என்ன சோனா முத்தா போச்சா.. BSNL ஐ முடிச்சு விட்ட TRAI.. Elon Musk ஹேப்பி, Starlink வர்ற நேரம் பார்த்து ஒரே அடி!
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது, இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் தலையில் புதிய இடி ஒன்றை இறக்கி உள்ளது.
டிராய் VS டாட் மற்றும் பிஎஸ்என்எல்: சாட்காம் (Satcom) என்கிற சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் (Satellite communications spectrum charges) தொடர்பான "பஞ்சாயத்தில்" பிஎஸ்என்எல் நிறுவனத்திற்க்கு பாதமான தீர்ப்பு வந்துள்ளது. இதற்காக டாட் (DoT) என்கிற தொலைத்தொடர்பு துறையின் (Department of Telecommunications) பரிந்துரையை டிராய் நிராகரித்து உள்ளது.

தற்போது வரையிலாக பிஎஸ்என்எல் நிறுவனமானது, இந்தியாவில் சாட்காம் சேவைகளை வழங்குவதற்கான சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் (Adjusted gross revenue - AGR) 1% மட்டுமே ஸ்பெக்ட்ரம் கட்டணங்களாக செலுத்துகிறது. இது இப்படியே தொடர வேண்டும் என்று டாட் (DoT) பரிந்துரைத்தது. ஆனால் அது அப்படி செயல்படக்கூடாது என்று டிராய் (TRAI) கூறி உள்ளது.
பிஎஸ்என்எல் அதன் ஏஜிஆர் (AGR) இல் 4% ஐ ஸ்பெக்ட்ரம் கட்டணங்களாக செலுத்தும் என்று டிராய் கூறியுள்ளது. இதன் மூலம் சாட்காம் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் ஆனது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும், இது தொழில்துறையில் உள்ள ஒவ்வொரு பங்குதாரருக்கும் நியாயமான "போட்டி மைதானத்தை" உருவாக்கும்.
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது இந்தியாவில் அதன் ஸ்டார்லிங்க் சேவையை கூடிய விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இப்படி ஒரு பின்னடைவு வந்துள்ளது - சாட்காம் சேவையில் நம் கை மேலே ஓங்கியுள்ளது என்கிற சூழ்நிலையயை அப்படியே தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் நிறுவப்பட்ட கேட்வே வழியாக செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமாக பிஎஸ்என்எல் இருந்தது. இதனால், ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ஏஜிஆர் இல் 1% மட்டுமே வசூலிக்க அரசாங்கத்திற்கு சாத்தியம் இருந்தது, ஏனெனில் அது இயற்கையில் பாகுபாடற்றது.
ஆனால் மற்ற நிறுவனங்கள் இதில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களிடம் அதிக கட்டணம் செலுத்த கேட்கப்பட்டால், அந்த சூழ்நிலைக்கு எந்த நியாயமும் இல்லை. இந்தியா முழுவதும் செயற்கைக்கோள் வலையமைப்பு மற்றும் கேட்வேக்களை உருவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் நிறுவனங்கள், இந்திய அரசாங்கத்திம் இந்த பாரபட்சமான அணுகுமுறையை நிச்சயம் ஏற்காது. இதன் விளைவாக, செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளில், அதற்கான ஸ்பெக்ட்ரம் கட்டணங்களில் பிஎஸ்என்எல் பெற்று வந்த "நன்மை" ஒருவழியாக முடிவுக்கு வருகிறது.
செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த தொலைத்தொடர்புத் துறையின் சமீபத்திய பின்குறிப்புக்கு டிராய் அளித்த சமீபத்திய பதிலில், "தற்போது, மூலோபாய நோக்கங்களுக்காக சேவைகளை வழங்குவதற்காக சேவைகள் மற்றும் சேவை வழங்குநர்களிடையே குறைந்த ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை வேறுபடுத்தி வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இந்த கணக்கிலும், அத்தகைய முன்னுரிமை சிகிச்சை பாரபட்சமானதாக இருக்கும்" என்று கூறியுள்ளது
ஸ்டார்லிங்க் சேவையும், இந்திய விலை தொடர்பான குழப்பமும்: சில தினங்களுக்கு முன்பாக ஸ்டார்லிங்க்கின் இந்திய விலை (Starlink India Price) நிர்ணயம் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. பின்னர் அது உண்மையான விலை நிர்ணயம் இல்லை என்று ஸ்டார்லிங்க் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ஸ்டார்லிங்க் இந்தியா வலைத்தளத்தில் ஏற்பட்ட "உள்ளமைவு கோளாறு" (configuration glitch) காரணமாக இந்தியாவுக்கான விலை நிர்ணயம் சிறிது நேரம் தவறாக தோன்றியதாகவும், அந்த புள்ளிவிவரங்கள் (விலைகள்) வெறும் பிளேஸ்ஹோல்டர் சோதனைக்கான தரவு மட்டுமே என்றும், இந்தியாவிற்கான அதன் செயற்கைக்கோள் இணைய சேவையின் உண்மையான விலை அல்ல என்றும் ஸ்டார்லிங்க் நிறுவனம் விளக்கம் அளித்து இருந்தது.


Click it and Unblock the Notifications








