BSNL, Jio, Airtel, Vi-க்கு பறந்த TRAI உத்தரவு.. ரூ.10 ரீசார்ஜ்.. 365 நாள் வேலிடிட்டி அமலுக்கு வரணும்.. அதிரடி!
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) இந்தியாவில் உள்ள 150 கோடிக்கும் அதிகமான மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் பயன்பெறும் வகையில், 10 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் STV திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டுமென்று ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் உடனே பின்பற்ற வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இது எப்போதும் நடைமுறைக்கு வரும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) கடந்த 2024 டிசம்பரில் தொலைத்தொடர்பு பயனர்களுக்கான புதிய விதிகளை TRAI கொண்டு வந்தது. குறிப்பாக, இதில் 2ஜி (2G) பயனர்களுக்கு சிக்கனமான ரீசார்ஜ் திட்டங்களை இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டுமென்று TRAI உத்தரவிட்டது. அதேபோல், டேட்டா நன்மை இல்லாத வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS நன்மையை வழங்கும் திட்டங்களை டெலிகாம்கள் வழங்கவேண்டுமென்றும் உத்தரவிட்டது.

BSNL, Jio, Airtel, Vi-க்கு பறந்த TRAI உத்தரவு:
இந்த புதிய விதிமுறைகளை அணைத்து டெலிகாம் ஆப்பரேட்டர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்று TRAI கண்டிப்புடன் தெரிவித்தது. ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை ரூ.10 தொடக்க விலையில் கிடைக்கும் டாப்-அப் வவுச்சர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. அதேபோல், ஆன்லைன் ரீசார்ஜ்களுக்கான அதிகரித்து வரும் விருப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக, கலர் கோடு கொண்ட பிஸிக்கல் ரீசார்ஜ் முறையை அகற்றவும் TRAI முடிவு செய்துள்ளது.
மற்றொரு முக்கிய விதியாக ஸ்பெஷல் டாரிப் வவுச்சர்களின் வேலிடிட்டியையும் 90 நாட்களில் இருந்து 365 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும் என்று TRAI உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றம் மக்களுக்கு குறைந்த செலவில் நீண்ட நாள் ரீசார்ஜ் வேலிடிட்டியை வழங்க உதவும். இதன் மூலம் பயனர்களின் சிம் கார்டை செயல்பாட்டில் வைத்திருக்க அதிக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படமாட்டார்கள் என்று TRAI கூறியுள்ளது.
ரூ.10 ரீசார்ஜ்.. 365 நாள் வேலிடிட்டி அமலுக்கு வரணும் கண்டிப்புடன் சொன்ன TRAI:
அதேபோல், டேட்டா சேவைகள் தேவையில்லாத 2G பியூச்சர் போன் பயனர்களுக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாய்ஸ் மற்றும் SMS ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் உருவாக்கி, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரவேண்டுமென்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்சமயம், இந்த பியூச்சர் போன் பயனர்களுக்கு டேட்டா தேவையில்லாத போதிலும், டேட்டா அடங்கிய திட்டங்களை விலை அதிகமாக கொடுத்து ரீசார்ஜ் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
TRAI-யின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இணக்கமான ரீசார்ஜ் திட்டங்களை வெளியிட இன்னும் சில வாரங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற எந்தவித அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் டெலிகாம் நிறுவனங்கள் சந்தைக்குள் கொண்டுவரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








