Home
News

என்ன மாப்ள.. மாட்டுனீயா? அபராதம் போட்டாங்க போல.. எத்தனை கோடி? Airtel க்கு TRAI வச்ச வெடி!

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (Telecom Regulatory Authority of India) இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்திற்கு ரூ.2,81,39,000 அபராதம் விதித்துள்ளது. ஏன்? எதற்காக? இதோ விவரங்கள்:

டிராயின் கூற்றுப்படி, ஏர்டெல் நிறுவனத்தால் தனது நெட்வொர்க்கில் அனுப்பப்படும் கோரப்படாத வணிகத் தகவல்தொடர்புகளை (Unsolicited Commercial Communications - UCC) கட்டுப்படுத்த முடியவில்லை. அறியாதோர்களுக்கு யுசிசி என்பது ஸ்பேம் (Spam) அல்லது கஸ்டமர்களின் தேவையற்ற மெசேஜ்கள் (Unwanted messages by Customers) ஆகும்.

அபராதம் போட்டாங்க போல.. எத்தனை கோடி? Airtel க்கு TRAI வச்ச வெடி!

"2018 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு வணிகத் தகவல்தொடர்பு வாடிக்கையாளர் விருப்ப விதிமுறைகளின் (Telecom Commercial Communications Customer Preference Regulations 2018) கீழ் தேவைப்படும் புகார்களுக்காக, ஏர்டெல் நெட்வொர்க் மூலம் அனுப்பப்பட்ட கோரப்படாத வணிகத் தொடர்புகளை (UCC - Unsolicited Commercial Communications) ஏர்டெல் நிறுவனம் கட்டுப்படுத்தத் தவறியது" என்று டிராய் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்தே ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.2,81,39,000 அல்லது ரூ.2.81 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. டிராயின் இந்த உத்தரவை மதிப்பாய்வு (Review) செய்து அதன் அடுத்தடுத்த படிகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை மதிப்பீடு (Evaluation) செய்து வருவதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஒருவேளை டிராயின் இந்த உத்தரவிற்கு எதிராக பார்தி ஏர்டெல் நிறுவனத்தால், தன்னை தற்காத்துக் கொள்ள முடியாவிட்டால், யுசிசியை (ஸ்பேம் மெசேஜ்களை) கட்டுப்படுத்த தவறிய காரணத்தினால், ரூ.2.81 கோடி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் மற்றும் தேவையற்ற மெசேஜ்களை குறைப்பதில் டிராய் மிகவும் தீவிரமாக செயல்படுகிறது என்பதற்கு இதுவொரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மேலும் டிராய், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது தங்களுக்குள் டேட்டாவை பகிர்ந்து கொள்ளுமாறும் (Share Data Amongst Themselves) கேட்டு கொண்டுள்ளது. தங்களுக்கு உள்ளேயே தரவுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் டெலிகாம் ஆப்ரேட்டர்களால் ஸ்பேம் மற்றும் மோசடி மெசேஜ்களை இன்னும் பலமாக எதிர்கொள்ள முடியும் என்று டிராய் நம்புகிறது.

இந்தியாவை பொறுத்தவரை ஸ்பேம் செய்திகள் நுகர்வோருக்கு ஒரு பெரிய தலைவலியாக உள்ளது. எனவே தான் ஸ்பேம் மெசேஜ்களை நிறுத்துவதற்கான கடினமான வழிமுறைகளை உருவாக்க டிராய் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த டிசம்பர் 2021 காலாண்டிலும் கூட அதன் நெட்வொர்க்கில் யுசிசியை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக ஏர்டெல்லுக்கு டிராய் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.

எனவே ஸ்பேம் மெசேஜ்களும், தேவை இல்லாத மெசேஜ்களும், அவைகளை கட்டுப்படுத்தும் டிராயின் முயற்சிகளும் - புத்தம் புதிய விஷயம் அல்ல; கொஞ்சம் பழைய விஷயம் தான். இப்படியெல்லாம் செய்ததன் விளைவாகவே, தற்போதுள்ள டெலிகாம் ஆப்ரேட்டர்களிடம் யுசிசி அல்லது ஸ்பேம் மெசேஜ்களை எதிர்ப்பதற்க்கான ஒரு சிறந்த அமைப்பு (Better system to counter UCC or spam messages) உள்ளது.

யுசிசியை கட்டுப்படுத்த தவறிய குற்றச்சாட்டின் கீழ் ஏர்டெல் நிறுவனத்திற்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதா என்று கேட்டால். நிச்சயம் இல்லை. ஸ்பேம் மெசேஜ்களை கட்டுப்படுத்த தவறியதற்காக விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்திற்கும் கூட ரூ.1.01 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, அனைத்து ஐசிசி உலகக் கோப்பை 2023 ஸ்டேடியம் முழுவதும், சிறந்த நெட்வொர்க் அனுபவத்தையும், வேகமான அப்லோட் ஸ்பீடையும் அனுபவிப்பது ஏர்டெல் பயனர்கள் தான் என்று ஓப்பன்சிக்னலின் (Opensignal) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. நினைவூட்டும் வண்ணம் வருகிற அக்.5 முதல் ஐசிசி உலக கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TRAI Orders Airtel To Pay Rs 2 81 Crore Fine For Failure to curb UCC or Spam Messages
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X