Home
News

எடுத்தேன் பாரு ஓட்டம்.. BSNL, Vodafone Idea-வை கிழித்து தொங்கவிட்ட TRAI ரிப்போர்ட்!

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) சமீபத்திய ரிப்போர்ட் ஆனது பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) சேவைகளை கிழித்து தொங்கவிடும் புள்ளிவிவரங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளது.

"எடுத்தேன் பாரு ஓட்டம்" என்கிறபடியாக பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா சேவைகளில் இருந்து வெளியேறிய கஸ்டமர்கள் எண்ணிக்கை, கூடவே ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் நிலை, எம்என்டிஎல் உடன் சேர்த்து இந்தியாவின் 5 டெலிகாம் நிறுவனங்களின் சந்தை பங்கு என.. டிராய் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை அனைத்து தரவுகளையும் வெளிப்படுத்துகிறது.

BSNL, Vodafone Idea-வை கிழித்து தொங்கவிட்ட TRAI ரிப்போர்ட்!

ஜூன் 30, 2025 நிலவரப்படி, இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை இரண்டுமே புதிய வயர்லெஸ் சந்தாதாரர்களை பெற்றுளளன. மறுகையில் உள்ள வோடபோன் ஐடியா (விஐ) மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவைகள் தங்கள் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளன என்று டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது

மே 2025 இறுதியில் 1161.03 மில்லியனாக இருந்த மொத்த வயர்லெஸ் (மொபைல்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூன் 2025 இறுதியில் 1163.03 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஜூன் 2025 இறுதியில் 0.17 சதவீத மாதாந்திர வளர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல், மொத்த வயர்லெஸ் (மொபைல் + 5ஜி எப்டபுள்யூஏ) சந்தாதாரர்கள் எண்ணிகை ஆனது மே 2025 இறுதியில் 1168.42 மில்லியனில் இருந்து ஜூன் 2025 இறுதியில் 1170.88 மில்லியனாக அதிகரித்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.21 சதவீதமாக உள்ளது.

5ஜி எப்டபுள்யூஏ சந்தாதாரர்கள்: மொத்த வயர்லெஸ் (5ஜி எப்டபுள்யூஏ) சந்தாதாரர்களின் எண்ணிக்கை, மே 2025 இறுதியில் 7.40 மில்லியனிலிருந்து ஜூன் 2025 இறுதியில் 7.85 மில்லியனாக அதிகரித்துள்ளனர், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் முறையே 4.73 மில்லியன் மற்றும் 3.12 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

ஜூன் 2025 நிலவரப்படி, பாரதி ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி எப்டபுள்யூஏ சந்தாதாரர் தளத்தில் 1,742,211 சந்தாதாரர்களை கொண்டுள்ளது; இதில் புதிதாக சேர்க்கப்பட்டது 201,781 ஆகும். இதேபோல ரிலையன்ஸ் ஜியோ 6,108,140 சந்தாதாரர்களை கொண்டுள்ளது; புதிதாக சேர்க்கப்பட்டது 253,201 ஆகும். மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7,850,351 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஜியோவிலிருந்து மட்டும் 3,118,616 கிராமப்புற சந்தாதாரர்கள் உள்ளனர்.

வயர்லெஸ் சந்தாதாரர்களின் சேர்ப்பு மற்றும் இழப்பு: பாரதி ஏர்டெல் 763,482 (0.76 மில்லியன்) வயர்லெஸ் சந்தாதாரர்களை சேர்த்தது, அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ 1,912,780 (1.91 மில்லியன்) சந்தாதாரர்களை சேர்த்தது.

இதற்கிடையில், வோடபோன் ஐடியா அதே காலகட்டத்தில் 217,816 வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் ஆன (அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் நிறுவனங்கள் ஆன) பிஎஸ்என்எல் 305,766 வயர்லெஸ் சந்தாதாரர்களையும், எம்டிஎன்எல் 152,657 சந்தாதாரர்களையும் இழந்துள்ளன.

வயர்லெஸ் ஆபரேட்டர்களின் சந்தைப் பங்கு: ஜூன் 30, 2025 நிலவரப்படி, தனியார் அணுகல் சேவை வழங்குநர்கள் (ஜியோ, ஏர்டெல், விஐ) வயர்லெஸ் (மொபைல்) சந்தாதாரர்களில் 92.20 சதவீத சந்தைப் பங்கை கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இரண்டு பொதுத்துறை சேவை வழங்குநர்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்என்டிஎல் ஆகியவைகள் இணைந்து 7.80 சதவீத சந்தைப் பங்கை மட்டுமே கொண்டிருந்தன.

இதன் பொருள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 477.02 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களுடன் 41.01 சதவீத சந்தைப் பங்கையும், பாரதி ஏர்டெல் நிறுவனமானது 391.01 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களுடன் 33.62 சதவீத சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனமானது 204.22 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களுடன் 17.56 சதவீத சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது

இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனமானது 90.46 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களுடன் 7.78 சதவீத சந்தைப் பங்கையும், எம்என்டிஎல் நிறுவனமானது 0.31 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களுடன் 0.03 சதவீத சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TRAI New Report Shows How Much Customers BSNL Vodafone Lost Jio Airtel Gain in June 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X