இனி 100சேனல்களுக்கு அதிகபட்சமாக ரூ.130 வரை கட்டணம்: டிராய் அதிரடி.!

குறிப்பாக ஒளிபரப்பாளர்கள் ஒவ்வொரு சேனலின் தனிப்பட்ட மாதாந்திர வாடகை விவரம் மற்றும் ஒட்டுமொத்த மாதாந்திரவிவரத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அமைப்பு தெளிவாக கூறியுள்ளது.

|

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, மேலும் வாடிக்கையாளர்கள் டிடிஎச் சேவையில் தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு ஏற்ப மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்று டிராய் அமைப்பு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

இனி 100சேனல்களுக்கு அதிகபட்சமாக ரூ.130 வரை கட்டணம்: டிராய் அதிரடி.!

டிராய் அமைப்பு கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேபிள் மற்றம் ஒளிபரப்பு சேவைகளுக்கான புதிய விதிமுறைகளையும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களைப் பார்ப்போம்.

டிராய் அமைப்பு

டிராய் அமைப்பு

இப்போது வந்துள்ள புதிய விதிமுறைகளால் வாடிக்கையாளர்கள் தற்போது பார்த்து வரும் சேனல் சேவையில் எந்தவிதத்திலும் இடையூறுகளைச் சந்திக்கமாட்டர்கள் என்று டிராய் அமைப்பு கூறியுள்ளது.

விருப்பம் இல்லாத மற்றும் மொழிபுரியாத சேனல்கள்

விருப்பம் இல்லாத மற்றும் மொழிபுரியாத சேனல்கள்

முன்பு வாடிக்கையாளர்களுக்கு விரும்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மாதம் ஒரு தொகுப்பான கட்டணத்தை டிடிஎச் சேவைக்கு செலுத்தி வந்திருப்பார்கள், பின்பு பார்க்க விருப்பம் இல்லாத மற்றும் மொழிபுரியாத சேனல்களும்
இருந்திருக்ககும், இனிமேல் அவ்வாறு பார்க்க தேவையில்லை, வாடிக்கையாளர்கள் எந்த சேனலை பார்க்க விரும்புகிறார்களோ அந்த சேனலைத் தேர்வு செய்து அதற்குரிய மாதாந்திரக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

மாதாந்திர வாடகை

மாதாந்திர வாடகை

குறிப்பாக ஒளிபரப்பாளர்கள் ஒவ்வொரு சேனலின் தனிப்பட்ட மாதாந்திர வாடகை விவரம் மற்றும் ஒட்டுமொத்த மாதாந்திர விவரத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அமைப்பு தெளிவாக கூறியுள்ளது.

29-ம் தேதிக்குப் பின்பு

29-ம் தேதிக்குப் பின்பு

இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் ஏற்கனவே மக்கள் பார்த்துகொண்டிருக்கும் பல்வேறு சேனல்கள் சேவை நிறுத்தப்படும் என்ற செய்தி ஊடங்களில் வெளிவருகிறது, ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சேனல்களில் எதையுமே 29-ம் தேதிக்குப் பின்பு துண்டிக்கக் கூடாது என்று அனைத்து ஒளிபரப்பு சேவைதாரர்களுக்கும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்தின் தேவைக்கு ஏற்றார்போல்

குடும்பத்தின் தேவைக்கு ஏற்றார்போல்

பின்பு பயனர்கள் தங்களின் குடும்பத்தின் தேவைக்கு ஏற்றார்போல் கவனமாக தங்களுக்குப் படித்தமான சேனல்களைத் தேர்வு செய்து அதற்குரிய மாதாந்திர வாடகையை மட்டும் செலுத்தலாம். அல்லது சேவைதாரர்கள் வழங்கும்
பேக்கேஜ் முறையையும் தேர்வு செய்யலாம்.

அதிகபட்சமாக ரூ.130

அதிகபட்சமாக ரூ.130

குறிப்பாக 100சேனல்களுக்கு அதிகபட்சமாக ரூ.130 வரை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம் என்றும்,
பின்பு இதில் இலவச சேனல், கட்டணம் செலுத்தி பார்க்கும் சேனல் அல்லது இரண்டும் சேர்த்ததாகக் கூட இருக்கலாம். ஒருவேளைகட்டணம் செலுத்திப் பார்க்கும் சேனலாக இருந்தார் கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த
வேண்டியது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
TRAI pauses new cable TV tariff system: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X