புது ரூல்ஸ்.. டிச.11 முதல் அமல்.. இனி SIM கார்டுல படாதபாடு.. Jio, Airtel, Vi-க்கு மாற்றம்.. TRAI வச்சுருச்சு!
சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முக்கியமான நாளாக இருக்க போகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) - டிராய் (TRAI) ஆனது மெசேஜ் டிரேசபிலிட்டியை (Message Traceability) விதிகளை அமலுக்கு கொண்டு வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் மெசேஜ்களில் டிராய் விதிகள் மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது. இந்த புதிய மெசேஜ் டிரேசபிலிட்டி விதிகளின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பேங்க் ஆப்களில் பணப்பரிவர்த்தனைகள் செய்ய மெசேஜ் மூலம் ஓடிபி (OTP) நம்பர் அனுப்பப்படுகிறது. சோஷியல் மீடியா மற்றும் ஓடிடி ஆப்களிலும் மெசேஜ் மூலம் ஓடிபி வெரிபிகேஷன் செய்யப்படுகிறது. அதேபோல கடன் கொடுக்கும் ஆப்களும் ஓடிபி அனுப்பியே வெரிபிகேஷன் செய்கிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் வணிக ரீதியாக மெசேஜ்களை அனுப்புகின்றன. ஆகவே, கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றன.

ஏனென்றால், மெசேஜ் மூலம் ஓடிபிகளை அனுப்பி பண மோசடி நடக்கின்றன. ஆகவே, வணிக ரீதியாக ஓடிபிகளை கேட்டு மெசேஜ் அனுப்பும்போது, அந்த நிறுவனங்கள் டெலிகாம் நிறுவனங்களிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருக்க வேண்டும். அதேபோல கண்டறியக்கூடியதாக (Traceable) இருக்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, வணிக ரீதியான மெசேஜ்களை அனுப்பும் முதன்மை நிறுவனம் (Principal Entity) மற்றும் டெலிமார்கெட்டர் (Telemarketer) செயின்களின் விவரங்கள் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனங்களிடம் பதிவு செய்யப்பட்ட வேண்டி இருக்கிறது. இல்லையென்றால் படாதபாடுதான். இந்த பதிவு நடைமுறைக்கு டிராய் அவகாசம் கொடுத்தது. நவம்பர் 1ஆம் தேதியில் அமலுக்கு கொண்டுவர இருந்தது.
ஆனால், வணிக ரீதியான மெசேஜ்களை அனுப்பும் நிறுவனங்கள் கால அவகாசம் கேட்டதால், அந்த விதிகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல் செய்ய திட்டமிடப்பட்டது. ஆகவே, நவம்பர் 30ஆம் தேதிக்குள் முதன்மை நிறுவனம் மற்றும் டெலிமார்கெட்டர் செயின்களின் விவரங்கள் டெலிகாம் நிறுவங்களிடம் பதிவு செய்யப்பட வேண்டும். அவை கண்டறியக்கூடியதாக இருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டது.
இந்த கால அவகாசத்தில்தான் பேங்குகள் மற்றும் ஆதார் மூலம் அனுப்பப்படும் ஓடிபிகள் டிசம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு வராது என்று தகவல் வெளியாகியது. ஆனால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, அதற்கு மறுப்பு தெரிவித்து பேங்க் ஓடிபி மற்றும் ஆதார் ஓடிபிக்கு எந்தவித சிக்கலும் இருக்காது. அவை வழக்கம் போல கஸ்டமர்களுக்கு அனுப்பப்படும் என்று விளக்கமளித்தது.
இந்த நேரத்தில்தான் மீண்டும் மெசேஜ் டிரேசபிலிட்டி விதிகள் டிசம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டன. இதன் மூலம் வணிக ரீதியான மெசேஜ்களை அனுப்பும் முதன்மை நிறுவனங்கள் மற்றும் டெலிமார்கெட்டர் நிறுவனங்களுக்கு கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டன. இந்த அவகாசம் நாளையுடன் முடிகிறது. ஆகவே, டிசம்பர் 11ஆம் தேதி முதல் மெசேஜ் டிரேசபிலிட்டி விதிகள் அமலாகின்றன.
டிசம்பர் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதன்மை நிறுவனங்கள் டிரேசபிலிட்டி விவரங்களை பதிவு செய்துவிட்டன. ஆகவே, இந்த முறை விதிகள் கட்டாயம் அமலாக வாய்ப்புள்ளது. இந்த விதிகள் மட்டுமல்லாமல், டிசம்பரில் ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்திருக்கும் மக்களுக்கும் முக்கிய மாற்றம் வர இருக்கிறது. இலவசமாக விவரங்களை அப்டேட் செய்ய கொடுக்கப்பட்ட காலஅவகாசம் முடிய இருக்கிறது.
ஆகவே, டிசம்பர் 14ஆம் தேதிக்குள் உங்களது ஆதார் கார்டில் ஏதாவது விவரங்களை மாற்ற வேண்டுமானால், இலவசமாக மாற்றி கொள்ளுங்கள். இல்லையென்றால், அதற்கு பிறகு கட்டணம் செலுத்தி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். ஆகவே, இந்த மெசேஜ் டிரேசபிலிட்டி மற்றும் ஆதார் விதிகள் அடுத்தடுத்து நடக்க இருக்கின்றன. இது சிம் கார்டு மற்றும் ஆதார் வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் முக்கியமாகிறது.


Click it and Unblock the Notifications








