தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பீட் டெஸ்ட் : டிராய்
இந்த மை ஸ்பீட் ஆப் பயன்படுத்தி டவுன்லோட் மற்றும் அப்லோட் செய்யும்போது உள்ள இணைய வேகத்தை கண்டுபிடிக்க முடியும் என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளில் உள்ள இணைய வேகத்தை விட இந்தியாவில் பயன்படுத்தப்படும் இணைய வேகம் சற்று குறைவாகதான் உள்ளது. அதன்பின்பு இங்கு டேட்டா ஆபர்கள் மிக அதிகமாக கொடுக்கப்படுகிறது, அனால் அதற்க்கு தகுந்த இணைய வேகம் கிடையாது என்பது மக்கள் கருத்தாக உள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைப்பு இப்போது புதிய திட்டத்தை தெரிவித்துள்ளது, அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைய வேகத்தை கண்டறிய அப்ளிகேஷன்களை உருவாக்கி தந்துள்ளது. இவை அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மை ஸ்பீட் ஆப்:
டிராய் அமைப்பு கொடுத்துள்ள இந்த மை ஸ்பீட் ஆப் பொறுத்தவரை தொலைதொடர்பு நிறுவனங்களின் இணைய வேகத்தை கண்டறியும் எனக் கூறப்பட்டுள்ளது.

டவுன்லோட்:
இந்த மை ஸ்பீட் ஆப் பயன்படுத்தி டவுன்லோட் மற்றும் அப்லோட் செய்யும்போது உள்ள இணைய வேகத்தைகண்டுபிடிக்க முடியும் என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

டேட்டா ஆபர்:
பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தற்சமயம் டேட்டா ஆபர்களை அறிவித்த வண்ணம் உள்ளது, இருந்தபோதிலும் அவற்றின் இணையவேகம் சற்று குறைவாக தான் உள்ளது.

இணையவேகம்:
தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைய வேகத்தை எவ்வாறு கணக்கிடுகின்றன என்று விளக்கம் கொடுக்க வேண்டும்என டிராய் அமைப்பு கூறியுள்ளது, அதன்பின் தொலைதொடர்பு நிறுவனங்களின் இணைய குளறுபடிகளுக்கு ஒருதீர்வு கொண்டு வரப்படும் என டிராய் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள்:
வரும் மாதங்களில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும் என தொலைத்தொடர்பு
ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தகவல் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications