Home
News

மக்கள் மேல் திணிக்காதீங்க.. டெலிகாம் கம்பெனிகளை கடுமையாக கண்டித்த TRAI.. Airtel, BSNL, Jio, Vi பயனர்கள் குஷி..

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆன ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio) மற்றும் விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் போக்கை கண்டித்து, புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்த கோரி அறிவுரை வழங்கியுள்ளது. பொதுமக்கள் மேல் விலை உயர்ந்து ரீசார்ஜ் திட்டங்களை (Costly recharge plans) திணிக்காமல், அவர்களுக்கு தேவையான மலிவு விலை விருப்பங்களை டெலிகாம் நிறுவனங்கள் (Telecom Industries) கட்டாயம் வழங்க வேண்டும் என்று கண்டித்து கூறியுள்ளது.

ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் பயனர்களுக்கு ஸ்பெஷல் வாய்ஸ் காலிங் வவுச்சர் (special voice calling vouchers) மற்றும் ஸ்பெஷல் எஸ்எம்எஸ் வவுச்சர்களை (special SMS vouchers) என்ற ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர் (STV) திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மக்கள் மேல் திணிக்காதீங்க.. டெலிகாம் கம்பெனிகளை கடுமையாக கண்டித்த TRAI

மக்கள் மேல் திணிக்காதீங்க.. டெலிகாம் கம்பெனிகளை கடுமையாக கண்டித்த TRAI:
இந்த புதிய திட்டங்களை ஒவ்வொரு இந்திய டெலிகாம் நிறுவனங்களும் கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டுமென்ற வழிகாட்டுதல்களில் TRAI மிகவும் உறுதியாக நிற்கிறது. அதாவது டெலிகாம் வழங்குநர்கள் 2G பயனர்களுக்கு (2G network users) டேட்டா நன்மை இல்லாத திட்டங்களை உருவாக்க வேண்டும் (no data benefit plans) என்று TRAI கூறியுள்ளது. தற்போது, பயன்பாட்டில் உள்ள ​​பழைய ஃபீச்சர் ஃபோன்கள் (feature phone) அல்லது 2ஜி நெட்வொர்க்குகளில் (2G network) உள்ள பயனர்கள் மீது புதிய ரீசார்ஜ் திட்டங்களை திணிக்க கூடாது என்று TRAI தெரிவித்துள்ளது.

பியூச்சர் போன் மற்றும் அடிப்படை போன் பயனர்களுக்கான ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டங்கள்:
பியூச்சர் போன் மற்றும் அடிப்படை போன்களை (basic mobile phone users) பயன்படுத்தும் மக்களுக்கு டேட்டா நன்மையின் தேவை சுத்தமாய் பயனில்லை என்றாலும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் எல்லா திட்டங்களிலும் டேட்டா நன்மையை ஒன்று சேர்த்து, விலை அதிகரித்து தொகுத்து வழங்குகின்றன. இந்த போக்கை டெலிகாம் நிறுவனங்கள் கட்டாயம் மாற்ற வேண்டும் என்று TRAI உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு தேவைப்படும் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (voice only recharge plans) மற்றும் SMS ஒன்லி திட்டங்களை (SMS only recharge plans) நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

90 நாள் முதல் 365 நாட்களுக்கு புது ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர்கள்:
வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் முயற்சியில், TRAI இன் புதிய வழிகாட்டுதல்களின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS நன்மைகளை இணைந்து வழங்கும் சிறப்பு கட்டண வவுச்சர்களையும் (voice and SMS special recharge vouchers) வழங்க வேண்டும் என்று TRAI உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) காலம் 90 நாட்களில் இருந்து 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் நீண்ட கால திட்டங்களாக இருக்க வேண்டுமென்றும் TRAI உத்தரவிட்டுள்ளது.

Airtel, BSNL, Jio, Vi பயனர்கள் குஷி:
இதன் மூலம் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் பயனர்களுக்கு நீண்ட கால விருப்பங்களை வழங்க அனுமதிக்கும் என்று TRAI கூறியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் மூலம் பொதுமக்கள் இனி அதிக செலவில்லாமல் நீண்ட கால செல்லுபடியுடன், டேட்டா நன்மை இல்லதாக ஸ்பெஷல் வவுச்சர் திட்டங்களை (special recharge vouchers) ரீசார்ஜ் செய்து பயன்பெற முடியும் என்று TRAI நம்புகிறது. இந்த புதிய வழிகாட்டுதல்களை அணைத்து டெலிகாம் பயனர்களும் வரவேர்த்துள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TRAI Ordered Airtel BSNL Jio Vodafone Idea Vi To Introduce Special Tariff Vouchers STV Plans In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X