பிட் பிளானை அறிவித்த டிராய்-கேபிள் டிடிஹெச் கட்டணம் இதுதான்.!
டிராயின் இந்த நடவடிக்கையால் நமக்கு வேண்டிய விலையில் டிவி சேனல்களை நாம் தேர்வு செய்ய முடியும். மேலும் 100 சேனல்கள் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறைப்படி கட்டணம் மற்றும் சேனல் விவரங்களை நாம்
டிராய் புதிய விதிமுறைப்படி பிட் பிளானை அறித்து இருக்கின்றது டிராய். இதில் டிடிஹெச் மற்றும் கேபிள் டிவியின் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றது.

டிராயின் இந்த நடவடிக்கையால் நமக்கு வேண்டிய விலையில் டிவி சேனல்களை நாம் தேர்வு செய்ய முடியும். மேலும் 100 சேனல்கள் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறைப்படி கட்டணம் மற்றும் சேனல் விவரங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

டிராய் புதிய விதி:
டிராயின் புதிய டிடிஹெச் மற்றும் கேபிள் டிவி சேனல்களுக்கு புதிய விதிமுறை அமல்படுத்தியுள்ளது.
மேலும், கேபிள் டிவி சேனல்கள் லிஸ்ட், விலை மற்றும் திட்டங்கள் அமலாகியுள்ளது. இந்த நடைமுறை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

மார்ச் 31ம் தேதி கெடு :
மேலும், அதற்காக டிடிஹெச் சந்தாதாரர்கள் தங்களுடைய விருப்பு சேனல்களை தேர்வு செய்ய வேண்டியிருந்தது.
இதில் மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும், சேனல்களை தேர்வு செய்யாதவர்கள் தானோ பிட் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்.

டிராயின் பிட் திட்டம்:
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) மூலம் பிட் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இது சிறந்த திட்டமாகவும் இருக்கின்றது. டிடிஹெச் மற்றும் கேபிள் ஆப்ரேட்டரிகளிடம் இருந்து டிவி சேனல்களை பயனர்களே தங்களின் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ள முடியும். நாம் தேர்வு செய்யும் டிவிகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

விருப்பு மொழிகளுக்கு முன்னுரிமை:
இந்த பிட் திட்டத்தின் மூலம் நிஙக்ள் தேர்வு செய்யும் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் விருப்பமான சேனல்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் நாம் விரும்பாத சேனல்களையும் பட்டியிலில் இருந்து நீக்கவும் முடியும். நாம் விருப்பத்தின் பேரில் கட்டணம் செலுத்த முடியும். பிட் சிறந்த திட்டமாகவும் இருப்பதாக ஒரு சிலர் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றர். ஒரு சிலர் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

ஆப்பட்டர்களின் கட்டணம்:
டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி, வீடியோக்கான், ஹாத்வே, சன் டைரக்ட் உள்ளிட்டவை ஆப்ரேட்டர்களை பின் தொடரும் பயனர்கள் அவர்களின் வலைதளத்திற்கு சென்று விருப்பிய சேனல் மற்றும் டிடிஹெச் கட்டணத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

100 சேனல்கள் இலவசம்:
பிட் திட்டத்தின் படி 100 சேனல்களை பயனர்கள் இலவசமாக கண்டு கழிக்க முடியும். நாம் விரும்பிய சேனல்களை தேர்வு செய்து கொள்ள முடியும். மாதக் கட்டணம் ரூ.130 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 சதவீதம் ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.153 ஆகும்.

சேனல்களின் விபரம்:
100 சேனல்களில் 25 இலவச தூர்தர்ஷன் சேனல்கள் உள்ளன. 25 கூடுதல் சேனல்களின் என்சிஎப் 25 சேன்களில் சேர்க்கப்படும். இதில் 100 சேனல்களை அடிப்படியாக கொண்டு பேக் இரண்டு தர நிலை வரைறு செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்டி சேல்களையும் அடங்கும்.


Click it and Unblock the Notifications