Home
News

புது ரூல்ஸ்.. அக்.21 அமல்.. Jio, Airtel, Vi-ஐ வச்சி செய்யப்போகும் டிராய்.. மினிமம் விலைக்கு வரும் ரீசார்ஜ்!

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இன்று முதல் (அக்டோபர் 21, 2026) புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. டிராய் (TRAI) அமல் செய்ய இருக்கும் இந்த புதிய விதிகளில் ரீசார்ஜ் செய்வதில் நேரடியாக மாற்றங்கள் வர இருக்கிறது.

ரீசார்ஜ் செய்யும்போது, டேட்டா சலுகை தேவையில்லை என்றாலும் வருகிறது. இதற்கான கட்டணத்தையும் கஸ்டமர்கள் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால், டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட திட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று டிராய் கொண்டுவந்த விதிகள் சொல்கிறது.

புது ரூல்ஸ்.. அக்.21 அமல்.. Jio, Airtel, Vi-ஐ வச்சி செய்யும் TRAI..!

இந்த விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்தாலும், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியில் மட்டுமே வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதிக வேலிடிட்டி வருவதால், விலையும் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் 28 நாட்கள், 30 நாட்கள் அல்லது 31 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை எதிர்பார்த்தாலும் அது கிடைக்காமல் இருந்தது.

இதனாலேயே அக்டோபர் 21ஆம் தேதியில் இருந்து அனைத்து வேலிடிட்டியிலும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை (Voice Only Plan) கொடுக்க ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுனங்களுக்கு மீண்டும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுபடி ஏர்டெல் நிறுவனமானது, 28 நாட்கள், 30 நாட்கள் மற்றும் 31 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை கொண்டு வந்துவிட்டது.

அதேபோல ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொண்டுவர இருப்பதாக டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இருந்து வாய்ஸ் ஒன்லி திட்டங்களை அனைத்து வேலிடிட்டியிலும் கொடுத்து வருகிறது. 28 நாட்கள், 30 நாட்கள் போன்ற வேலிடிட்டியில் வாய்ஸ் திட்டங்கள் வந்தால், விலை மலிவாக இருக்கும்.

அதாவது, ஏர்டெல்லில் வாய்ஸ் கால்களுடன் மினிமம் விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமால், குறைந்தது ரூ.199 விலை கொண்ட திட்டத்தை பெற வேண்டும். இதில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டா ஒரு நாளுக்கு கூட தாக்குப் பிடிக்காது. அதேபோல இதை வேண்டாம் என்றும் சொல்ல முடியாது.

இதற்கான கட்டணத்தை செலுத்தியே திட்டத்தை பெற முடியும். ஆனால், இந்த டேட்டா இல்லாமல் திட்டத்தை பெறும்போது அதன் விலை குறையும். அதே நேரத்தில் சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். இதைத்தான் டிராய் விதிகளின் வழியாக கொண்டுவந்தது. இப்போது, ஏர்டெல் நிறுவனம் ரூ.185 விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டத்தை கொண்டுவந்துவிட்டது.

ஆகவே, மினிமம் ரீசார்ஜ் விலை ரூ.185 ஆக குறைந்துவிட்டது. இந்த திட்டத்திலும் அதே வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், டேட்டா மட்டும் கிடைக்காது. இதேபோல ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களும் அனைத்து வேலிடிட்டியிலும் வாய்ஸ் திட்டங்களை கொண்டுவரும்.

அப்போது, மினிமம் ரீசார்ஜ் விலை குறைக்கப்படும். ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ இன்று ஓப்பன் செய்யப்படுகிறது. இதனுடன் வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களும் வந்தால், அது அந்த நிறுவனத்துக்கு பெரிய பலமாக இருக்கும். ஆகவே, இன்று ஜியோவின் புதிய வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
TRAI New Rules Effective Today October 21 Airtel Jio Vi To Offer Voice Only Plans in All Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X