து காணப்படுகிறது

இணையதளங்கள் செயல் இழந்து காணப்படுகிறது

மேலும், அதிமானோர் பயன்படுத்துவதால் பல கேபிள் ஆபரேட்டர்களின் இணையதளங்கள் செயல் இழந்து காணப்படுகிறது. அதனால் தங்களது இணையதளங்கள் வேகமாக வேலை செய்வதை உறுதி செய்யுமாறு அந்தந்த நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
TRAI refutes Crisil report on rise in TV viewing bills under new tariff regime : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X