புது விதிகள்.. உங்க பேங்க் இதை பண்ணாது.. டிராய் வச்ச ஆப்பு.. ஆனால், கஸ்டமர்களுக்கு இல்ல.. ஒயிட்லிஸ்ட் மாறியது!
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் - டிராய் (Telecom Regulatory Authority of India - TRAI) அமலுக்கு கொண்டு வந்த ஒயிட்லிஸ்ட்டிங் விதிகள் (Whitelisting Rules) ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களையும் திக்குமுக்காட செய்தது. ஏனென்றால், அந்த விதிகள் பேங்க் மூலம் அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் கொண்டது. இதனால், பணம் அனுப்பும்போது ஓடிபி வருமா? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் டிராய், ஒயிட்லிஸ்ட்டிங் விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்த ஒயிட்லிஸ்ட்டிங் விதிகள் அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வந்தன. சிம் கார்டுகள் மூலம் கஸ்டமர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த விதிகள் கொண்டு வந்துள்ளன. அதாவது, ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனங்கள் மூலமும் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டுமானால், ஒயிட்லிஸ்ட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆகவே, கஸ்டமர்களுக்கு அதிகமாக எஸ்எம்எஸ்களை அனுப்பும் பேங்க் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் அனைத்தும் இந்த விதிகளுக்கு கட்டுப்பட வேண்டி இருக்கிறது. ஒருவேளை ஒயிட்லிஸ்ட்டில் பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டாலோ அல்லது விதிகளுக்கு உட்படவில்லை என்றாலோ எஸ்எம்எஸ்கள் அனுப்ப தடைவிதிக்கப்படும் என்று டிராய் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இதனால், பேங்க் கஸ்டமர்களிடையே பதற்றம் ஏற்பட்டதால், பேங்க் நிறுவனங்களுக்கான ஒயிட்லிஸ்ட்டிங் விதிகள் குறித்து டிராய் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வணிக ரீதியான எஸ்எம்எஸ்களில் யுஆர்எல் (URL) இடம்பெற்றிருந்தால், அதற்கு மட்டுமே ஒயிட்லிஸ்ட்டில் பதிவு செய்ய வேண்டி இருக்கும். வழக்கமாக அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களுக்கு எந்தவித தடையும் இல்லையென்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
சொல்லப்போனால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI), இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் - செபி (Securities and Exchange Board of India - Sebi) மற்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India - Irdai) ஆகிவற்றுடன் ஒருங்கிணைந்தே விதிகளை வகுக்கிறது.
ஆகவே, அவற்றின் அனுமதியுடன் செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒயிட்லிஸ்டிங் விதிகளால் எந்தவித சிக்கலும் இருக்காது என்பதே உண்மையாகும். ஆகவே, பேங்க் கஸ்டமர்கள் இதுகுறித்து எந்தவித பதற்றமும் அடைய வேண்டியது கிடையாது. இந்த நேரத்தில் ஒயிட்லிஸ்டிங் விதிகள் எதற்காக கொண்டுவரப்பட்டன என்பதை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
எஸ்எம்எஸ்கள் மூலம் யுஐஆர்எல் (URL), ஏபிகே (APK) மற்றும் ஓடிடி (OTT) லிங்குகள் அனுப்பப்படுகின்றன. இதில் ஸ்பேம் லிங்குகளும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் கஸ்டமர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுகின்றன. இதனால் பணம் தொடர்பான சிக்கல்களும் ஏற்படுகின்றன. இந்த லிங்குகளை டிராக் செய்ய முடியாது. இதனாலேயே இதுபோன்ற லிங்குகளுடன் வரும் எஸ்எம்எஸ்களுக்கு ஒயிட்லிஸ்ட்டிங் விதிகள் வந்தன.
அக்டோபர் 1ஆம் தேதிக்கு மேல் இதுபோன்ற லிங்குகளுடன் எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டுமானால், அந்த நம்பர் மற்றும் விவரங்கள் ஒயிட்லிஸ்டில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், எஸ்எம்எஸ்களை அனுப்ப முடியாது. அதேபோல இனிமேல் அதுபோன்ற எஸ்எம்எஸ்களை யார் அனுப்பினாலும் அதை எளிதாக டிராக் செய்து கண்டுபிடித்து விடவும் முடியும்.
ஆகவே, வெரிபிகேஷன் செய்யப்பட்ட நிறுவனங்களில் இருந்து மட்டுமே இனிமேல் எஸ்எம்எஸ்கள் வர இருக்கின்றன. இதனால், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எஸ் போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனங்கள் மூலமும் அனுமதி இல்லாமல் லிங்குகளை அனுப்பி எந்தவொரு தகவல்களையும் பெற்றுவிட முடியாது. இந்த விதிகள் உண்மையில் தேவையான ஒன்றாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








