ஆப்பிள் நிறுவனத்தை கண்டித்த டிராய்.! நடந்தது என்ன?
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தேவையற்ற அழைப்புகள் அதிகம் பதிவாகின்றன என ட்ரூ காலர் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது,
டிராய் அமைப்பு இந்தியாவில் தேவையற்ற அழைப்புகளை தவிர்ப்பதற்காகவும், மேலும் வாடிக்கையாளர்கள் நேரடியாக புகார் செய்யவும் டு நாட் டிஸ்டர்ப் Do-Not-Disturb (DND) எனும் ஆப் கொண்டுவந்தது. இந்த ஆப் ஆண்ட்ராய்டுபயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
இருந்தபோதிலும் இந்த ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் டு நாட் டிஸ்டர்ப் ஆப்ஸ் இடம்பெறச் செய்யவில்லை எனவே இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு கண்டித்துள்ளது.

தேவையற்ற அழைப்புகள்:
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தேவையற்ற அழைப்புகள் அதிகம் பதிவாகின்றன என ட்ரூ காலர் அமைப்புதகவல் தெரிவித்துள்ளது, அதன்பின் இந்தியாவில் ட்ரூ காலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாதத்தில் ஒரு
வாடிக்கையாளர்களுக்கு சாரசரியாக 22.6 தேவையற்ற அழைப்புகள் பதிவாகியுள்ளன.

டு நாட் டிஸ்டர்ப்:
இந்த டு நாட் டிஸ்டர்ப் ஆப் பொறுத்தவரை கடந்த வருடம் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது, இவை அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களும் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் ஆப்பிள் நிறவனம் தனது ஆப் ஸ்டோரில் இவற்றை இடம்பெற செய்யவில்லை.

ஆர்.எஸ்.சர்மா:
ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இது குறித்து கேள்வி எழுப்பும் போது எவ்வித பதிலும் தரவில்லை, மேலும் இந்தப் பிரச்சனையை இதுநாள் வரை விவாதித்துகொண்டே தான் இருக்கிறது என டிராய் அமைப்பின் சேர்மன் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம்:
ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-கிளவுட் டேட்டாவை பேஸ்புக்குடன் இணைத்துள்ளது, இதுகுறித்து ஆர்.எஸ்.சர்மா கேள்வி எழுப்பியுள்ளார், பேஸ்புக் உடன் வர்த்தகக் காரணங்களுக்காக டேட்டாவை பகிரந்துகொள்ளும்போது அதையே ஏன்டிராய் உடன் இணைக்க மறுக்கிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழில்நுட்பம்:
ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்பதால் டிராய் அமைப்பின் டு நாட் டிஸ்டர்ப் ஆப்இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications