டிராய் : விரைவில் வாய்ஸ் கால் கட்டணம் குறையும்.!
ஏர்டெல் நிறுவனம் இண்டர்நெட் சேவை மூலம் கடந்த ஆண்டு ரூ.10,279 கோடி வருமானம் பெற்றுள்ளது. இதுவே மிக அதிகம் எனக் கூறப்படுகிறது.
தற்போது தொலைதொடர்பு நிறுவனங்கள் சொந்த லாபத்திற்காக இண்டர்நெட் கட்டணம் மற்றும் வாய்ஸ் கால் கட்டணம் அதிகம் வசூல் செய்கின்ற, இப்போது மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய திட்டத்தை கொண்டுவர உள்ளது. அதன்படி விரைவில் வாய்ஸ் கால் கட்டணங்கள் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்றவற்றின் இண்டர்நெட் சேவை கட்டணங்கள் பொறுத்தவரை சற்று அதிகமாக உள்ளது இருந்தபோதிலும் குறைந்த கட்டணத்தில் ஜியோ நிறுவனம் இன்டர்நெட் சேவையை வழங்கிவருகிறது.

வாய்ஸ் கால்:
இப்போது தொலைதொடர்பு நிறுவனங்களின் இண்டர்நெட் சேவை கட்டணங்களை குறைக்க டிராய் அமைப்பு திட்டமிட்டுள்ளது இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் கட்டணங்கள் வெகுவாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ :
அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் இண்டர்நெட் சேவைக் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தநிலையில் ஜியோ மட்டுமே இண்டர்நெட் சேவைக் கட்டணங்களை குறைக்க வேண்டும் என கூறியுள்ளது.

ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனம் இண்டர்நெட் சேவை மூலம் கடந்த ஆண்டு ரூ.10,279 கோடி வருமானம் பெற்றுள்ளது. இதுவே மிகஅதிகம் எனக் கூறப்படுகிறது.

10 பைசா:
தற்போது இன்டர்நெட் கட்டணங்கள் குறைவதால் வாய்ஸ் கால் கட்டணங்களும் குறையும். அதன்படி 14 பைசாவில் இருந்து10 பைசாவாக குறையும் என டிராய் அமைப்பு கூறியுள்ளது.

டிராய்:
டிராய் அமைப்பு பல்வேறு கட்டணத் திட்டங்களை கொண்டுவரும் எனத் தெரிவித்துள்ளது, அதன்படி இப்போது வாய்ஸ் கால் திட்டத்தை குறைத்துள்ளது டிராய் அமைப்பு.


Click it and Unblock the Notifications








