Home
News

ரீசார்ஜ் செய்ய இனி கஷ்டம் இல்லை.. 30 நாட்கள் அவகாசம்.. டெலிகாம் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு..

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI), டெலிகாம் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் சிறப்பு வவுச்சர்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து தான் டிராய் அமைப்பு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி இனி டெலிகாம் நிறுவனங்கள் அனைத்து ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் ஸ்பெஷல் வவுச்சர்களையும் வாடிக்கையாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என டிராய் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தகவல்கள் டெலிகாம் நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் ஆப்கள் மற்றும் ரீடெய்ல் கடைகளில் தெளிவாக இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் செய்ய இனி கஷ்டம் இல்லை.. 30 நாட்கள் அவகாசம்..

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவில், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களது இணையதளம் மற்றும் மொபைல் ஆப்களில் "TRAI-mandated packs" என்ற பெயரில் தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் என டிராய் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பகுதியைத் திறக்கும்போது, இந்தப் பிரிவே முதல் ஆப்ஷனாக இடம்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ரீடெய்ல் கடைகளிலும் டிராய் கட்டாயப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுவும் இந்த புதிய உத்தரவின்படி, டெலிகாம் நிறுவனங்கள் தங்களது இணையதளம் மற்றும் ஆப்களில் "TRAI-mandated packs" என்ற பெயரில் தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் எனவும், இதில் டிராய் கட்டாயப்படுத்தியுள்ள அனைத்து வவுச்சர்களும் இடம்பெற வேண்டும். இந்தப் பகுதி மறைத்து வைக்கப்படாமல், ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிரிவில் முதல் டேப்பாகவே இருக்க வேண்டும் என டிராய் தெரிவித்துள்ளது.

30 நாட்கள் அவகாசம்
மேலும், இந்த மாற்றங்களை தங்களது இணையதளம் மற்றும் ஆப்களில் செயல்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ரீசார்ஜ் திட்டங்களை எளிதாகக் கண்டறிய முடியும்.

டெலிகாம் நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்களில் தேவையான ரீசார்ஜ் திட்டங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, டிராய் நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில், கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய சில வவுச்சர்கள் சரியான பிரிவில் இல்லாமல், வேறு பகுதிகளில் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. மேலும், அந்த வவுச்சர்களை கண்டுபிடிக்க வாடிக்கையாளர்கள் பல பக்கங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையும் இருந்தது. இதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் டிராய் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தற்போதைய ட்ராய் விதிகளின்படி, ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் குறைந்தது ஒரு பிளான் வவுச்சர், ஒரு ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் மற்றும் ஒரு காம்போ வவுச்சரை வழங்க வேண்டும். இந்த அனைத்து வவுச்சர்களும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் இருக்க வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் தங்களது ரீசார்ஜை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

ரீசார்ஜ் செய்ய இனி கஷ்டம் இல்லை.. 30 நாட்கள் அவகாசம்..

மேலும், டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் மட்டும் கொண்ட தனி ஸ்பெஷல் வவுச்சர்களையும் டெலிகாம் நிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்தத் திட்டங்களை வாடிக்கையாளர்கள் எளிதாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் வகையில், ட்ராய் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

மொத்தத்தில், டிராய் அமைப்பின் இந்த புதிய உத்தரவு மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் வவுச்சர்களை இனி எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். முக்கியமான பிளான்களை தேடி பல பக்கங்களைச் சுற்ற வேண்டிய சிரமமும் குறையும். டெலிகாம் நிறுவனங்கள் இந்த மாற்றங்களை முறையாக செயல்படுத்தினால், ரீசார்ஜ் செய்வது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் எளிமையாகவும் வசதியாகவும் இருக்கும்.

Best Mobiles in India

English summary
TRAI Orders Jio, Airtel, Vi to Make Mandatory Recharge Plans Easy to Find
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X