இனி ட்ரூகாலர் செயலிக்கு வேலை இருக்காது போலயே: அசத்தலான அம்சத்தை கொண்டுவரும் டிராய்.!

|

இப்போது மொபைல் போனுக்கு ஸ்பேம் கால் வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதை கண்டறியும் வகையில் நாம் ட்ரூகாலர் செயலியை மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்திருப்போம். இந்த ட்ரூகாலர் செயலி உதவியுடன் தெரியாத எண்ணிலிருந்து யாராவது உங்களை அழைத்தாலும் அந்த நபரின் பெயரை உடனே தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த ஆண்டில் ட்ருகாலர் செயலியில்

ஆனாலும் கடந்த ஆண்டில் ட்ருகாலர் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன, எனவே இதை பயன்படுத்த சில மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆனது ட்ரூகாலர்-க்கு
மாற்றாக அதே சேவையை வழங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

காத்திருந்து வாங்கலாம்- ஐக்யூ நியோ 6 இந்திய வெளியீடு உறுதி: 64 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12!காத்திருந்து வாங்கலாம்- ஐக்யூ நியோ 6 இந்திய வெளியீடு உறுதி: 64 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12!

 KYC அடிப்படையிலான

அதாவது டிராய் அமைப்பு விரைவில் அழைப்பாளர்களின் KYC அடிப்படையிலான பெயரை ஸ்மார்ட்போன் திரையில் காட்சியளிக்கும் வகையில் புதிய உத்தரவை பிறப்பிக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் பதியாமல் வைத்திருக்கும் எண்ணில் இருந்து யாராவது உங்களை அழைத்தால், அவர்களின் எண் மட்டுமே திரையில் தோன்றும். ஆனால் டிராய்-இன் புதிய கட்டமைப்பை இறுதி செய்த பிறகு மொபைல்போனில் பயனரின் KYC அதாவது ஆதார் அட்டை அல்லது அதற்கு ஈடான அரசு ஆவணங்களில் உள்ள பெயரை பார்ப்பீர்கள்.

கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!

ரூகாலர் செயலி ஆனது முன்பின்

அதேபோல் ட்ரூகாலர் செயலி ஆனது முன்பின் தெரியாத நம்பரின் பெயரை வெளியிட்டாலும் கூட அது அடையாள அட்டை உறுதி இல்லாதது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட நபர் எந்த பெயரில் இன்ஸ்டால் செய்தாரோ அல்லது அவரது நண்பர்கள் சேவ் செய்ததன்அடிப்படையிலே நமக்கு பெயர் தோன்றும். குறிப்பாக இதன் மூலம் பெறப்படும் தகவல்கள் க்ரவுட் சோர்ஸ் என்று சொல்வார்கள். எனவே இதில் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது.

ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!

டிராய் அமைப்பு உருவாக்கவுள்ள காலர்

ஆனால் டிராய் அமைப்பு உருவாக்கவுள்ள காலர் ஐடி வசதியானது முற்றிலும் KYC அடிப்படையில் தகவலை தரக்கூடியது. குறிப்பாக KYCஎன்பது புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று அடிப்படையாக கொண்டது. எனவே டிராய் அமைப்பு கொண்டுவரும்இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கும்.

44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!

டிராய் தலைவர் பிடி வகேலா கூறுகையி

மேலும் டிராய் தலைவர் பிடி வகேலா கூறுகையில், டிராய் விரைவில் அழைப்பாளர்களின் KYC அடிப்படையிலான பெயர்களை மொபைல்போன் திரைகளில் காட்டுவதற்கான அமைப்புகளை உருவாக்கத் தொடங்கும். குறிப்பாக இந்த முறைக்கு பிறகு, யாராவது உங்களை தொலைபேசியில் அழைத்தால், அவருடைய பெயர் கண்டிப்பாக திரையில் தோன்றும். கண்டிப்பாக இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். பின்பு இதற்கான பணிகள் வெகு விரைவில் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!

இந்த செயல்பாட்டில், டெலிகாம்

குறிப்பாக இந்த செயல்பாட்டில், டெலிகாம் நிறுவனங்கள் அனைத்து பயனர்களின் அதிகாரப்பூர்வ பெயரான KYC ஐ உள்ளிட வேண்டும். பின்பு ஓட்டுநர் உரிமம், வாக்களர் அடையாள அட்டை போன்றவற்றை ஆவணங்களாக அளிக்க வேண்டும். இந்த புதிய அம்சம் வெளிவந்தால்பயனர்கள் போலி அழைப்புகளை எளிமையாக தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
TRAI plans to bring in caller ID facility like Truecaller: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X