கேபிள்/ டிடிஹெச் கட்டணங்களை மாற்றிய டிராய்: சரியான சலுகை.! இன்ப அதிர்ச்சியில் மக்கள்.!
டிராய் அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்த டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய கட்டண முறைகளின் கீழ் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் தற்போது
கணிசமாக குறைந்துள்ளன.

டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி
அதாவது டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஸ் டிவி, d2h அல்லது சன் டைரக்ட் ஆகிய டிடிஹெச் கனெக்ஷன்வைத்திருக்கும் வாடிக்ககையாளர்கள் இதன் மூலம் அதிகப்பயன் அடைந்துள்ளனர். இதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

200 சேனல்கள் கிடைக்கும்
இப்போது வந்துள்ள புதிய விதிமுறையின் அடிப்படையில் மாதம் 130 ரூபாய் கட்டணத்தில் 200 சேனல்கள் கிடைக்கும்.முன்னதாக 130 ரூபாய்க்கு வெறும் 100 சேனல்கள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்ததக்கது.

25ரூபாய் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும்
மேலும் ஒவ்வொரு 20 கூடுதல் சேனல்களுக்கும், நீங்கள் 25ரூபாய் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும். டிஷ் டிவி,d2h பயனாளர்கள் 200 சேனல்களுக்கு 153.40 ரூபாய் செலுத்தினால் மட்டுமே போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒவ்வொரு கூடுதல் 10 சேனல்களுக்கும் 10 ரூபாய் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஸ்கை
குறிப்பாக டாடா ஸ்கை பயனாளர்கள் முதல் 200எஸ்டி சேனல்களுக்கு 153.40 ரூபாயும் கூடுதல் சேனல்களுக்கு மாதம் 188.80 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2எஸ்டி சேனல்கள்
பின்பு 2எஸ்டி சேனல்கள் இணைத்ததுதான் ஒரு ஹெச்டி சேனலாக மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இப்போது இந்த சிக்கல்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.

டிராய் அமைப்பின் முக்கிய நோக்கம் சந்தாதாரர்களுக்கு அவர்கள் பார்க்க விரும்பும் சேனல்கள் பற்றி சுதந்திரம் அளிப்பதும்இ எம்.ஆர்.பி விலையில் அந்த சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்துவது நோக்கமாகும்.


Click it and Unblock the Notifications